Sunday, February 3, 2013

கடல் - விமர்சனம்எல்லோரும் கழுவி ஊற்றி விட்டார்கள், ஆனாலும், மனசை தொடுகிற ஒன்றிரண்டு காட்சிகளாவது மணி சார் ஸ்டைலில்  இருக்காதா என்ற எதிர்பார்ப்புடன் தான் டிக்கெட் எடுத்தேன்.  அதே போல ஒன்றிரண்டு காட்சிகள் இருந்தது என ஒப்புக்கொண்டாலும் மிச்ச காட்சிகள் அத்தனையும் அபத்தங்களின் உச்சம்.   

மீனவ கிராமம், அங்கிருக்கும் சர்ச்சுக்கு புதிதாய் வரும் பாதிரியார், அங்கு  அவர் எடுத்து வளர்க்கும் ஒரு அநாதை சிறுவன், வேறொரு இடத்தில்  அவர் ஏற்கனவே வளர்த்து விட்டிருந்த பகையின் காரணமாய் பழி வாங்க துடிக்கும் தாதா வில்லன், அவருக்கு  வளர்ந்தும் வளராத ஒரு மகள்.. இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் கடல்... 

எந்த கதாபாத்திரமும் கதையில் அதன் இயல்போடு ஒட்டாமல், நமக்குள்ளும் ஒன்ற மறுத்து, கடலில் மிதக்கும் எண்ணெய் போல தனியாய் பிரிந்து அலை பாய்கிறது.   மணி  மணியான ஒன் லைனர்கள்... ரசனையான காட்சியமைப்புகள்.. இளமை துள்ளும் காதல் என எதை தேடி உள்ளே வந்தோமோ... அதை இரண்டரை மணி நேரமும் தேடி.. தேடி...  தேடி.. தேடி.... தேடி... தேடி...கிடைக்காமல்  டயர்டாகி... விட்டால் போதும் என கெஞ்சும் அளவிற்கு வந்திருக்கும் மணி சாரின் முதல் படம் நிச்சயம் இதுவாகத்தான் இருக்க கூடும்.. கடைசியாகவும் இதுவே இருக்க கர்த்தரை பிரார்த்திப்போம் 

ஏமாற்றம் என்பது சாதாரண வார்த்தை. ஆனால்,  கற்பனை செய்தே பார்க்க முடியாத அளவில் படு மொக்கையாக, த்ராபையாக மணி சார் எடுத்திருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சி.

தன் ஸ்டைலுக்கு சிறிதும் சம்மந்தமில்லாத கதையே தேர்ந்தேடுத்ததில் ஆரம்பமான வீழ்ச்சி...  கடுப்பேற்றும் வசனங்களாலும் ,  சுவாரசியமற்ற காட்சி கோர்வைகளாலும் குப்புற விழுந்துவிட்டது. விழுந்தும் மண் ஒட்டவில்லை என்றால், ரஹ்மான் ராஜீவ் மேனன் இருவர் மட்டுமே காரணம். 

ஒவ்வொரு காட்சியின் தொடக்கத்திலும் ஒளிப்பதிவு.. மிரட்டுகிறது... கடல் சீற்றங்களை... கிராபிக்ஸ்  என்றாலும்... பிரமிப்போடு உணர செய்கிறது. படத்தில் உயிர்ப்போடு இருக்கும் ரெண்டே விஷயங்கள் இசையும்... ஒளிப்பதிவும் மட்டுமே...    

நெஞ்சுக்குள்ளே, மூங்கில் காடு  இவ்விரண்டு பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் அவ்வளவு அழகு... நேர்த்தி.. இரண்டரை மணி நேர படத்திற்கு இவ்விரண்டு விஷயங்கள் மட்டும்  போதாதே   சார்! பவர் ஸ்டார் கூட இப்போது திரையில் தோன்றினால் கை தட்டி விசில் வாங்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவ்வளவு வளர்ந்த இயக்குனர் உங்களால் படத்தில் ஓரிடத்தில் கூட கைதட்டல் வாங்க முடியாமல் போனது காலக்கொடுமை. 

கிராமத்து ஹீரோ, பண்ணையார் வில்லன், ஐந்து பாட்டு, நாலு சண்டை.. போலீஸ் வந்து முடித்து வைக்கும் கிளைமாக்ஸ் என பார்த்து பழக்கப்பட்டவர்களை... மௌனராகம், நாயகன், இதயத்தை திருடாதே, அஞ்சலி  என எங்கள்  ரசனைகளை  வளர்க்க செய்து ரசிக்க வைத்தது நீங்கள்தான்... நீங்கள் வளர்த்து விட்ட அந்த ரசனைதான்..உங்களின்  இந்த உப்புமா படத்திற்கு எமனாகியிருக்கிறது. WE NEED SOMETHING GOOD... MANI SIR... 


 நீச்சல் தெரியாமல் கடலில் குதித்தவன் கதிதான் படம் பார்த்தவனுக்கும் ! 
(+) பிளஸ் 

ரஹ்மான் 
ராஜீவ் மேனன் 


(-) மைனஸ் 

கதை 
திரைக்கதை 
வசனங்கள் 
இயக்கம் 
கதை களன் 


VERDICT : கடல்...... ஆத்மா இல்லை. 


 EXTRA பிட்டுகள் 

மொக்கை என பல்பு வாங்கிய பின்னும் காசியில் ஹவுஸ் புல் ஆனது ரஹ்மானுக்கும், மணி சாருக்கும் உள்ள மரியாதை. (அடுத்த படத்திலாவது அதை காப்பாத்துங்க சார் )  

ஒரு மட்டமான சரக்கடித்த அல்லது மன நிலை பிழன்ற ஒரு மோசமான தருணம்தான்  மணி சாருக்கு இப்படிப்பட்ட படத்தை எடுக்க தூண்டியிருக்கிறது என்பது படம் பார்த்த அத்தனை பேரின் அனேக  நம்பிக்கை.. 

  விஸ்வரூபம் வெற்றிக்கு தெரிந்தோ தெரியாமலோ அரசு, மீடியா, சில அமைப்புகள் என  எல்லோரும் உதவி செய்திருக்கிறார்கள் ... மணி சாரும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்து கொண்டார்... கடல் கெடுத்து..... .  

you might like this also...

Related Posts with Thumbnails