Posts

Showing posts with the label படித்ததில் பிடித்தது

ஷெல்லியும்.. காதலும்... - படித்ததில் பிடித்தது

Image
நீருற்றுக்கள் நதியுடன் கலக்கின்றன.. நதிகள் சமுத்திரத்துடன்.. வான் காற்றுக்கள் எப்போதும் இனிமையான உணர்ச்சியுடன் கலக்கின்றன உலகில் எதுவுமே தனியாக இருப்பதில்லை எல்லாம் கடவுள் விதித்தபடி ஒன்றுடன் ஒன்று கலந்துகொண்டுதான் இருக்கின்றன. நீ மட்டும் என்னுடன் கலக்கவில்லை மலைகள் வானை முத்தமிடுவதை பார். கடலலைகள் ஒன்றை ஒன்று தழுவுவதை பார் மலர்கள் மற்ற மலர்களை புறக்கணிப்பதில்லை கதிரொளி பூமியே அணைத்துக்கொள்ள சந்திர பிம்பம் கடலை முத்தமிடுகிறது.. இந்த முத்தமெல்லாம் என்ன மதிப்பு நீ என்னை முத்தமிடாவிட்டால்..?                                   ---- ஷெல்லியின்  கவிதையில் இருந்து...

வேலையற்றவன் - படித்ததில் பிடித்தது

Image
 சுறு சுறுப்பான சாலையில் புதிய புதிய கார்களில்        விரைந்து செல்லும் மனிதர்கள் மேல் பொறமை படாதே.. ஒருவனுக்கு "பைல்ஸ்" ஒருவனுக்கு 'ஹார்ட்' ஒருவனை பொண்டாட்டி ஏமாற்ற ஒருவனுக்கு பெண் கர்ப்பம் (ஓட்டல் சர்வரிடம்) ஒருவனுக்கு டாக்ஸ் பயம் ஒருவனுக்கு மரண பயம் ஒருவனுக்கு கேன்சர் ஒருவனுக்கு ஒரு கிட்னி ஒருவனுக்கு மூணு படி மூச்சிறைப்பு ஒருவனுக்கு பேஸ் மேக்கர் ஒருவனுக்கு வேலை நிரந்தர பயம். இவை அனைத்தும் இன்றி மூக்கை நோண்டிக்கொண்டு பிளாட்பாரத்தில் பராக்கு பார்த்துக்கொண்டிருக்கும் நீ பாக்கியவான் !               கவிதை : விருத்தம் விஸ்வநாதன் அவர்கள்