சென்னை விமான நிலையமும்.... சில மனிதர்களும்...ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங். சந்தானம் அனுபவித்து சொன்னாரோ இல்லையோ... ரொம்பவும் நிஜமான வார்த்தைகள்... நண்பனின் அண்ணனை வழி அனுப்பி வைப்பதற்காக விமான நிலையம் வரை சென்று வர வேண்டியதாய் இருந்தது.  அப்போது அங்கு பராக்கு பார்த்து கொண்டிருந்தபோது சுற்றிலும் நிகழ்ந்த சிற் சில விஷயங்களில் என்னை ஈர்த்தவை. 

மனித உணர்வு மிக நுட்பமானது... பிரிவின் தருணங்களில்... அதுவும் மனதுக்கு பிடித்தவர் தன்னை விட்டு வெகுதூரம் செல்லும் பொழுதுகளில் அது கொடுக்கும் வலியும் அதன் பின்னான தனிமையின் நிழலும் மிகுந்த துயரம் நிறைந்தது... பொது இடங்களின் நாகரீகம் கருதி அதனை மனதினுள் அடக்கி வைக்கும் போது அதன் வலி இரு மடங்காகிறது...  கழுத்தில் உள்ள தாலி இன்னமுமே  மஞ்சள் காயாமல் புதிதாய் இருக்கிறது... புது சேலை.. புது நகைகள்... அந்த பெண்ணும் புதிதாய்  பிறந்தவள் போல... கடைசி மாதங்களில் அல்லது கடைசி வாரங்களில் அவள் புதிதாய் பெற்ற உறவும்.. புது அன்பின்... புது காதலின்..மிக புதிதான ஒரு அன்யோநியத்தை இவ்வளவு சீக்கிரம் இழக்க போகிறோம் என்கின்ற பரிதவிப்பு அந்த பெண்ணின்  விழிகளில் அப்பட்டமாய் வெளிப்பட... அவள் கணவன் எல்லோரிடமும் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு,  மீண்டும் பணியில் சேர  விமானம் ஏற தயாராகிறான். தன் மாமனார், மாமியார், புது குடும்ப உறவுகள் சுற்றிலும் இருக்க  ஏதும் செய்ய இயலாமல்  தன் புது கணவன் விமானம் ஏறுவதை பொம்மை பிடுங்கப்பட்ட ஒரு குழந்தையின் முகபாவத்தோடு அவள் பார்க்க... விழிகளால் அவளிடம் போய் வருகிறேன் என சொல்லிவிட்டு அவன் நடக்க துவங்க.. பொங்கி வரும் கண்ணீரை அடக்குவதற்காக தன் கழுத்து செயினை தன் பற்களால் கடித்துக்கொண்டு..... யதோச்சையாய் திரும்பி பார்த்த தன் கணவனிடம் சைகையால் போன் செய்ய சொல்லி தலையசைத்த அந்த பெண்ணின் காதலும் பாசமும்  ரொம்பவுமே புனிதம். 

பணி நிமித்தம் காரணமாக தன் ரத்த  சொந்தங்களை... நட்புகளை விட்டு ஏதோ ஒரு  கிராமத்தில் இருந்து  துபாய் செல்ல அந்த பையன் காத்திருக்க.. அவனை வழி அனுப்பி வைக்க வந்திருந்த அவனது கிராமத்து நண்பர்கள் அங்கிருந்த பேக்கரியில் டீ சாப்பிட்டு கொண்டே அரட்டையடிக்கும் பொது வெளிப்பட்ட நட்பின் வருடல்கள் அவன் எந்த தேசத்தில் எந்த சூழ்நிலையில் வசித்தாலும் மறக்கமுடியாத மயிலிறகு தடவல்கள். ஒரு சூழ்நிலையில் கிராமத்து நண்பன் ஒரு பாக்கெட் பிஸ்கட் கேட்டு பணம் கொடுக்க.. கடைக்காரன் பத்து ரூபாய் பிஸ்கட்டுக்கு பதினாறு ரூபாய்  வசூல் செய்ய.. (இப்படி ஒரு கொடுமை ஏர் போர்ட்டில் நடக்கிறது... ஒரு பொருளுக்கு இருமடங்கு விலை  அதிகம்... விமானத்தில் போவோருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது...MRP ரேட்டை விட அதிகம் விலை வைத்து விற்பதற்கு யார் அனுமதித்தார்கள்.. ஏர்போர்ட் வளாகத்தில் லட்சகணக்கான ரூபாய் லஞ்சம்  கொடுத்து காண்ட்ராக்ட் எடுத்து அந்த தொகையே ஈடு செய்ய நாம் வாங்கும் பத்து ரூபாயில் பொருளில் அநியாய கொள்ளை அடிக்கும் விற்பனையாளர்  மீது தவறா.. இல்லை லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீதா... எப்போதும் பாதிக்கபடுவது பரிதாபத்திற்குரிய  பொது ஜனம்தான்).மொத்த கிராமத்து நண்பர்களும்  கடைக்காரனோடு  மல்லுக்கட்ட... நிகழ்ந்த களேபரத்தில்.. கொஞ்சம் அப்பாவித்தனமும்... கொஞ்சம்  ஆவேசமும்...நிறைய நியாயமும்  வெளிப்பட்டது..

பாலகுமாரன் சார் தனது பயணிகள் கவனிக்க நாவலில் ஒரு விமானநிலைய நடவடிக்கைகளை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார்...  அந்த நாவலின் அடிநாதம் நான் பார்த்த நிறைய மனிதர்களிடத்தில் இருந்தது. தன் மனைவி இறந்த விஷயம் கேள்விபட்டு அவசர அவசரமாக அழுதபடி வெளிவந்த கோட் சூட்  அணிந்த  பிசினஸ் மேன் முகத்தில்... வாயில் நுழைய முடியா ஒரு சீன பெயரை.. அட்டையில் எழுதி வைத்தபடி.... போவோர் வருவோர் முகத்தை எல்லாம் ஏக்கமாய் பார்த்தபடி காத்திருக்கும் ட்ரேவல்ஸ்  டிரைவர் முகத்தில்... தன் காதலிக்காக ரோஜா   பொக்கேவோடு  காத்துகொண்டிருந்த தாடி வைத்த அந்த காதலன் முகத்தில்...  முதன் முறை விமானம் பார்க்கும் குழந்தையின் பரவச முகத்தில்...  நிஜம்தான்... ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்....  

Comments

 1. MRP ரேட்டை விட அதிகம் விலை வைத்து விற்பதற்கு யார் அனுமதித்தார்கள்.. ஏர்போர்ட் வளாகத்தில் லட்சகணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்து "

  இதை எல்லாம் தட்டி கேட்க்க யாரும் வந்தால் அவருக்கும் தனியாக லஞ்சம கொடுக்கவேண்டி வரும்
  இதுதான் இந்தியா என சொல்லி போக வேண்டியாதுதான்

  ReplyDelete
 2. இது எல்லாம் உண்மை.. நானும் வரும்போது இந்த அனைத்தையும் அனுபவித்தேன்...

  ReplyDelete
 3. arumaiyana bathivu. vazthukkal nanbare!
  nanum intha anubavathai en vazvilium anubavithirikkiren.

  ReplyDelete
 4. Back to Form??????.

  all the Best da

  ReplyDelete
 5. கொஞ்சம் அப்பாவித்தனமும்... கொஞ்சம் ஆவேசமும்...நிறைய நியாயமும் வெளிப்பட்டது.. //

  நகரவாசிகளுக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கும் அநியாயம் என்று நினத்தாலும் கொடுத்துவிடுவார்கள் தட்டி கேட்க மாட்டார்கள். அந்த துணிவின்மையை நியாயப்படுத்த காரணம் சொல்வார்கள் ஆனால் கிராமத்தான் அப்படி அல்ல.அவன் ஊரில் சுதந்திரமாக வாழ்ந்து பழகியவன். அவன் கேட்டது நியாயம். ஏர்போர்ட் ல் நடப்பது அந்நியாயம். எது எப்படியோ உங்களுடைய எழுத்துநடை படு சூப்பர் அவ்வளவுதான் நான் சொல்வேன்.

  ReplyDelete
 6. விமான நிலையத்தில் கவனித்த விஷயங்களை, நீங்கள் எழுதியிருந்த விதம் அசத்தலாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்களேன்!

  ReplyDelete
 7. 2 ம் பந்தியில் சொல்லப்பட்டது நமது இந்திய ,இலங்கையருக்கே அதிகம் பொருந்துவது; மிகப் பரிதாபமானது.திரை கடலோடியும்; எதைத் தொலைத்தும் பணத்தைத் தேடினாலே பவிசும்; வாழ்வுமென்று ஆன தேசங்களல்லவா?
  ஏனையவை எங்கும் பொதுவானதே!
  விமான நிலைய விலையென்பது எங்கும் இப்படிதான் போலும்; பிரான்சில் "கட்டுப்பாட்டு விலை " என அரசு எதையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் விமான நிலையங்களில், தொடர்வண்டி நிலையங்களில் அதிக விலை கொடுத்தே ஆகவேண்டும்.

  ReplyDelete
 8. நான் கடந்த எட்டுவருடங்களாக விமான நிலையத்துக்கு அழைக்கவோ, அனுப்பவோ செல்கிறேன். நான் மிகவும் விரும்பி ரசிக்க கூடிய இடம் அது ...

  ReplyDelete
 9. HAI ARUMBAAVOOR,
  HAI ABDULLA SIR,
  HAI SAIYED MOHAMMAD ASAD,
  HAI THANGAMANI,
  HAI INIYAVAN,
  HAI JOHAN,
  HAI MOHAN SIR,
  HAI KRP SENTHIL SIR...

  MANY THANKS FOR YOUR SWEET COMMENTS.

  MANO

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4