Posts

Showing posts from September, 2010

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 5

Image
கொடுமையிலேயே பெரிய கொடுமை ஏது தெரியுமா.. ஒரு அழகான பெண்ணுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அதை லூசுத்தனமாய்  இழப்பதுதான். அந்த தேவதை என்னை நெருங்கி " காடி மே.. பாடி கா..  கித்னே பஜே " என ஏதோ இந்தியில் விளிக்க.. நான் திரு திருவென இரண்டு நொடி விழித்து ஹி... ஹி.. என  இளித்தேன். என்னை ஏற இறங்க பார்த்தவள் "சாரி" என சொல்லி விட்டு கூட்டத்தில் கலந்தாள்.  இந்தி கற்காத என் மீதும், திராவிட கழகத்தின் மீது ஆத்திரம் எகிற.. நாலைந்து கெட்ட வார்த்தைகள் புதிதாய் பிறந்து இறந்தது.


கூட்டம் காரணமாகவும், நேரமின்மை காரணமாகவும் என் தம்பியின் வீட்டிற்க்கு மின்சார ரயில் தவிர்த்து ஆட்டோவில் செல்லலாம் என முடிவெடுத்தோம். ஆட்டோவை நெருங்கி நாங்கள் செல்லுமிடத்திற்கு எவ்வளவு என்று கேட்டதற்கு, என்னிடமும், பரமு தன் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் பணத்தையும் தவிர , மூன்றாவதாக இன்னொருவரிடம்  திருடினால் கிடைக்கும் தொகையே அவன்  கூறினான். என் தம்பி அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு மேல் வராது என்றதால், அந்த ஆட்டோவை தவிர்த்து இன்னொரு ஆட்டோவிடம் சென்றோம். அவனிடம் சென்று பேசுவதற்கு முன்பாகவே.. வம்சம் படத்தில்…

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4

Image
தாஜ்மஹால் கொடுத்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்குள் அடுத்த பிரமிப்பு ஆக்ரா கோட்டை. தாஜ் போலவே பிரம்மாண்டமான அதேசமயம் தாஜ்ஜை விட சிலாகிப்பதற்கு நிறைய விஷயங்கள் கொண்ட இடம். முகலாய அரசர்களின் ஆஸ்தான அரண்மனையாக  அந்த காலத்தில் விளங்கிய ஒன்று. நீண்டு உயர்ந்த மதில்கள்.. அகழிகள்.. பாதுகாப்பு வளையங்கள் என எதிரிகள் எளிதில் உள் நுழையாதபடி அந்தகாலத்திலேயே படு பயங்கர பிளான் போட்டு கட்டியிருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் உடனே நம்மை வசீகரிப்பது அரண்மனையின் திறந்தவெளி தர்பார். மக்கள் அமர்வதற்கு எதுவாக படிக்கட்டுகள் போல அமர்வு மேடைகள் ஆச்சர்ய மூட்டுகின்றன. 

ஒரு டிபிக்கல் ராஜாவின் வீடு (அரண்மனை ) எப்படி இருக்கும் என்பதை ஆக்ரா கோட்டை மூலம் உணர்ந்து கொள்ளலாம். ராணிகளின் அறைகள்.. குளிர்பதனம் செய்யப்பட்ட அந்தபுரம், ராஜாவும் ராணியும் ஓடி பிடித்து விளையாட ஏதுவான நீண்ட பால்கனிகள்.. ஆலோசனை மண்டபம், வீரர்கள் தங்குவதற்கான சிறு சிறு அறைகள் என உள்ளுக்குள் வியப்பூட்டும் விஷயங்கள் ஏராளம். 

பரமுவும் நானும் ஆக்ரா கோட்டையையும், கோட்டையே பார்க்க வந்த பெண்களையும் ஒரு சேர ரசித்து விட்டு வெளியே வர, கையில் பொம்மைகளுடன் ஏக…

சென்னையும்.... தனிமையும்...

Image
திங்கள் கிழமை அதிகாலை சென்னையில் வந்து இறங்கியபோது ஏற்பட்ட பிரமிப்பு..... எத்தனை எத்தனை மக்கள்... தினம் தினம் புதிது புதிதாய் வாய்ப்புகளை தேடி  வந்திறங்கும் லட்சகணக்கான பேரை  தாங்கிக்கொண்டு... இனிமேலும் வருபவரை வரவேற்க தயாராய் இருக்கும் சென்னை... வாழ்க்கையின்... வாழ்கையே வாழ்பவரின் ஒரு முக்கிய அடையாளம். அன்றே வேலையில் சேர்ந்தாயிற்று.... அறை பிடித்தாயிற்று.. எல்லாம் முடிந்தபின் ஒய்ந்து படுக்கையில் சாயும் போது.. தூக்கம் வரவில்லை.. அத்தனை நேரம் ஒளிந்து கிடந்த வீட்டு ஞாபகம் ஒரு மோசமான புயல் போல என் மொத்த இரவையும் அள்ளி சுருட்டிக்கொண்டு  போக.. தனிமையில்.. ஒரு வெறுமையில் அந்த நொடியில் துளிர்த்த கண்ணீர் எதை கொண்டும் ஈடு செய்ய இயலாதது. கோவையில்.. அண்ணா, அண்ணி, தம்பிகள், தங்கைகள் என ஏகப்பட்ட சொந்தங்களுக்கு மத்தியில் என் தினங்கள் பாட்டுக்களும் கேலி கூச்சல்களுமாய்.. சந்தோஷ தருணங்களாய் கடக்கும்.. ஆனால் இங்கு.... மேலே சுற்றும் மின் விசிறியே தவிர இப்போதைக்கு என்னுடன் பேச யாரும் இல்லை. அங்கு.. வீட்டில் எல்லோரும் தூங்கியபின் என் தம்பியும்.. தங்கையும்.. நானும் திருட்டு பூனைகள் போல சமையலறை நுழைந்து.. ப…

நட்பின் நண்பர்களுக்கு......

நட்பின் நண்பர்களுக்கு, இது வரை கோயம்பத்தூர் குழந்தையாய் இருக்கும் நான் இனிமேல் சென்னை குழந்தையாய் மாற போகிறேன். நான் டெல்லி சென்று பங்கேற்ற நேர்முக தேர்வில்,  தேர்வாகி சென்னையில் THE HANDLOOM & HANDICARFTS EXPORT CORPORATION OF INDIA வில் 13.09.10 முதல் பணி புரிய இருக்கிறேன். நான் டெல்லி செல்லும் போது நீங்கள் எனக்களித்த வாழ்த்துக்களும் நான் நேர்முக தேர்வில் வெற்றிபெற ஒரு காரணம். உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் பல. ஒரு சிறிய இடைவெளியில் மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன். சென்னையில் ஜாக்கி அண்ணா, அதிஷா சார், கேபிள் சார், லக்கி,  ஜெட்லி, ஜில்லு போன்ற பதிவர்களை சந்திக்க மிக ஆவலுடன் இருக்கிறேன்.  டெல்லி ராஜ குமாரிகள் தொடர்.. இனி சென்னையில் இருந்து தொடரும்.. விரைவில்..

பாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்

Image
நாலு பைட், அஞ்சு பாட்டு, கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட், கொஞ்சம் காதல், கொஞ்சம் சிரிப்பு  என மசாலா போண்டா போடும் இயக்குனர்கள் மத்தியில் காமெடி என்கின்ற ஒற்றை வாழைக்காயில் பஜ்ஜி போட்டு, கூட்டத்தை கூட்டி கல்லா கட்டும் வித்தையில் இயக்குனர் ராஜேஷ் ஈசியாக ஜெயிக்கிறார். 
வெட்டி ஆபீஸ்ர் ஆர்யாவுக்கு , நயன் மீது எக்கச்சக்கச்சக்கமாய் காதல் உற்பத்தியாக, நயனின் அக்காவே தனக்கு அண்ணியாக வாய்க்கும் போது.. காதல் எளிதில் கை கூடும் என நினைக்கிறார். அண்ணி, என் தங்கையே கல்யாணம் செய்துக்க உனக்கு என்ன தகுதி இருக்கு என கேட்டு வைக்க, வெகுண்டெழுந்த வேங்கையாய், கை நிறைய சம்பாதித்து  காட்டுகிறேன் என வீட்டை விட்டு வெளியேறுகிறார். தன் சலூன் நண்பன் சந்தானத்தின் துணையோடு அவர் பணம் சம்பாதிக்க போராடும் மிச்ச சொச்சமே கதை. 
கதைக்காக எந்த மெனக்கேடல்களும் இல்லை. டெக்னிகல் விஷயங்களிலும் ரொம்ப ஆழம் தோண்டவில்லை. டைமிங் காமெடி என்கின்ற ஒற்றை துருப்புசீட்டில் ஸ்கூட்  அடித்திருக்கிறார் ராஜேஷ். 
படம் ஆரம்பித்ததில் இருந்து, கிளைமாக்ஸ் வரைக்கும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து அனுப்புவதே நோக்கம் என்றிருப்பதால்.... எந்த வித ரத்தம் தெறிக்கும…

வ- குவார்ட்டர் கட்டிங் - இசை விமர்சனம்

Image
வித்தியாசமான மேக்கிங்கும், படம் நெடுக வரும் காமெடியும் ஓரம்போவை மற்ற திரை படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது. அதன் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் அடுத்த முயற்சிதான் வ - குவார்ட்டர்  கட்டிங். ட்ரைலர் மற்றும் பாடல்கள் இதுவும்  வேறு மாதிரியான படம் என்பதை உணர்த்துகிறது.
உன்னை கண் தேடுதே - பிரகாஷ் குமாரும், கான உலகநாதனும் இணைந்து பாடியிருக்கும் டீசென்டான ரீமிக்ஸ்  பாடல். வரிகளில் 5000 பீரின் நுரையே போல, சரக்கின் அருமை பெருமைகள் பொங்குவது இன்னமும் பிளஸ்.
தேடியே தேடியே  -  ஆண்ட்ரியாவின், ஒயினில் நனைத்த குரல் கொஞ்சம் சைடு டிஷ் போல ரொமான்ஸ் கலந்து ஏகத்துக்கும்  கிக் ஏற்றுகிறது. ஆர்க்கெஸ்ட்ரேஷன் எளிமையாக இருந்தாலும் மெட்டின் வசீகரம் ரசிக்க வைக்கிறது.
சவூதி பாஷா - பாடலில் கவிஞர் அவதாரம் எடுத்திற்கும் சிவாவின் வரிகளில்  இருக்கும் உற்சாகமும், அரேபிய ஸ்டைல் இசையும்  ஒரு குவார்ட்ர் அடித்ததற்கு  ஒப்பான மன நிலையே தந்து களிப்பூட்டுகிறது.
ஷார்ப்பு ஷார்ப்பு - ஆல்பத்தின் தீர்த்த திருவிழா. நண்பர்களுடன் ஆட்டம் போட்டு விளையாட வைக்கும் மெட்டும், வரிகளும் எத்தனை குடித்தாலும் பிடிக்கும் கிங் பிஷர் …

பலே பாண்டியா - விமர்சனம்

Image
புகைப்பட ஓவியர் சித்தார்த்தின் முதல் திரைப்பட முயற்சி. நாட்டு மக்களுக்கு மெசேஜ் சொல்ல நிறைய பேர் இருப்பதால் ஜஸ்ட் லைக் தட் சிரிப்பு படம் தர முயன்றிருக்கிறார். எந்த வித லாஜிக் மேஜிக் இல்லாமல்...
பாண்டியன் தன் சாவை கூட வெற்றிகரமாக முடிக்க முடியாத ஒரு  அதிர்ஷ்டமில்லா பேர்வழி. தன்னை கொலை செய்துவிடும்படி ஒரு தாதாவிடம் போய் நிற்க.. அவர் 25 லட்சம் ரூபாய் பணத்தை குடுத்து ஒரு மாதம் ஜாலியாக சுற்றி விட்டு வா பின் மனித வெடிகுண்டாக பயன்படுத்தி கொள்கிறேன் என்கிறார். பணம் அதன் பின் காதல்.. அப்புறம் அதிர்ஷ்டம் என பாண்டியன் ஜாதகம் மாற, ஒரு மாத முடிவில், தாதாவை தேடி போக.. அவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதோடு இடைவேளை.. என்ன கதை சூடு பிடிக்கறதா.. அப்படிதான் நானும் நினைத்து பாப்கார்ன் பொட்டலத்துடன் மிச்ச பாதியே பார்க்க ஆரம்பித்தேன்.. ஸ்ஸ்ஸ்ஸ்... நிஜமாகவே முடியல..

சுவாரசியமாக ஆரம்பிக்கும் பயணம் பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்து DRY ஆகி நின்று விடுவதை போல.. இடைவேளைக்கு பிறகு படம் நொண்டியடிக்க ஆரம்பித்து விடுகிறது. காமெடி செய்வது என  முடிவெடுத்தபின்.. வில்லன் என்ன ஹீரோ என்ன.. எல்லோருமே பாரபட்ச…

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

Image
சினிமாவில் மெசேஜ் சொல்வது இரண்டு வகை. படம் முழுக்க நல்லவர்களையும்..  பாசிட்டிவான விஷயங்களையும்  காட்டி  நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்கின்ற படங்கள் ஒரு வகை. இன்னொன்று.. படம் முழுக்க கெட்ட விஷயங்களை காட்டி.. கிளைமாக்சில் கெட்டவன் கெட்டழிவான் என்பது. இதில் இயக்குனர் சாமி இரண்டாவது வகை.


இவரின் முந்தைய படங்களான உயிர், மிருகம், இவற்றில் மிருகம் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். நிஜமாகவே என்னை மிரட்டிய படம் அது. ரொம்பவுமே யதார்த்தமான மேக்கிங்கும், கெட்டது செய்தால் அழிவு நிச்சயம் என்கின்ற கருத்தும், யாருமே எடுக்க துணியாத ஒரு கதையே எடுத்த தைரியமும் சாமியின்  மீது  ஒரு மரியாதையே உண்டாக்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சிந்து சமவெளி பார்த்தேன். யானை தன் தலையில் மண் அள்ளி போட்டுக்கொள்வதை போல.. சாமி தன் தலையில் தானே ஆசிட் ஊற்றிகொண்டிருக்கிறார்.

சினிமா.. ஒரு சுதந்திரமான.. மனதில் நினைப்பதை வெளிப்படுத்த உதவும் ஊடகம். இயக்குனர்  நாட்டில் நடக்கின்ற ஒரு தவறான விஷயத்தை சுட்டி காட்ட விரும்பியதில் எந்த தவறும் இல்லை. ஆனால்.. அதை சுட்டி காட்டிய விதத்தில் ஒரு நேர்மை இருக்கிறதா என்பதுதான் இந்த பட…

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 3

Image
பரமு ரொம்பவும் வெகுளி. ஆனால் கிடைக்கிற கேப்பில் டைமிங்காக போட்டு தாக்குவான். நான் இறங்கும் போது ஜல்லி காட்டு  காளை போல  நிற்காமல் போன ரயில்.. அவன் இறங்கும்போது  மட்டும்  பசுமாடு போல சாந்தமாக ஒரு நூறு அடி தள்ளி போய் நின்றது. 
வாய் நிறைய பல்லுடன், யுத்தத்திற்கு சென்று வெற்றியுடன் திரும்பியவன் போல கம்பீரமாய் ரயிலில்  இருந்து இறங்கி வந்தவன்,   "என்ன மனோ, பயந்துடீங்களா.. அனுமார் கிட்ட வேண்டினேன்..  அதுதான் ரயில் நின்னுடுச்சு" என்றான். ரயில்  சிக்னலுக்காக நின்றதோ.. அல்லது அனுமார் நிறுத்தினாரோ.. அவன் பத்திரமாக இறங்கியதும்தான் மனம் நிம்மதி அடைந்தது.
நான்கு ஆட்டோ டிரைவர்கள், எங்களை அணுகி,  தாஜ் மஹாலை சுற்றி காட்டுவதாய் சொல்ல., அதில் சாமுத்திரிகா லட்சணம் பார்த்து ஒருவரை தேர்ந்தேடுத்தோம்.     பரமு அவரையும், அவரது ஆட்டோவையும் கண்ட மேனிக்கு போட்டோ எடுத்து தள்ளியதுடன் இல்லாமல் அவரது லைசென்சையும் வாங்கி போட்டோ பிடித்து கொண்டான். எதற்கு என்றதற்கு "PREVENTION IS BETTER THAN CURE" என்று தலையே ஆட்டி ஆட்டி சொன்னான்.


எங்களது சொத்துக்களான டிகிரி சர்டிபிகேட் அடங்கிய பேக்கை ஆட்டோ டிரைவர் வச…

தற்போது தமிழ் சினிமா மறந்துபோன ஐந்து பாரம்பரிய விஷயங்கள்

Image
தற்போது தமிழ் சினிமா மறந்துபோன ஐந்து பாரம்பரிய விஷயங்கள் 1 . கிளைமாக்ஸ். வில்லனுக்கும், ஹீரோவுக்கும் நடக்கும் கடுமையான மோதலில், ஹீரோ படு பயங்கரமாக தாக்கப்பட்டு கீழே விழுந்து கிடக்க.. உடனே ஹீரோவின் நினைவுகளில், வில்லனால் கொலை செய்யப்பட்ட அம்மாவின் முகமோ , தங்கையின் முகமோ பிளாஷ் அடித்து, வேகமாக நூறு வயலின்கள் வாசிக்க, அதன் பின் ஹீரோ வெகுண்டெழுந்து வில்லனை துவம்சம் செய்வது.

2 . ஹீரோயின் வில்லனின் கற்பழிப்பு பிடியில் வசமாக சிக்கிக்கொண்டு, புடவை உருவப்பட்டு, ஐந்து நிமிடம் துரத்தி விளையாடி , படுக்கையில் வீழ்த்தி, இறுதியில்  வில்லன் ஹீரோயின் கழுத்தில் முகம் புதைக்கும் போது ஹீரோ சரியாக அங்கு என்ட்ரி ஆவது.. (இப்போதெல்லாம் ஹீரோ என்ட்ரி ஆவதில்லை. கற்பழிப்பு காட்சிகளை மிக டீடெய்லாக காட்டி விடுகிறார்கள்).

3 . ஹீரோ ஏழை என்றோ ...அல்லது  கீழ் சாதி என்றோ ஹீரோயினின் அப்பா, காதலை எதிர்ப்பது. (இப்போது இந்த விஷயத்தில் பெற்றோர்களை எவனும் மதிப்பதே இல்லை).


4 . ஹீரோ தனது புஜ பல பராக்கிரமத்தை காட்டி எல்லோரையும் அடித்து துவைத்த பின் சரியாக போலீஸ் வருவது.


5 . இறுதியில் உயிர் தியாகம் செய்வ…

ஷெல்லியும்.. காதலும்... - படித்ததில் பிடித்தது

Image
நீருற்றுக்கள் நதியுடன் கலக்கின்றன..

நதிகள் சமுத்திரத்துடன்..

வான் காற்றுக்கள் எப்போதும்
இனிமையான உணர்ச்சியுடன் கலக்கின்றன

உலகில் எதுவுமே தனியாக இருப்பதில்லை

எல்லாம் கடவுள் விதித்தபடி
ஒன்றுடன் ஒன்று கலந்துகொண்டுதான் இருக்கின்றன.

நீ மட்டும் என்னுடன் கலக்கவில்லை

மலைகள் வானை முத்தமிடுவதை பார்.

கடலலைகள் ஒன்றை ஒன்று தழுவுவதை பார்

மலர்கள் மற்ற மலர்களை புறக்கணிப்பதில்லை

கதிரொளி பூமியே அணைத்துக்கொள்ள
சந்திர பிம்பம் கடலை முத்தமிடுகிறது..

இந்த முத்தமெல்லாம் என்ன மதிப்பு
நீ என்னை முத்தமிடாவிட்டால்..?


                                  ---- ஷெல்லியின்  கவிதையில் இருந்து...