Tuesday, July 20, 2010

INCEPTION ( கனவு வேட்டை) - ஒரு அனுபவம்


மன்னிக்கவும், இது கனவு வேட்டை பற்றிய விமர்சனம் அல்ல.

படம் பார்ப்பதற்கு முன்...

கோபு அண்ணா : (மொபைலில்)  டேய் மனோ, என்ன பண்றே..

நான் : அண்ணா, கனவு வேட்டைன்னு ஒரு படம். பட்டையே கிளப்புதாம். நானும் குட்டியானும் கிளம்பிட்டோம். நீ வர்றியா..

கோபு அண்ணா : இல்லடா... இப்பதான் வேலை முடிஞ்சிது.. கொஞ்ச நேரம் தூங்கலாம்னு பார்க்கிறேன்.

நான் : தூங்கறதா இப்ப முக்கியம். இது ஒரு அட்டகாசமான, வினோதமான படம்.  மிஸ் பண்ணவே கூடாது. அப்புறம் வாழ்நாள் முழுக்க இந்த படத்தை மிஸ் பண்ணிட்டேமேன்னு வருத்தபடுவே..  படம் பார்த்தா மிரண்டு போய்டுவ... வா...

கோபு அண்ணா :என்னடா இப்படி பயமுறுத்தறீங்க.. சரி வீட்ல சொல்லிட்டு வரேன்.

இடையில் A .P யுடன் போனில் : டேய் மனோ பேசறேன், கனவு வேட்டை படத்துக்கு போறோம்.  வரியா..?

AP  : படத்துல பிட்டு வருமா..?

நான் : டேய் மூதேவி, இது ஒரு SCI -FICTION மூவி. அதெல்லாம் வராது.

AP      : அப்ப நான் வரலே..

நான் :  சரி வராதே.

தியேட்டர் செல்லும் வழியில்..

 கோபு அண்ணா: டேய், எந்த தியேட்டர் ?

குட்டியான் : M.P.S.- மங்கலம் ரோட்ல..

கோபு அண்ணா: அது இங்கிருந்து 15 KM தள்ளி இருக்கு. இந்த வெயில்ல அவ்வளவு தூரம் போகணுமாடா..

நான்: நல்ல படம் பார்க்க எவ்வளவு தூரம் வேணா போகலாம். கம்முன்னு வான்னா..தியேட்டரில்..

குட்டியான் : படம் 2 .30 க்குதான். இன்னும் 1 .30 மணி நேரம் இருக்கு.

கோபு அண்ணா:  டேய், தியேட்டரில் ஒரு ஈ, காக்கா  இல்ல.  கம்முனு வீட்டுக்கு போய்டலாம்டா..

நான் : அண்ணா, இது உலக சினிமா மாதிரி, எவனுக்கும் இதோட அருமை தெரியலை. நமக்கு தெரிஞ்சு வந்திருக்கோம். கவலைபடாதே.. இருந்து படம் பாத்துட்டுதான் போறோம்.

கோபு அண்ணா : எனக்கு என்னமோ பயமா இருக்குடா..

குட்டியான் : யோவ், உன்னை சினிமாதானே பார்க்க சொல்றோம். சீன் படத்திலையா நடிக்க சொல்றோம். எதுக்கு பயப்படற.. கம்முனு இரு..

தியேட்டர் உள் நுழையும் போது.. 

நான் : 'அண்ணா, டிக்கெட் எடுத்துட்டியா..?'
கோபு அண்ணா: எடுத்தாச்சு..
குட்டியான் :  வாட்டர் பாட்டில் வாங்கீட்டயா?
கோபு அண்ணா: வாங்கியாச்சு..
குட்டியான் : சிப்ஸ் பாக்கெட்.
கோபு அண்ணா: வாங்கியாச்சு..
நான் : அடடா. வண்டி டோக்கேன் வாங்க மறந்துட்டேனே..
கோபு அண்ணா: இவ்வளவு வாங்கினவன், அத வாங்கமாட்டேனா, அதுக்கும் அழுதாச்சு, உள்ள போலாம் வா.

படம் ஆரம்பித்து ஒரு ரீல்  முடிவில்...

கோபு அண்ணா: டேய்.. இதென்ன சண்டை படமா..

நான் : இல்லன்னா.. SCIENCE-FICTION.

கோபு அண்ணா : அப்படீன்னா ?

குட்டியான் : கம்முனு படத்த பாருங்க. உங்களுக்கே புரியும்.


படத்தின் நடுவில்..
                      
கோபு அண்ணா : டேய், இவனுங்க ஏரோ பிளேன்லதானே  போயிட்டு இருந்தாங்க.. இதென்ன நடுவுல ஒரு ரயில் வருது. .
நான் : அது கனவுன்னே.. 
கோபு அண்ணா : டேய், அவன் பொண்டாட்டி மாடில இருந்து குதிச்சாளே.. இப்ப என்ன திரும்பவும் வரா.?
நான் : அதுவும் கனவுணே...
கோபு அண்ணா : என்ன எழவுடா இது.. ஒன்னும் புரியல.. 
குட்டியன் : நொவ், தொண தொணன்னு  பேசாம படத்தை பாரு. கடைசில உனக்கு விளக்கமா சொல்றேன். 

இடைவேளை முடிந்து கொஞ்ச நேரம் கழித்து..

கோபு அண்ணா : (தீடிரென பரபரப்பாகி) டேய் எனக்கொரு சந்தேகம். ?
நான் : சொல்லுனா ?
கோபு அண்ணா : டைட்டானிக் படத்துல வருவானே.. அவன்தானே இவன்.?
நான் : அமாம்னா..எப்பிடின்னா கரீக்ட்ட கண்டு புடுச்ச ?
கோபு அண்ணா : பரதேசி, இத்தனை நேரம் படம் பார்த்ததுல இத ஒன்னதாண்ட என்னால கண்டு பிடிக்க முடிஞ்சுது. 

கொஞ்ச நேரம், கோபு அண்ணன் படத்தை உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்தார். புருவங்கள் உயர்ந்து, தாழ்ந்து,நெரித்து, ஒரு மாதிரி சீட்டில் அமர முடியாமல் நெளிந்து கொண்டிருக்க கிளைமாக்ஸ் வந்தது. அதில் ஹீரோ, தான் கனவுலகத்தில் இருக்கிறோமா..நிஜ உலகத்தில் இருக்கிறமோ என அறிய, ஒரு குட்டியூண்டு பம்பரத்தை சுழல விடுவார். பம்பரம் சுற்றிகொண்டே இருந்தால் கனவுலகம். நின்று விட்டால் நிஜ உலகம். அந்த பம்பரம் சுழல.. கேமரா பம்பரத்தை நோக்கி ஜூம் ஆகா.. இத்தனை நேரம் ஒன்றும் புரியாமல் தேமேயன பார்த்துக்கொண்டிருந்த நாங்கள் இதையாவது தெரிந்து கொள்ளலாம் என ஆர்வமாய் பார்க்க.. அந்த படுபாவி ஆபரேட்டர் அதற்குள் ஸ்க்ரீனை அணைத்து விட்டான். 

பின் சீட்டில் ஒரு குரல்...

"நான் அப்பவே தலை தலையா அடிச்சுக்கிட்டேன்..தேவ லீலை போலாம், தேவ லீலை போலம்னு, அங்க போயிருந்தா உடம்பும், மனசும் கொஞ்சம் கிளுகிளுப்பவவாது இருந்திருக்கும். "

வெளிய வந்ததும், கோபு அண்ணன்.. டேய், நான் வீட்ல வேற இந்த படத்துக்கு போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.. என் பொண்டாட்டி கதை என்னன்னு கேட்ட நான் என்னதைடா சொல்லுவேன்.  சண்டே இன்னைக்கு, கறிய தின்னுட்டு குப்புற படுத்து நல்ல தூங்கியிருப்பேன். படு பாவி பசங்களா....என் கனவை நாசமாக்கிடீங்கடா..
இரவு 11 .30 - கோபு அண்ணன் இல்லம். 

போன் மணி அடிக்க..

கோபு, என்ன தூங்கீட்டியா? நான் சூச்சு பேசறேன், ஏதோ கனவு வேட்டைன்னு படத்துக்கு போயிருந்தியாம்.. மனோ சொன்னான். படம் நல்ல இருந்துச்சா.. ?

இல்லடா கொஞ்சம் சுமார்தான். 

என்ன கதை.. ?

" %%%$$#$$#@@%))(*$$^%^#_ஒ@@!%%^^ %%%$$#$$#@@%))(*$$^%^#_ஒ@@!%%^^ "

 (எழுத்தில் சொல்ல முடியா வார்த்தைகளை கோபு அண்ணன் சொன்னதால்.. இதோடு சுபம். )
.
10 comments:

 1. கனவு வேட்டைன்னு சொல்லி உங்கண்ணனோட ஞாயிற்றுக்கிழமையை வேட்டையாடிட்டீங்களே மனோ...

  ReplyDelete
 2. இவ்வளவு கொடுமையாவா இருக்கு :)

  ReplyDelete
 3. நான் இந்த வாரம் இந்த படத்துக்கு போகலாம்னு இருக்கேன். அதுனால நீங்க என்ன சொன்னாலும் கேக்கமாட்டேன் - நல்லா இருக்குன்னே சொன்னாலும்.

  ஒரு தடவ நான் முடிவெடுத்துட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன். .... ஐயோ கோபம் ஆகாதீங்க ....:)

  ReplyDelete
 4. என்ன மனோ என்ன ஆச்சு??

  ReplyDelete
 5. DEAR MR.MANI,JANAKI RAMAN,YOGESH,KARTHIK & JACKIE ANNA, THANKS FOR YOUR COMMENTS.

  நான் முதலில் சொன்னது போல இது விமர்சனம் அல்ல. கோபு அண்ணா பற்றிய அனுபவம். அவ்வளவே. அதை கொஞ்சம் காமெடியாக சொல்ல முயற்சித்தேன்.

  ReplyDelete
 6. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க மனோ... Fulfills the purpose (இது விமர்சனம் அல்ல. கோபு அண்ணா பற்றிய அனுபவம். அவ்வளவே. அதை கொஞ்சம் காமெடியாக சொல்ல முயற்சித்தேன்)

  ஆனா, படம் நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்... பாருங்க... நண்பர்கள் எல்லாம் படம் கேவலமா இருக்குதோன்னு தப்பா புரிஞ்சுக்கறாங்க...

  ReplyDelete
 7. HAI JAI,

  YOU ARE RIGHT. I WILL TAKE CARE IN FUTURE.


  THANKS,
  MANO

  ReplyDelete
 8. சத்தியமா அருமையான விமர்சனம் ..!! இப்பூடி கூடவா விமர்சனம் எழுதறாங்க ..!!

  ReplyDelete
 9. //கோபு அண்ணா : (தீடிரென பரபரப்பாகி) டேய் எனக்கொரு சந்தேகம். ?
  நான் : சொல்லுனா ?
  கோபு அண்ணா : டைட்டானிக் படத்துல வருவானே.. அவன்தானே இவன்.?
  நான் : அமாம்னா..எப்பிடின்னா கரீக்ட்ட கண்டு புடுச்ச ?
  கோபு அண்ணா : பரதேசி, இத்தனை நேரம் படம் பார்த்ததுல இத ஒன்னதாண்ட என்னால கண்டு பிடிக்க முடிஞ்சுது//
  hahahahahaha supper...really enjoy oru review..che.chee thearter experience..keep it up..!!

  ReplyDelete

you might like this also...

Related Posts with Thumbnails