SUPER டீலக்ஸ்



SUPER டீலக்ஸ்.....

படத்தை போலவே பின்வரும் எழுத்துக்களும் சற்று விவகாரமாக இருக்கலாம்.... விருப்பமிருப்பவர்கள் மட்டும் தொடரவும்... நிச்சயம் 18+......

விஸ்வாமித்திரரின்  தவத்தை கலைத்த மேனகையே போல .... பல வருடம் எழுதாமல்.... BLOG பக்கமே போகாமல் இருந்த என் தவத்தை இன்று 42 வயது தியாகராஜன் குமாரராஜா கலைத்திருக்கிறார்... ஒரே ஒரு படம்... ஏகப்பட்ட வருஷங்கள் பேசி தீர்த்திருப்போம்.... போஸ்டர் டிசைன் தொடங்கி கொடுக்கா புலி போட்ட கிழிந்த டிராயர் வரை அடித்து துவைத்திருந்தாலும்... இன்னமும்  பேச  பல விஷயங்களை வைத்திருக்கிறது அந்த படம். இதோ இந்த சூப்பர் டீலக்ஸும் இன்னும் சில பல வருடங்களுக்கு பேசு பொருளாய் இருப்பது நிச்சயம்.


 இடைவேளையில்....  த்தா .... இதுதாண்டா படம்.... என சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக ரெஸ்ட் ரூமை தேடி ஓடுகிறோம் (1ST HALF அவ்வளவு நீளம்). அடக்கி வைத்திருக்கும் அவ்வளவும் பிய்த்து கொண்டு வரும்போது வரும் ஒரு எல்லையில்லா ஆனந்தம்.... ஒரு சிலிர்ப்பு...  ஒரு சுக சுதந்திர சுகானுபவம் முதல் பாதியிலேயே  நமக்கு கிடைத்து விடுகிறது...  ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விசிலடிக்கவும்... கை தட்டி ரசிக்கவும் முதல் பாதியில் ஏஏஏகப்பட்ட வசனங்களும் கோக்குமாக்கு காட்சிகளும் நிரம்பி வழிகின்றன... அவ்வப்போது இளையராஜா வேறு நம்மை BGM வடிவத்தில் வந்து கிளர்ச்சியூட்டுகிறார்.  கற்பனை செய்ய இயலாத தருணங்களும்.... அதில்  சிக்கி சிதறும்  கதா பாத்திரங்களும்.... மச்சி... இது நியூ வேவ் சினிமாடா என
படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நம்மை ட்விட்டரில்  டைப்ப வைத்திருக்கிறது.

கஸாட்டா ஸ்லைஸ் ஐஸ்கிரீம்  போல... லேயர் லேயராக ஒவ்வொரு அனுபவம்.... எதை சொல்லுவது.... பின்னணி இசை... வசனங்கள்.... சவுண்ட் டிசைன் ..... காட்சிகள் கொடுக்கும் அந்த இம்பாக்ட்..... கலர் டோன்... கதாபாத்திரங்களின் நடிப்பு   என ஒவ்வொன்றாய்யும் தனி தனியாய் உணர அல்லது புரிந்து கொள்ள நிச்சயம் இன்னும் சில பல முறை படம் பார்க்க வேண்டும். இதில் எதிலும் குறை இல்லாமல் நிறை குடமாய் தளும்புவதே குமார ராஜாவின் திறமை.


நிற்க.... இப்படி முதல் பாதி முழுதும் நம்மை ENTERTAIN செய்தவர்.... இரண்டாம் பாதியில் நிகழ்த்தியிருப்பது என்ன.... ஒரு தேர்ந்த PHILOSOPHY வாத்தியார் போல அவர் காட்சிகளின் மூலம் பேசும் பல சித்தாந்தங்கள்.... நம்பிக்கைகள்... மேற்கோள்கள்.... நடைமுறை நிதர்சனங்கள் என வெகு ஜன ரசிகனுக்கு பிடிக்குமா அல்லது சலிப்பு வருமா என்பதை பற்றிய எந்த கவலையும் இல்லாமல்... நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ....என் ஸ்டைல் இதுதான் என  இது வரை தமிழ் சினிமா போகாத புது ரூட்டில் பயணித்திருக்கிறார். அதில் நாம் விரும்பி செல்வதும்.... பாதி வழியிலேயே இறங்க முயல்வதும் அவரவர் ரசனை சம்மந்த பட்ட விஷயம். எல்லோருக்கும் இது பிடிக்கும் என்பது நிச்சயம் பேராசையே.....

குறைகள்... நிச்சயம் பட்டியலிடும் அளவில் இருக்கிறது.... கதை நிகழும் களம்.... சிற்றுரா ... மெட்ரோ சிட்டியா ....?  இரண்டாம் பாதியில் வரும் விசித்திர கதாபாத்திரம் சுவாரசியம் கொடுத்தாலும் லாஜிக் மிக பெரிய ஸிரோ .

கூர்ந்து கவனித்தால் படத்தில் வரும் எல்லோரும் அவரவர்க்கு பிடித்த விஷயங்களில் உண்மையாக இருக்க முயல்கிறார்கள்... ... அது மற்றொருவருக்கு கொடுக்கும் எதிர் வினைதான் நம்மை பல  இடங்களில் சிரிக்க வைக்கவும்... சில இடங்களில் அதிர்ச்சியாய் நம்மை கடந்து செல்லவும் வைக்கிறது.

வெவ்வெறு சம்பவங்கள்.... அதனை ஒன்றிணைக்கும் ஒரு மைய புள்ளி என பல படங்கள் பார்த்திருக்கிறோம்.  ஆனால் கதை சொல்லலில் வரும் சூழல்களும்..... கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களுமே இந்த படத்தை ஒரு சிறந்த படைப்பாக மாற்றியிருக்கிறது.

DONT MISS IT .

Comments

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....