Posts

Showing posts from August, 2012

அட்ட கத்தி - விமர்சனம்

Image
ஒரு பெண்ணின் மனசு போலத்தான் இந்த படமும்.....  நிறைய ஆச்சரியங்கள்... ரகசியங்கள்... கிறங்கடிக்கும் கள்ள பார்வைகள்.... குட்டி குட்டி சந்தோஷங்கள்...    எளிதில் புரிந்து கொள்ள முடியா...  குழப்பியடிக்கும் நடவடிக்கைகள் என திரைக்கதை  நம் இளமை கால நினைவுகளை ஒரு முறை மறு ஒலி -ஒளி பரபரப்பு செய்கிறது  பிறந்ததில் இருந்து...  ஒரே ஒரு பெண்ணை மட்டும் பார்த்து..  பழகி காதலித்து கல்யாணம் செய்தவர்கள் யார் என தேடினால்  உலக உருண்டையில்   ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்கள்...... நான் உட்பட...  மூன்றாவது படிக்கும் போது  கர்லிங் ஹேர் வைத்த யசோதா... ஐந்தாவதில் சாய்ரா  பானு... கல்லூரி காலங்களில் எதிர் வீட்டு ப்ரியா... அப்புறம் என் அக்கா பெண் என எனக்கும் நீண்ட காதல் எபிசோடுகள் உண்டு..எல்லாமே சொதப்பல்கள்தான்!. அதை எல்லாம் எழுத ஆரம்பித்தால்  மூன்று மாதங்களுக்கு இந்த பதிவு நீளும் என்பதால் நேராய் படத்திற்கு வருவோம்... அதேதான்.. புனிதமான காதல்.. அமரக்காதல் என நாம் ரீல் சுற்றுவதெல்லாம் வெறும்  இனக்கவர்ச்சி என காதல் ஜிகினாவை கிழித்திருக்கிறார்கள்... ஒப்புக்கொள்ள கொஞ்சம் மனசு வலித்தாலும் நிதர்சனம் அ