Posts

திருடன் போலீஸ் - விமர்சனம்

Image
அப்பாவை கொன்றவனை பழி வாங்கும் அமிதாப் காலத்து கதை. இதுதான் கதையா என்றால் ஆம் என்று தலையாட்ட முடியவில்லை. அப்பா செண்டிமெண்டில் மெல்ல மூவ் செய்து, கடைநிலை போலீஸ் படும் அவஸ்தைகளில் வேகம் எடுத்து,  காதல் ஸ்பீட் ப்ரேக்கர்களில் தடுமாறி, பழி வாங்கும் படலத்தில் பாதை மறந்து நிற்கும் போது, வேறு வழியில்லாமல்  காமெடி என்னும் யு டர்ன் அடிக்கிறார்கள்.  

படம் பார்த்து வெளியே வருபவர்களிடம் இது எந்த மாதிரியான படம் என ஒரு கேள்வி கேட்டு சரியாய் விடை சொல்பவருக்கு ஒரு எவர்சில்வர் குடமோ, ஒரு வெள்ளி குத்து விளக்கோ பரிசாக கொடுக்கலாம். அந்த அளவிற்கு, இது அக்ஷன் த்ரில்லரா...? சென்டிமென்டல் டிராமாவா?, ப்ளாக் காமெடி வகையா என நம்மை குழம்ப வைத்து கும்மியடிக்கிறார்கள். ஆனாலும், சரியான அளவில் சரியான நேரத்தில் வரும் காமெடிகள் படத்தை காப்பாற்றுகிறது. 

நான்கடவுள் ராஜேந்திரன் (ஆண்ட்டி) ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம். இரண்டாவது ஹீரோவாக அட்டகத்தி தினேஷ்.   மற்ற படங்களில் எல்லாம்,  எபோலா வைரஸ் போல பய பீதியே கொடுக்கும் ராஜேந்திரன் இதில் அம்புலிமாமா ரேஞ்சுக்கு எல்லோரையும் கிச்சு கிச்சு  மூட்டுகிறார். சரியான டைமிங்கில் …

கத்தி - விமர்சனம்

Image
தொடங்குவதற்கு முன்... சாமி சத்தியமாய் நான் விஜய் ரசிகன் அல்ல.

சினிமாவை சினிமாவாக பார்த்தால் இந்த படம் உங்களுக்கும் பிடிக்கலாம்... இணையத்தில் கத்தி கத்தி நடக்கும் சண்டைகள்  நிச்சயம் ஒரு சினிமாவுக்காக அல்ல... தனி நபர் மீது உள்ள வெறுப்போ... அல்லது தன்  அதி புத்திசாலிதனத்தை  பறைசாற்ற ஏற்படுத்திக்கொள்ளும் துடிப்போதான் சில நண்பர்களுக்கு இருக்கிறது. என்னென்ன குறைகள்... குற்றங்கள் கண்டுபிடிக்கலாம் என யோசித்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தால்  எந்த உலக சினிமாவாலும் அவர்களை திருப்தி படுத்த முடியாது.  
ஹாலிவுட்டில் அமெரிக்க அதிபரையே வில்லனாக சித்தரித்து... வேற்று கிரக வாசிகளையும் நியூயார்க் நகர வீதிகளில் உலா வர வைக்கலாம்... எவனும் எதற்கும் கேள்வி கேட்பதில்லை... அவர்களை பொறுத்த வரை ஜஸ்ட் லைக் தட் அது ஒரு சினிமா அவ்வளவே... அதற்க்கு மேல் ஒரு இழவும்  இல்லை அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கிடையாது.  ஒரே விஷயம் அவர்கள் எதிர்பார்ப்பது... படம் அவர்களை வசீகரிக்கிறதா... இல்லையா... அவ்வளவே...  
கோலா குடிக்கும் இவன்  விவசாயத்தை பற்றி பேசி நடிக்க என்ன தகுதி இருக்கிறது? ஒப்புக்கொள்கிறேன்... இயற்க்கை ஆர்வலர…

கடல் - விமர்சனம்

Image
எல்லோரும் கழுவி ஊற்றி விட்டார்கள், ஆனாலும், மனசை தொடுகிற ஒன்றிரண்டு காட்சிகளாவது மணி சார் ஸ்டைலில்  இருக்காதா என்ற எதிர்பார்ப்புடன் தான் டிக்கெட் எடுத்தேன்.  அதே போல ஒன்றிரண்டு காட்சிகள் இருந்தது என ஒப்புக்கொண்டாலும் மிச்ச காட்சிகள் அத்தனையும் அபத்தங்களின் உச்சம்.   
மீனவ கிராமம், அங்கிருக்கும் சர்ச்சுக்கு புதிதாய் வரும் பாதிரியார், அங்கு  அவர் எடுத்து வளர்க்கும் ஒரு அநாதை சிறுவன், வேறொரு இடத்தில்  அவர் ஏற்கனவே வளர்த்து விட்டிருந்த பகையின் காரணமாய் பழி வாங்க துடிக்கும் தாதா வில்லன், அவருக்கு  வளர்ந்தும் வளராத ஒரு மகள்.. இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் கடல்... 
எந்த கதாபாத்திரமும் கதையில் அதன் இயல்போடு ஒட்டாமல், நமக்குள்ளும் ஒன்ற மறுத்து, கடலில் மிதக்கும் எண்ணெய் போல தனியாய் பிரிந்து அலை பாய்கிறது. 


  மணி  மணியான ஒன் லைனர்கள்... ரசனையான காட்சியமைப்புகள்.. இளமை துள்ளும் காதல் என எதை தேடி உள்ளே வந்தோமோ... அதை இரண்டரை மணி நேரமும் தேடி.. தேடி...  தேடி.. தேடி.... தேடி... தேடி...கிடைக்காமல்  டயர்டாகி... விட்டால் போதும் என கெஞ்சும் அளவிற்கு வந்திருக்கும் மணி சாரின் முதல் படம் நிச்சயம் இதுவாக…

விஸ்வரூப வெற்றி...

Image
நாட்ல நீதி நேர்மை நாணயம் எல்லாம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு...

கடவுளுக்கு நன்றி.. ஓ , அப்படி சொன்னால் கமலுக்கு பிடிக்காது.. நீதி தேவதைக்கு நன்றி...

இவன்... கமல் ரசிகனல்ல.. சினிமாவின் ரசிகன்.....விஸ்வரூபம் - விமர்சனம்

Image
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, பெளத்த  மதங்களின் வரிசையில் இன்னொரு முக்கியமான மதம் உண்டு. சினிமா என்கின்ற மதம்... உலகம் முழுதும் பல கோடி பேரால் விரும்பப்படும் இந்த மதத்தின், மிக முக்கிய தீவிரவாதிதான் கமல்.


நல்ல சினிமாவை உடனே பார்க்க வேண்டும், அது கொடுக்கும் அனுபவத்தில் மூழ்கி திளைக்க வேண்டும் என என்னும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் ரொம்பவே அதிகம். அதனால்தான், தமிழ்நாட்டில் இல்லாவிட்டால் என்ன...மாநிலம் விட்டு மாநிலம் தாவலாம் என வரிசை கட்டிக்கொண்டு பயணித்த வாகனங்களில் எனது பிரேக் பிடிக்காத  ஓட்டை டிவிஎஸ் 50 யும் அடக்கம். கொளுத்தும் வெயில்.. மொட்டை காடு..., பழுதடைந்த சாலைகள் என பயணத்தை சிரமமாக்கும் இடர்கள் பல  இருந்தாலும்...    கோயம்புத்தூர் டு வேளந்தாவளம் (கேரளா தமிழக எல்லை)  பயணம் எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற தீவிர சினிமா பிரியர்களுக்கு ஒரு உற்சாகமான சவாரியாகத்தான் நேற்று  இருந்திருக்க கூடும்.  


அவரின் இந்த புதிய படைப்பு  நிறைய சாதனைகள், கொஞ்சம் சர்ச்சைகள், சந்தேகங்கள் என கலந்து கட்டிய ஒரு பொட்டலமாய் நமக்கு  வழங்கபட்டிருக்கிறது. வெறும் வாயிற்கு அவல் கிடைத்தாலே சந்தோஷப்படுவான் ரசிகன்...  இத…

I SUPPORT KAMAL

Image

அட்ட கத்தி - விமர்சனம்

Image
ஒரு பெண்ணின் மனசு போலத்தான் இந்த படமும்.....  நிறைய ஆச்சரியங்கள்... ரகசியங்கள்... கிறங்கடிக்கும் கள்ள பார்வைகள்.... குட்டி குட்டி சந்தோஷங்கள்...    எளிதில் புரிந்து கொள்ள முடியா...  குழப்பியடிக்கும் நடவடிக்கைகள் என திரைக்கதை  நம் இளமை கால நினைவுகளை ஒரு முறை மறு ஒலி -ஒளி பரபரப்பு செய்கிறது 
பிறந்ததில் இருந்து...  ஒரே ஒரு பெண்ணை மட்டும் பார்த்து..  பழகி காதலித்து கல்யாணம் செய்தவர்கள் யார் என தேடினால்  உலக உருண்டையில்   ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்கள்...... நான் உட்பட... 
மூன்றாவது படிக்கும் போது  கர்லிங் ஹேர் வைத்த யசோதா... ஐந்தாவதில் சாய்ரா  பானு... கல்லூரி காலங்களில் எதிர் வீட்டு ப்ரியா... அப்புறம் என் அக்கா பெண் என எனக்கும் நீண்ட காதல் எபிசோடுகள் உண்டு..எல்லாமே சொதப்பல்கள்தான்!. அதை எல்லாம் எழுத ஆரம்பித்தால்  மூன்று மாதங்களுக்கு இந்த பதிவு நீளும் என்பதால் நேராய் படத்திற்கு வருவோம்...


அதேதான்.. புனிதமான காதல்.. அமரக்காதல் என நாம் ரீல் சுற்றுவதெல்லாம் வெறும்  இனக்கவர்ச்சி என காதல் ஜிகினாவை கிழித்திருக்கிறார்கள்... ஒப்புக்கொள்ள கொஞ்சம் மனசு வலித்தாலும் நிதர்சனம் அதுதானே என நினைக்கையில்…