Posts

Showing posts with the label அனுபவம்

ஜாக்கியும்.... நானும்.....

Image
நாய்களுடனான என் உறவு ஹிட்லருக்கும் யூதனுக்கும் உள்ள உறவை போன்றது.   எந்த காலத்திலும் ஒத்து போனதே இல்லை. நாய்கள் மீதிருந்த  அச்சமும் வெறுப்பும் சிறு வயதில், ஒரு முட்டு சந்தில் என்னை துவட்டி எடுத்த அந்த குறிப்பிட்ட கருப்பு நாயிடம் இருந்து பிறந்திருக்கலாம். சிவனே என்றுதான் படுத்துக்கொண்டிருந்தது. பதின்ம வயதின் குறும்புகள் என்  மூளையில் பிறந்து கால் வழியாய் வெளியேறி அதன் வாலை மிதிக்க, கும்பகர்ணனின்   தூக்கத்தை  கலைத்தால் கோபத்தில் எப்படி வெறித்தனமாய்    பாய்வானோ அதே வேகத்தில் என் தொடையே குறி வைத்து பாய்ந்து கடித்து குதறி தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டது.  இப்போது இருப்பது போல ஒற்றை ஊசி வைத்தியம் எல்லாம் அப்போது இல்லை.  குன்னூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருந்துகள் வாங்கி வந்து தினம் ஒரு ஊசி என என் குடும்ப மருத்துவர் பதினெட்டு நாட்கள் என் தொப்புளை துளைத்தார். ஒவ்வொரு முறை ஊசி ஏற்றும் போதும் நாய்கள் மீதான என் வன்மம் என் மனசுக்குள் ஏற ஆரம்பிக்க அதிலிருந்து நாய்கள் என்றாலே லத்திகா பட போஸ்டரை கண்டது போல தெறித்து வில...

பரமுவுக்கு கல்யாணம்

Image
 பரமு என் உயிர் நண்பன். சில நேரங்களில், என்  உயிர் எடுக்கும் நண்பனும் கூட...      உலகில் எல்லோருக்கும் பொதுவானது நட்பு.  அதன் அளவீடுகள் எந்த எல்லைகளுக்கும் உட்படாதவை. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த மனிதர்களுக்குள்  உருவாகும், ஈர்ப்பு, அக்கறை, ஒத்த அலைவரிசை, ரசனை, அன்பு, பாசம், நேசம்  இன்னும் என்னனென்னவோ..இவை அத்தனைக்கும் பிள்ளையார் சுழி போடுவது நட்புதான். காதல் கூட அதன் தொடர்ச்சியாய் பின்னால் வருவதுதான்.ஒரு நல்ல நட்புதான் காதலாய் மாறும் என்பது என் நம்பிக்கை.  நல்ல நட்பு நம்மை பக்குவபடுத்துகிறது... வண்டியில் போய்க்கொண்டிருக்கிறோம்.... எதிர்பாரா விதமாக எதிரில் வரும் வண்டியோடு சிறு உரசல். கோபம் என்னும் சாத்தான் உடனே எழுந்தாலும், கொஞ்சம் அதை அடக்கி நட்போடு கொஞ்சம் புன்முறுவல் செய்து பாருங்கள்... அதற்க்கு கிடைக்கும் பலனே வேறு. யாரும் யாரோடும் சண்டை போட விரும்புவதில்லை. சிநேகமான புன்னகையும், நட்பு பாராட்டுதலும் மிருகமாக இருப்பவனை மனிதனாக்குகிறது... தனக்கென மட்டும் இல்லாமல் தன்னை சுற்றி இருப்பவரை பற்றியும் அக்கறை கொள்ளும் போது அந்த மனிதன் கட...

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

Image
படிக்கின்ற வயதில்,  பிட்டு படம் பார்ப்பதற்கு  நெஞ்சில் அசாத்திய தைரியமும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் நிச்சயம் வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இல்லையென்றால் கூட பிட்டு பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காது. தியேட்டரில் நல்ல பிட்டு ஓடுகிறது என்கின்ற செவி வழி செய்தி வந்தவுடனேயே ஆர்வக்கோளாறில் உடனே கிளம்பிவிடக்கூடாது. ஏனென்றால் அதே செய்தி நம் சொந்த பந்தங்களுக்கும் புயல் வேகத்தில்  ரீச் ஆகியிருக்கும். தியேட்டர் வாசலிலோ, டிக்கெட் கவுன்டரிலோ, நம் சித்தப்பாவையோ, அப்பாவின் நண்பரையோ பார்த்து அதிர்ந்து அசடு வழிவது, ஒருவரிடம் ஒரு லட்சம் கடன் கேட்டு அசடு வழிவதை விட அசிங்கமானது அந்த காலங்களில்.    எவ்வளவோ திட்டமிட்டும், முகம் மறைத்தும், தைரியம் கொண்டு  சம்பவ இடத்தை நெருங்கினாலும், பயம் ஒரு நாய்  குட்டியே போல நம் கால்களுக்குள்லேயே சுற்றிக்கொண்டிருக்கும்.  அதற்க்கு ஏற்றார் போல்,  தியேட்டர் வாசலை நெருங்கியதுமே, பக்கத்துக்கு வீட்டு ரங்குடு மாமா, தோள் தொட்டு திருப்பி, "எங்கடா இந்த பக்கம்?"  என்பார்.   "ப்ரெ...

நான் ஏன் தொடர் கொலைகாரன் ஆனேன்.... ?

Image
கவனிக்க : உயிர் வதை காப்பாளர்கள்  இந்த கட்டுரையே தவிர்ப்பது நலம்.  இரவு.... ரம்மியமானது.... பகலின் உஷ்ணத்தையும்... வியர்வை வீச்சுக்களையும் கடந்து வரும் இரவானது எல்லாருக்கும் பிடித்தமானது... எனக்கும்! ரகசியம் சொல்லும் காதலி போல் நிலா அருகில் இருக்க... இளையராஜாவோ, ரஹ்மானோ... இசையாய் செவி நுழைந்து மனம் தொட....அதை  தொடர்ந்து வரும் தூக்கமும் வண்ணங்களை பகுத்தறியமுடியாத கனவுகளும் ஒவ்வொருவருக்கும் வரம். கிட்டத்தட்ட  பூலோக சொர்க்கம்.எங்கேயோ கேட்கும் ரயில் ஓசை,  குளிர் நெருங்கும் போதெல்லாம் போர்வையில் ஒளிந்து கொண்டு கதகதப்பாகும் உடல், கண்களை உறுத்தாத இருள் என இரவு எப்போதுமே ஒரு கவிதை. தினம் தினம் புதிதாய் வாசிக்க தூண்டும் கவிதை.  அனால் இப்போதெல்லாம்... இரவு நெருங்க நெருங்க மனசில் சொல்ல முடியாத அச்சம், படபடப்பு, கிட்டத்தட்ட மரண பயத்திற்கு ஒப்பான பீதி... நான் உறக்கம் தொலைத்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றது... இந்த இடைப்பட்ட இரவுகளில் எத்தனை ரத்தம்.... எத்தனை வலிகள்... எத்தனை உடல்கள்.. சென்னை தனக்குள் இப்படி ஒரு கோர முகத்தை வைத்திருக்கும் என்று நான்  கனவிலும் ...

சென்னை விமான நிலையமும்.... சில மனிதர்களும்...

Image
ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங். சந்தானம் அனுபவித்து சொன்னாரோ இல்லையோ... ரொம்பவும் நிஜமான வார்த்தைகள்... நண்பனின் அண்ணனை வழி அனுப்பி வைப்பதற்காக விமான நிலையம் வரை சென்று வர வேண்டியதாய் இருந்தது.  அப்போது அங்கு பராக்கு பார்த்து கொண்டிருந்தபோது சுற்றிலும் நிகழ்ந்த சிற் சில விஷயங்களில் என்னை ஈர்த்தவை.  மனித உணர்வு மிக நுட்பமானது... பிரிவின் தருணங்களில்... அதுவும் மனதுக்கு பிடித்தவர் தன்னை விட்டு வெகுதூரம் செல்லும் பொழுதுகளில் அது கொடுக்கும் வலியும் அதன் பின்னான தனிமையின் நிழலும் மிகுந்த துயரம் நிறைந்தது... பொது இடங்களின் நாகரீகம் கருதி அதனை மனதினுள் அடக்கி வைக்கும் போது அதன் வலி இரு மடங்காகிறது...  கழுத்தில் உள்ள தாலி இன்னமுமே  மஞ்சள் காயாமல் புதிதாய் இருக்கிறது... புது சேலை.. புது நகைகள்... அந்த பெண்ணும் புதிதாய்  பிறந்தவள் போல... கடைசி மாதங்களில் அல்லது கடைசி வாரங்களில் அவள் புதிதாய் பெற்ற உறவும்.. புது அன்பின்... புது காதலின்..மிக புதிதான ஒரு அன்யோநியத்தை இவ்வளவு சீக்கிரம் இழக்க போகிறோம் என்கின்ற பரிதவிப்பு அந்த பெண்ணின்  விழிகளில் அப்பட்டமாய் வெளிப்...

வணக்கமுங்க.....

Image
வணக்கமுங்க.. இது என்னோட 100 வது பதிவு. நமக்கு புஸ்தகம் படிக்கிறதுன்னா ரொம்ப உசுருங்க. இந்த பொட்டி வந்ததுக்கப்புறம் தமிழ்ல படிக்க நெட்ல தொழாவும்  போதுதான் இந்த வலைபதிவுகள் (BLOGS ) கண்ணுல பட்டுச்சு. (ENGLISH ல படிக்க நமக்கு புடிக்காதுங்க.. ஏன்னா.. ENGLISH ல படிக்க நமக்கு தெரியாதுங்க..)  நமக்கு புடிச்ச விஷயங்களை நிறைய பேர் எழுதறதை பார்த்ததும் பச்சக்குன்னு மனசுல ஒட்டிக்கிச்சு..  ரொம்ப வருஷமா படிச்சுட்டு மட்டுமே இருந்தேன். ஒரு நாள் மல்லாக்க படுத்துட்டு வெட்டியா  யோசிச்சுட்டு இருக்கும்போது   தோனுச்சு.. ஏன் நாமளும் எழுத கூடாது ன்னு..  அது வரைக்கும் நான் டைரி மட்டும்தான் எழுதியிருக்கிறேன். அந்த தகுதி மட்டும் போதுமான்னு எனக்கு பயங்கர சந்தேகம். சரி ஒரு கை பார்க்கலாமுன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்.  அது பாருங்க, திடு திப்புன்னு நூறு பதிவு ஆய்டிச்சு, கோயம்பத்தூர்ல இருக்கிற வரைக்கும் பொட்டி தட்ட நிறைய நேரம் கெடச்சதுங்க... இப்ப சென்னை வந்த பிறகு சுத்தமா நேரம் கிடைக்க மாட்டேங்குதுங்க.. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்குங்களா...? அது மாதிரியே எதாவது ...

சென்னையும்.... தனிமையும்...

Image
  திங்கள் கிழமை அதிகாலை சென்னையில் வந்து இறங்கியபோது ஏற்பட்ட பிரமிப்பு..... எத்தனை எத்தனை மக்கள்... தினம் தினம் புதிது புதிதாய் வாய்ப்புகளை தேடி  வந்திறங்கும் லட்சகணக்கான பேரை  தாங்கிக்கொண்டு... இனிமேலும் வருபவரை வரவேற்க தயாராய் இருக்கும் சென்னை... வாழ்க்கையின்... வாழ்கையே வாழ்பவரின் ஒரு முக்கிய அடையாளம். அன்றே வேலையில் சேர்ந்தாயிற்று.... அறை பிடித்தாயிற்று.. எல்லாம் முடிந்தபின் ஒய்ந்து படுக்கையில் சாயும் போது.. தூக்கம் வரவில்லை.. அத்தனை நேரம் ஒளிந்து கிடந்த வீட்டு ஞாபகம் ஒரு மோசமான புயல் போல என் மொத்த இரவையும் அள்ளி சுருட்டிக்கொண்டு  போக.. தனிமையில்.. ஒரு வெறுமையில் அந்த நொடியில் துளிர்த்த கண்ணீர் எதை கொண்டும் ஈடு செய்ய இயலாதது. கோவையில்.. அண்ணா, அண்ணி, தம்பிகள், தங்கைகள் என ஏகப்பட்ட சொந்தங்களுக்கு மத்தியில் என் தினங்கள் பாட்டுக்களும் கேலி கூச்சல்களுமாய்.. சந்தோஷ தருணங்களாய் கடக்கும்.. ஆனால் இங்கு.... மேலே சுற்றும் மின் விசிறியே தவிர இப்போதைக்கு என்னுடன் பேச யாரும் இல்லை. அங்கு.. வீட்டில் எல்லோரும் தூங்கியபின் என் தம்பியும்.. தங்கையும்.. நானும் திருட்டு பூனைகள் போல ...

நட்பின் நண்பர்களுக்கு......

நட்பின் நண்பர்களுக்கு, இது வரை கோயம்பத்தூர் குழந்தையாய் இருக்கும் நான் இனிமேல் சென்னை குழந்தையாய் மாற போகிறேன். நான் டெல்லி சென்று பங்கேற்ற நேர்முக தேர்வில்,  தேர்வாகி சென்னையில் THE HANDLOOM & HANDICARFTS EXPORT CORPORATION OF INDIA வில் 13.09.10 முதல் பணி புரிய இருக்கிறேன். நான் டெல்லி செல்லும் போது நீங்கள் எனக்களித்த வாழ்த்துக்களும் நான் நேர்முக தேர்வில் வெற்றிபெற ஒரு காரணம். உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் பல. ஒரு சிறிய இடைவெளியில் மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன். சென்னையில் ஜாக்கி அண்ணா, அதிஷா சார், கேபிள் சார், லக்கி,  ஜெட்லி, ஜில்லு போன்ற பதிவர்களை சந்திக்க மிக ஆவலுடன் இருக்கிறேன்.  டெல்லி ராஜ குமாரிகள் தொடர்.. இனி சென்னையில் இருந்து தொடரும்.. விரைவில்..

உமா சங்கர் I.A.S

Image
  செய்கின்ற வேலைக்கு  நேர்மையாகவும், மனசாட்சிக்கு பயப்படுபவராகவும் இருக்க விரும்புபவரா நீங்கள். அப்படியானால் உங்களுக்கு அரசு உத்தியோகம் சரிபட்டு வராது. இரவு, பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்து, தேசிய அளவில் நல்ல  ரேங்கில் வந்து, இந்த நாட்டுக்கு தன்னால்  இயன்ற அளவு   ஏதேனும் நல்லது  செய்ய முயன்ற ஒரு IAS அதிகாரிக்கு  இப்போது கிடைத்திருப்பது தற்காலிக பணி நீக்கம். உண்மையான காரணங்கள் சத்தியமாக வெளி வர போவதில்லை. இதை பற்றிய நம் கேள்விகள் கொஞ்ச நாட்களில் எந்திரன் விளம்பர வெளிச்சங்களிலும், கிரிக்கெட் பரபரப்புகளிலும் நம்மால் மறக்கப்பட்டு விடும்.யார் எக்கேடு கெட்டு போனால் என்ன.. நம் வீட்டு குழாயில் தண்ணி வருகிறதா.. இரவானால் வீட்டில் பல்பு எரிகிறதா... அதுதான் நமக்கு முக்கியம். வாழ்க ஜனநாயகம்.

பதிவுலகில் நான் - தொடர் பதிவு

Image
நண்பர் வினோவிற்கு என் நன்றிகள் பல.. பதிவுலகில் நான் என்னும் தொடர் ரயில் பெட்டியில் எனக்கும் ஒரு இடம் கொடுத்ததற்காக...    1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? மனோ - A BABY FROM COIMBATORE ( சத்தியமா நான் குழந்தைதாங்க.. என் மனசில் .. என் சேஷ்டைகளில் )    2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? சாந்தாமணி(என் செல்ல அம்மா)  வச்சது மனோகரன். (அம்புட்டு அழகா இருப்பேனாம் சின்ன வயசுல.. இப்ப.... வேண்டாம் விடுங்க பொண்ணுக தொந்தரவு ஜாஸ்தி ஆயிடும்.) என் மாமா  என்னை ஸ்கூல்ல  சேர்க்கும் போது மனோகர் ஆச்சு.  அது அப்படியே நண்பர்கள் வட்டத்திலே  சுருங்கி மனோ ஆயிடிச்சு.   3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி? அது ஒரு சரித்திர பிரசித்தி பெற்ற நிகழ்வு. அன்றைய தினம் ஆயிரம் குறிஞ்சி மலர்கள் பூத்து, பெருமழை பெய்து, வானவில் ஒளிர்ந்தது. பயபடாதீங்க.. அப்பிடீன்னு எல்லாம் நான் கதை விட மாட்டேன்    வலையுலகம் ஒரு கடல். எடுத்த எடுப்புல நான் தொபுக்கடிர்னு கு...

INCEPTION ( கனவு வேட்டை) - ஒரு அனுபவம்

Image
மன்னிக்கவும், இது கனவு வேட்டை பற்றிய விமர்சனம் அல்ல. படம் பார்ப்பதற்கு முன்... கோபு அண்ணா : (மொபைலில்)  டேய் மனோ, என்ன பண்றே.. நான் : அண்ணா, கனவு வேட்டைன்னு ஒரு படம். பட்டையே கிளப்புதாம். நானும் குட்டியானும் கிளம்பிட்டோம். நீ வர்றியா.. கோபு அண்ணா : இல்லடா... இப்பதான் வேலை முடிஞ்சிது.. கொஞ்ச நேரம் தூங்கலாம்னு பார்க்கிறேன். நான் : தூங்கறதா இப்ப முக்கியம். இது ஒரு அட்டகாசமான, வினோதமான படம்.  மிஸ் பண்ணவே கூடாது. அப்புறம் வாழ்நாள் முழுக்க இந்த படத்தை மிஸ் பண்ணிட்டேமேன்னு வருத்தபடுவே..  படம் பார்த்தா மிரண்டு போய்டுவ... வா... கோபு அண்ணா :என்னடா இப்படி பயமுறுத்தறீங்க.. சரி வீட்ல சொல்லிட்டு வரேன். இடையில் A .P யுடன் போனில் : டேய் மனோ பேசறேன், கனவு வேட்டை படத்துக்கு போறோம்.  வரியா..? AP  : படத்துல பிட்டு வருமா..? நான் : டேய் மூதேவி, இது ஒரு SCI -FICTION மூவி. அதெல்லாம் வராது. AP      : அப்ப நான் வரலே.. நான் :  சரி வராதே. தியேட்டர் செல்லும் வழியில்..  கோபு அண்ணா: டேய், எந்த தியேட்டர் ? குட்டியான் : M.P.S.- மங்கலம் ரோட்ல.. கோபு அண்ணா...

நண்பனை இழந்து விட்டேன்.

Image
 நான்கு வருட சிநேகிதம் எங்களுடையது....பால்ய கால நண்பர்களை விடவும் மிக குறுகிய காலத்தில் என்னுடன் நெருக்கமானவன்,  எப்போதும் என்னுடன்  ஒட்டிக்கொண்டு திரிவான்.  பெற்றோர் வைத்த பெயர் வேறெனினும் நான் எப்போதும்  உரிமையாய் அழைக்கும் பெயர் "டேய் மாப்பு ".  நிறைய வித்தைகள் செய்வான்.. என் காதலுக்கு தூது போவான்,  என் தனிமை பொழுதுகளை இசையால் நிறைப்பான், சிறு சிறு  விளையாட்டுக்களால் என்னை உற்சாகப்படுத்துவான். எனக்கான பல விஷயங்களை தன் ஞாபக செல்களில் வைத்துகொண்டு தேவையான பொழுதுகளில் நினைவூட்டுபவன்  இப்பவும் நம்ப முடியவில்லை அவனை இழந்து விட்டேன் என்பதை.. என் எல்லா சுக துக்கங்களிலும் என்னோடு பயணிக்கும் அவனை போன்ற ஒரு நண்பன் உங்கள் எல்லோருக்கும் இருக்க கூடும். சொல்ல மறந்து விட்டேன்.. அவன் பெற்றோர் அவனுக்கு வைத்த பெயர் NOKIA 6233 . ரொம்பவுமே நெருங்கி பழகிய ஒன்றை ஒரு விநாடி நேரத்தில் இழப்பதன் வலி சற்று கொடுமையான விஷயமே. எப்படி அவனை தவற விட்டேன் என்பது இது கணமும் விளங்கவில்லை, ஒரு இரண்டு நிமிடங்கள் கூட இருக்காது.. அவன் என்னுடன் இல்லை என்பதை நான் உணர.. உடனே தொடர...

தமிழ் செம்மொழி மாநாடு

Image
மொத்த தமிழ்நாட்டின் பார்வையும் இப்போது கோயம்புத்தூர் நோக்கி... உலக தமிழ் செம்மொழி மாநாடு நாளை (23.06.10) ஆரவாரத்துடன் கோவையில் துவங்குகிறது. நாளை துவங்கும் மாநாடு ஞாயிறு (27.06.10) வரையிலும் களை கட்ட இருக்கிறது.. பல்வேறு கருத்தாய்வுகள், பட்டி மன்றங்கள்..கலை நிகழ்சிகள்.. என தமிழ் கடலில் தொபுக்கடிர் என குதித்து நீச்சலடிக்க அன்புடன் அழைக்கிறோம்.. வாருங்கள் நண்பர்களே.... கொண்டாடுவோம் தமிழை...

லூஸ்....

Image
லூஸ்... இப்படி  சொல்லித்தான் இதுவரையும் அழைத்திருக்கிறேன்.  எனக்கும் சரி அவளுக்கும் சரி நிஜ பெயர் சொல்லி அழைப்பது இருவருக்குமே பிடிக்காது. பட்ட படிப்பு முடித்திருந்தாலும் ஒரு குழந்தை போலதான் இருக்கும் அவளுடைய நடவடிக்கைகள்.... என் உடன் பிறக்கவில்லையே தவிர.. என் உயிரிலும் மேலான என் தங்கை... என் மீது அவள் செலுத்திய அன்பும், அக்கறையும், ஒரு தாயின் அன்பு போல.. விலை மதிப்பற்றது.. எந்நாளும்... பைக்கில் வேகமாக சென்றால் மிகவும் பயப்படுபவள்.. கண்களை மூடிக்கொண்டு  என் தோள்களை இறுக்கி பிடித்து, கடவுளை துணைக்கு அழைப்பாள். அந்த கவிதை சந்தோஷத்துக்காகவே  ஓவொரு முறையும் த்ராட்டிலை முறுக்குவேன்... காப்பிக்கோப்பையில் ஆரம்பித்து DAIRY  MILK  சாக்லேட் பட்டைகள் வரை பகிர்ந்து உண்ணும் எங்களது அன்பின் வெளிப்பாடுகள் எங்களை வளர்ந்த குழந்தைகளாய் மற்றவர்களுக்கு அடையாளம் காட்டினாலும் உண்மையில் எனக்கு அவளும், அவளுக்கு நானும் குழந்தையே....! என் மீதான அவளின் உரிமை.. என்னை யாரிடத்தும் விட்டு தராத அவளின் அன்புதான் நான் ஈட்டியதிலேய விலை மதிப்பற்ற சொத்து.. இப்போதும்.. எப்போதும்..  ...

நொறுக்கு தீனி - 2

Image
 S.S.L.C தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன... வழக்கம் போல பெண் பிள்ளைகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்றாலும் நம்ம பசங்களும் சரி நிகராக வருவார்கள் என நம்புவோமாக.. ஆண் பிள்ளைகளுக்கு படிப்பதை தவிர நிறைய கடமைகள்  உண்டு. கிரிக்கெட், நண்பர்கள் வட்டம், சினிமா, என்று  பல பொறுப்புகள் இருக்கிறது.  இதை எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டே பசங்க  படிப்பதை நாம் பாராட்ட வேண்டும். அதை விட்டு விட்டு பெண் பிள்ளைகள் படிப்பதோடு ஒப்பிட கூடாது...அவர்கள் படிக்கும் முறையே வேறு.   இரு பாலருக்குமே என் வாழ்த்துக்கள். தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்வதில் இருக்கும் த்ரில்லும், பயமும் எப்போதுமே ஒரு  சுகமான  அனுபவம்தான். இப்போது போல இன்டர்நெட் சமாச்சாரங்கள் அப்போது இல்லை. இப்போது  நம்பரை டைப்பி ENTER கொடுத்தவுடன் மொத்த ஜாதகமும் வந்து விடுகிறது. நான் பத்தாவது படிக்கும் போது, நியூஸ் பேப்பரில்  எண்களை துழாவி, நம் நம்பரை கண்டதும் வரும் ஒரு உற்சாகம் சொல்லில் அடங்காதது. அதே போல மதிப்பெண் வாங்குவதற்கு பெற்றோருடன் வரிசையில்  நிற்கும் போது ஒரு பயம் ...

நொறுக்கு தீனி

Image
பார்த்ததும் - படித்ததும் - கேட்டதும்  ஜான் ஷெப்பர்ட் பாரோன்    லண்டனில்  காலமாகி விட்டார். யோசிக்காமல் அவருக்கு ஒரு சல்யூட் அடித்துவிடுங்கள். ஏன், எதற்கு என்று கேட்பவர்களுக்கு....  இவர் கண்டுபிடித்த ATM மெஷின் தான் நேரம், காலம் பார்க்காமல் நமக்கு பணம் எடுக்க இப்போது உதவியாய் இருக்கிறது.  நினைத்து பாருங்கள், ATM  இல்லாத தினங்களில் வங்கிகளில் கால் கடுக்க நின்றதும், விடுமுறை தினங்களிலோ,  தீடிர் தேவைக்காகவோ பணத்துக்காக அல்லாடிய பொழுதுகளும்...இந்த  மனிதருக்கும் அந்த காலத்தில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் நினைத்தாராம்.... சாக்லேட்டுகளை  கொட்டும் மெஷின் போல பணம் கொட்டும் மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என...  அதன் பின்னர் முழு ஈடுபாட்டுடன் உழைத்து இவர் கண்டுபிடித்த ATM மெஷின் முதன் முதலில் ஜூன் 27 1967 லில்  லண்டன் BARCLAYS  வங்கியில் நிறுவப்பட்டது.  அப்படியே, அவர் மனைவிக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லிவிடுங்கள். ஏனென்றால் ஜான் முதலில் ATM  பாஸ் வோர்டை 6  இலக்க  எண்களாகத்தான்  தான் உருவா...

திருமலை திருப்பதி - ஒரு பரவச அனுபவம்

Image
  இரண்டு நாள் விடுமுறையில் பெருமாளை சேவிக்க திருப்பதி  சென்று வந்தது  பல்வேறு அதிர்வலைகளை மனசுக்குள் ஏற்படுத்தியது.  பெருமாளை வழிபட எத்தனையோ கோவில்கள் உண்டென்றாலும் திருப்பதி சம்திங் ஸ்பெஷல்.  பெருமாளுக்கும் நமக்கும் ஒரு நேரடி தொடர்பை ஏற்படுத்தும் இடம் போல விளங்குவதுதான் இதன் சிறப்பு. வருடம் முழுதும் பெருமாள் இங்கு படு பிஸியாக இருக்கிறார். ஆரம்ப காலத்தில் தரிசனம் செய்யும் முறைகளிலிருந்து இப்போது நிறையவே நவீன படுத்தப்பட்டு இருக்கிறது. நம்முடைய ஊரிலிருந்தே தரிசனம் செய்யும் நேரத்தை முன் பதிவு செய்து விட்டு வரலாம். (TTD- THIRUMALAI TIRUPATHI DEVASATANAMS  முக்கிய ஊர்களில்  இந்த  சேவையினை வழங்குகிறது. )  இணையத்தில் கூட  முன் பதிவு செய்யலாம். அப்படி இருந்தும் நாள் முழுக்க காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் கூட்டம் இங்கு மிக அதிகம். நாங்கள் சென்ற இந்த இரண்டு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் திருமலையில், ஓய்வெடுக்க அறைகள் கிடைக்காமல்,  கோவிலை சுற்றியுள்ள  பாதைகளிலும், மரத்தடிகளிலும்,  தங்கி  உறங்குவதை பார்க்கு...

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....

Image
பழனி -  தமிழ் கடவுள் குடி கொண்டிருக்கும் புண்ணிய  ஸ்தலம்.  தமிழ்நாட்டின் முக்கிய அடையாளம். வருடத்திற்கு 70 லட்சம் மக்கள் வந்து வழிபடும் இடத்தில் பக்தர்களிடம் வழிப்பறி கொள்ளை போல நூதன முறைகளில் பணம் பிடுங்கும் செயல்கள் இங்கு அதிகம். நமக்கு ஒரு கஷ்டம்னா, மன நிம்மதிக்காக  கோயிலுக்கு போறோம். ஆனா அங்க போனா...  ஊர்ல இருக்கிற அத்தனை கஷ்டமும் சுத்தி நின்னு டான்ஸ் ஆடினா எப்பிடி இருக்கும். அந்த நிலைமைதான்.. இங்கு வர்றவங்களுக்கு... முடிந்த வரை எச்சரிக்கையாக இருக்க சில குறிப்புகள். வழிப்பறி # 1   எதாவது ஒரு கடையில போய் பூஜை சமான் எல்லாம் வாங்கறீங்க, எல்லா பொருட்களையும் PACK  பண்ணி கொடுத்துட்டு, 150 ரூபாய் சார் என்று சொல்லியபடியே அனுமார் வால் போல நீளமான ஒரு லிஸ்டை கொடுப்பார். லிஸ்டை CHECK  பண்ணாமல் பணம் கொடுத்தால்.. பணம் போயே போச்.. ஒருவேளை நீங்கள் லிஸ்டை CHECK செய்தால்.. உங்களுக்கு உங்கள் தமிழ் மொழியே மறந்து போக கூடும். சாம்பிளுக்கு ஒரு லிஸ்ட்.  பூ         -   XXXXX  பழம்   -   XXXXX  சூடம் ...

காதலாகி...கசிந்துருகி...

Image
ஒரு சிறுவன் இருந்தான்... யதார்த்தமானவன் இயல்பை விட்டுக்கொடுக்கதவன்  அதிகம் கவலை பட தெரியாதவன்... சந்தோஷமாகத்தான் இருந்தான்.. வெள்ளை சிறகுடன் தேவதை சிறுமி ஒருவள் வந்தாள் என்ன வரம் வேண்டும் ? கேள் ..! என்றாள்.. எனக்கென்ன தேவை? தெரியவில்லை.. என்றான்.. சிறுமி சிரித்தாள் அவன் தலை கலைத்தாள் நிலா ரசிக்க சொல்லி கொடுத்தாள் பட்டாம் பூச்சியுடன் விளையாட பழக்கப்படுத்தினாள்  உலகின் நீள அகலம் உணர்த்தினாள் அவன் வயது குறைத்து குழந்தையாக்கினாள்  அவனின் இன்னொரு தாயானாள் அன்பை குழைத்து பசி மறக்க செய்தாள் அக்கறை மிகுந்தாள் தினம் அவனோடு விளையாடினாள் அவன் கடவுளால் ஆசிர்வதிக்கபட்டதை போலானான்.  அர்த்தம் உணர்ந்து முழுசாய் சிரித்தான்.  மழை பெய்தது.  அவன் கண்களில் உலகம் அழகானது.  சிறுமி ஒருநாள் வரவில்லை.  முதலாய் உடல் நடுக்கம் உணர்ந்தான்.  ஒருமுறை சரியாய் பேசவில்லை.  கோபம் என்கின்ற சாத்தான் அவனுள் வேதம் ஓதினான்.  உன்னோடு "கா" ,  'இனி பேசாதே' என்றான். தேவதை சிறுமி கன்னம் கிள்ளி செல்லக்  கொட்டினாள் எல்லாம் மறந்தான்... தன்ன...