Saturday, June 5, 2010

லூஸ்....


லூஸ்... இப்படி  சொல்லித்தான் இதுவரையும் அழைத்திருக்கிறேன்.  எனக்கும் சரி அவளுக்கும் சரி நிஜ பெயர் சொல்லி அழைப்பது இருவருக்குமே பிடிக்காது. பட்ட படிப்பு முடித்திருந்தாலும் ஒரு குழந்தை போலதான் இருக்கும் அவளுடைய நடவடிக்கைகள்....

என் உடன் பிறக்கவில்லையே தவிர.. என் உயிரிலும் மேலான என் தங்கை... என் மீது அவள் செலுத்திய அன்பும், அக்கறையும், ஒரு தாயின் அன்பு போல.. விலை மதிப்பற்றது.. எந்நாளும்...

பைக்கில் வேகமாக சென்றால் மிகவும் பயப்படுபவள்.. கண்களை மூடிக்கொண்டு  என் தோள்களை இறுக்கி பிடித்து, கடவுளை துணைக்கு அழைப்பாள். அந்த கவிதை சந்தோஷத்துக்காகவே  ஓவொரு முறையும் த்ராட்டிலை முறுக்குவேன்...

காப்பிக்கோப்பையில் ஆரம்பித்து DAIRY  MILK  சாக்லேட் பட்டைகள் வரை பகிர்ந்து உண்ணும் எங்களது அன்பின் வெளிப்பாடுகள் எங்களை வளர்ந்த குழந்தைகளாய் மற்றவர்களுக்கு அடையாளம் காட்டினாலும் உண்மையில் எனக்கு அவளும், அவளுக்கு நானும் குழந்தையே....!

என் மீதான அவளின் உரிமை.. என்னை யாரிடத்தும் விட்டு தராத அவளின் அன்புதான் நான் ஈட்டியதிலேய விலை மதிப்பற்ற சொத்து.. இப்போதும்.. எப்போதும்.. 


அம்மை என்றொரு பக்திக்கும், மருத்துவத்துக்கும் இடைப்பட்ட விஷயம் என்னை ஆக்ரமித்த போது, அந்த நாட்களில் எல்லாமும், என் மீதான அவளின்  அக்கறைகள், கவனங்கள், பிரார்த்தனைகளின் ஆழங்கள் நன்றாக புலப்பட்டன. தூக்கம் தொலைத்த இரவுகளின் வலிகளை சில புன்னகைகளும், கண்ணீர் துளிகளும்  மறக்க செய்தன.

சின்ன சின்ன விஷயங்களுக்காக நாள் முழுதும் நாங்கள் சண்டையிட்டு கொண்டாலும, என் பொய் கோபங்களும், பிடிவாதங்களும் அவளது ஒற்றை புன்னகையிலும், சிறு தலை கோதலிலும், கன்னக் கிள்ளளிலும்   தோற்றுவிடும்.

என் லூசிற்கு நாளை மறுநாள் (07.06.10) திருமணம்.இனிமேல் என்னை காலையில் GOOD MORNING  சொல்லி எழுப்பி விடவும், காபியே பகிர்ந்து குடிக்கவும், பொய் சண்டைகள் போடவும் என்னோடு அவள் இருக்கபோவது இல்லை. அவளின் பிரிவு  ஒரு மாதிரி கண்களில் நீர் கோர்த்தாலும்,  அவளின் புது வாழ்வு ஆரம்பிக்க போகும் சந்தோஷமான தருணம் இது.. அதில் பங்கேற்றுவிட்டு உங்களிடம் வருகிறேன்.. அது வரை..பதிவுலகத்திற்கு ஒரு சின்ன இடைவேளை.

7 comments:

 1. ungal thozhiku en vaalthukkal

  ReplyDelete
 2. உங்கள் தங்கை திருமணத்திற்கு வாழ்த்துகள்.

  எல்லாம் வல்ல ஆண்டவன் தம்பதியருக்கு எல்லா நலமும், வளமும் அருளுவாராக.

  அன்புடன்

  இராகவன்

  ReplyDelete
 3. தல ஆகா, என்னமா பீல் பண்ணுறாங்க. பாச மலர் மேல என்னே அன்பு.

  இவனுக்குள்ளும் ஏதோ இருக்கு பாரேன்... நல்ல அன்பை சொன்னேன்யா...

  உங்களுக்கும், உங்கள் உடன்பிறப்பிர்க்கும் எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. தங்கைக்கு திருமண வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. அருமை மனோ
  அழகான பீலிங்ஸ்
  பகிர்ந்தமைக்கு நன்றி
  தங்கைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. தங்கைக்கு இனிய திருமண நல் வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. திருமணம் மிக சிறப்பாக நடந்து முடிந்தது.

  வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றி.

  மனோ

  ReplyDelete

you might like this also...

Related Posts with Thumbnails