நண்பனை இழந்து விட்டேன்.


 நான்கு வருட சிநேகிதம் எங்களுடையது....பால்ய கால நண்பர்களை விடவும் மிக குறுகிய காலத்தில் என்னுடன் நெருக்கமானவன்,  எப்போதும் என்னுடன்  ஒட்டிக்கொண்டு திரிவான்.  பெற்றோர் வைத்த பெயர் வேறெனினும் நான் எப்போதும்  உரிமையாய் அழைக்கும் பெயர் "டேய் மாப்பு ".  நிறைய வித்தைகள் செய்வான்.. என் காதலுக்கு தூது போவான்,  என் தனிமை பொழுதுகளை இசையால் நிறைப்பான், சிறு சிறு  விளையாட்டுக்களால் என்னை உற்சாகப்படுத்துவான். எனக்கான பல விஷயங்களை தன் ஞாபக செல்களில் வைத்துகொண்டு தேவையான பொழுதுகளில் நினைவூட்டுபவன்  இப்பவும் நம்ப முடியவில்லை அவனை இழந்து விட்டேன் என்பதை.. என் எல்லா சுக துக்கங்களிலும் என்னோடு பயணிக்கும் அவனை போன்ற ஒரு நண்பன் உங்கள் எல்லோருக்கும் இருக்க கூடும். சொல்ல மறந்து விட்டேன்.. அவன் பெற்றோர் அவனுக்கு வைத்த பெயர் NOKIA 6233. ரொம்பவுமே நெருங்கி பழகிய ஒன்றை ஒரு விநாடி நேரத்தில் இழப்பதன் வலி சற்று கொடுமையான விஷயமே. எப்படி அவனை தவற விட்டேன் என்பது இது கணமும் விளங்கவில்லை, ஒரு இரண்டு நிமிடங்கள் கூட இருக்காது.. அவன் என்னுடன் இல்லை என்பதை நான் உணர.. உடனே தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.. இருக்கிறேன் என ஓசை கொடுத்தவன்.. சிற் சில வினாடிகளில் மௌனமாகி  விட்டான். அவனை கண்டெடுத்த  புண்ணியவான்,  எனக்கும், அவனுக்குமான தொடர்பை உடனே கத்தரித்து அவன் செயல்படாவண்ணம் முடக்கிவிட்டான். இங்குதான் நம் சக மனிதர்களை பற்றிய பொறுப்புணர்ச்சியும், மனசாட்சி பற்றிய கேள்விகளும், ஆசையின் அளவீடுகளும் செவிட்டில் அறைந்தது போல உறைக்கிறது.

எப்படி மனம் வருகிறது.. அடுத்தவர் உடைமையே தன்னுடையது போல அபகரிக்க.. கீழே தானே கிடைத்தது என சாக்குபோக்கு சொல்ல வேண்டாம். என்னை பொறுத்த வரையிலும்,உரியவரிடம் சேர்ப்பிக்கும் வாய்ப்பு இருந்தும் அதை மறைத்து சொந்தம் கொண்டாடுவதும் ஒரு வகை திருட்டே.  இழப்பதன் வலி இழந்து பார்த்தால் மட்டுமே உணர முடியும்.  என் நிலை பரவாயில்லை, என் தம்பி ஒரு முறை செல் பேசியே தவற விட்டு விட்டு, பின் அதை தொடர்பு கொண்ட போது ஒரு மகா உத்தமன் பேசினான், உங்கள் போன் என்னிடம் இருக்கிறது. வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என..  உடனே 25 KM பயணம் செய்து அவன் சொன்ன இடத்தில் வந்து தேடினால் அந்த உத்தமனும் இல்லை, செல்பேசியும் இல்லை. இணைப்பு துண்டிக்க பட்டிருந்தது. ஒரு மணி நேர அவகாசத்தில் மனித மனம் எவ்வளவு மாறி விடுகிறது. நிறைய பார்த்திருக்கிறேன். என் தங்கை தன் செல் பேசியே தொலைத்து விட்டு ஒரு வாரம் அழுத அழுகையில் பணம் என்கின்ற விஷயத்தை தாண்டியும் ஒரு மெல்லிசான உறவு,  ஒரு அன்யோனியத்தை அவள் தொலைத்தது நன்கு புரிந்தது. கங்காரு தன் குட்டியே பாதுகாப்பது போல தன் செல்பேசிகளை பாதுகாக்கும் மனிதர்கள் இங்கிருக்கிறார்கள்.  இருப்பினும் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில், ஒரு விபத்து போல தொலைத்து விட்டு அவர்கள் படும் பாடு மிக வலி மிகுந்தது.

பெருமைக்கு சொல்லவில்லை, இதுவரை இரண்டு முறை யதொச்சையாக கண்டெடுத்த செல்பேசிகளை அதன் உரியவர்களிடம் சேர்ப்பித்திருக்கிறேன். அதை பெற்றுக்கொள்ளும் போது அவர்கள் கண்களில் தெரியும் மகிழ்ச்சியும் நமக்கு அதனால் உண்டாகும் ஆத்ம திருப்தியும்  விலை மதிப்பற்றது.. முயற்சி செய்து பாருங்கள் ப்ளீஸ்..... 

Comments

 1. சரியா சொன்னேங்க மனோ. திருடுன அடுத்த செகண்டே எப்படித்தான் ஆப் பண்றாங்களோ. லாக் பண்ற வசதி இப்ப நிறைய வந்துட்டது. வேற சிம் போட்டா நமக்கு எஸ்.எம்.எஸ். வர்ற மாதிரி

  ReplyDelete
 2. நல்ல பதிவு மனோ...
  உண்மையில் வேறு எந்தபொருள் கிடைத்தாலும் உரியவரை கண்டுபிடிப்பது அரிது ..
  செல்போன் உரியவரை மிக சுலபாக கண்டுபிடித்து விடலாம் ...என்ன செய்வது மனோ
  சில மனிதர்கள் மனிதநேயம் என்பதையே தொலைத்து விட்டுத்தான் அலைகின்றனர்..
  முதல் வரிகளை படிக்கும் போது உண்மையில் உங்கள் நண்பர் யாரோ இறந்துவிட்டார்கள் என நினைத்தேன்..

  அன்புடன்
  பொன்.சிவா

  ReplyDelete
 3. செல்போன்களை தொலைப்பதே உங்கள் குடும்ப வழக்கம்போல் இருக்கிறது..ரிங் டோனாக ஒரு குடும்ப பாட்டு வைத்துக் கொள்ளுங்கள் வசதியாக இருக்கும்..

  ReplyDelete
 4. டேய் கிறுக்குப் பயலே என்னடா தலைப்பு இது? நாறப்பயலே இதுக்கு நீ வேற தொழில் செய்து பிழைக்கலாம்.

  ReplyDelete
 5. Nice mano...

  //Anonymous said...
  டேய் கிறுக்குப் பயலே என்னடா தலைப்பு இது? நாறப்பயலே இதுக்கு நீ வேற தொழில் செய்து பிழைக்கலாம். //


  பெயர் கூட சொல்லத் தெம்பில்லாதவர்களின் கருத்தையும் கண்டுகொள்ள வேண்டாம்.
  தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 6. இனிமேல் போன் பின்னாடி பேட்டரி பக்கத்துல ஒரு குட்டி பாம்ப(பாம் இல்லைங்க பாம்பு ) வச்சுடுங்க

  ReplyDelete
 7. உண்மையிலேயே இந்தக் காலத்தில் நம் செல்பேசியைத் தொலைப்பது நம்முடைய நெருங்கிய நண்பர்கள் பலரை இழப்பதற்கு சமம்.நம் நெருங்கிய நண்பர்கள் பலரின் தகவல்கள் அதில் சேமிக்கப்பட்டிருப்பதால். பதிவின் தலைப்பும்,விவரித்த விதமும் மிகவும் நன்றாக இருந்தது.

  ReplyDelete
 8. @RAMESH
  @PONSIVA
  @MARMAYOGI
  @MR.ANONY,
  @KALANESAN
  @MANGUNI AMAICHAR
  @MOHAN

  THANKS FOR YOUR COMMENTS.

  MANO

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4