Posts

Showing posts from 2019

SUPER டீலக்ஸ்

Image
SUPER டீலக்ஸ்..... படத்தை போலவே பின்வரும் எழுத்துக்களும் சற்று விவகாரமாக இருக்கலாம்.... விருப்பமிருப்பவர்கள் மட்டும் தொடரவும்... நிச்சயம் 18+...... விஸ்வாமித்திரரின்  தவத்தை கலைத்த மேனகையே போல .... பல வருடம் எழுதாமல்.... BLOG பக்கமே போகாமல் இருந்த என் தவத்தை இன்று 42 வயது தியாகராஜன் குமாரராஜா கலைத்திருக்கிறார்... ஒரே ஒரு படம்... ஏகப்பட்ட வருஷங்கள் பேசி தீர்த்திருப்போம்.... போஸ்டர் டிசைன் தொடங்கி கொடுக்கா புலி போட்ட கிழிந்த டிராயர் வரை அடித்து துவைத்திருந்தாலும்... இன்னமும்  பேச  பல விஷயங்களை வைத்திருக்கிறது அந்த படம். இதோ இந்த சூப்பர் டீலக்ஸும் இன்னும் சில பல வருடங்களுக்கு பேசு பொருளாய் இருப்பது நிச்சயம்.  இடைவேளையில்....  த்தா .... இதுதாண்டா படம்.... என சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக ரெஸ்ட் ரூமை தேடி ஓடுகிறோம் (1ST HALF அவ்வளவு நீளம்). அடக்கி வைத்திருக்கும் அவ்வளவும் பிய்த்து கொண்டு வரும்போது வரும் ஒரு எல்லையில்லா ஆனந்தம்.... ஒரு சிலிர்ப்பு...  ஒரு சுக சுதந்திர சுகானுபவம் முதல் பாதியிலேயே  நமக்கு கிடைத்து விடுகிறது...  ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விசிலடிக்கவும்... கை தட்டி ர