Posts

Showing posts from May, 2012

நொறுக்கு தீனி - 4 (20.05.12)

Image
தத்து பித்து


out of form -  இந்த வார்த்தை கிரிக்கெட்டில் மட்டுமல்ல... வாழ்கையிலும் அவ்வப்போது இயல்பாய் நிகழக்கூடிய ஒன்று. சில சமயங்களில்,  எல்லாம் வெறுத்து.. என்னடா வாழ்க்கை இது என நினைக்க தோணுமே... அதேதான்! எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கும்... தீடிரென ஒரு வெறுப்பு...குழப்பம்.. .தினசரி நடவடிக்கைகளில் ஒரு ஈடுபாடு இல்லாமை... ஒரு தேக்கம்... ஒரு speed breaker போல...  எல்லோரும் சில சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சனை இது. நன்றாக எழுதிக்கொண்டிருப்போம்.. .தீடிரென  எந்த இழவுமே தோன்றாது. வீம்புக்காய் எழுதினாலும்.. எழுதிய பின் படித்து பார்த்தால்....  நாமே காறி துப்பலாம் போல அவ்வளவு கன்றாவியாய் இருக்கும். out of form. எழுத்தாளன், நடிகன்,  விளையாட்டு வீரன்... சராசரி மனிதன் என பாகுபாடின்றி எல்லோரும் சந்திப்பது...


 தீர்மானிக்க முடியா ஒரு புதிர்தான் வாழ்க்கை.. நாளை என்ன நடக்கும் என்று ஒருத்தனுக்கும் தெரியாது...  நாளை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் தேமேயென சொங்கி போக வைக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்வதல்ல இந்த பதிவின் நோக்கம்.. பிரச்சனை எனக்கும் இருக்கிறது என ஒப்புக்க…

மிக எதிர்பார்ப்புக்குரிய 10 படங்கள்

Image
10.கும்கி

வனமும் வனம் சார்ந்த விஷயங்களும் எப்போதுமே அலுக்காதவை...   காட்டுக்குள்  ஒரு ட்ரெக்கிங் போகும் உற்சாகத்தை கொடுத்த மைனாவின்  கதை களம்தான்  அதன்  வெற்றிக்கு முக்கிய காரணம். அதே குளு குளு மலை சாரலின் பின்னணியில் பிரபு சாலமனின் அடுத்த படம். வித்தியாசமான   முயற்சிகளுக்காக மெனக்கெடும் பிரபு சாலமனுக்கு எட்டாக்கனியாக இருந்த வெற்றி மைனாவின் மூலமாய் கிடைத்ததை கும்கி தக்க வைத்துக்கொள்ளுமா என்பதை பார்ப்போம்.  கதையின் முடிவு ட்ராஜிடியாய் இருக்க வேண்டும் என்பதற்காக... கிளைமாக்சில், ஹீரோயினை... யானை தூக்கி வீசி பந்தாடாமல் இருந்தால் சரி. 


09.தாண்டவம்

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும்   விக்ரமிற்கு இந்த படமாவது ஆறுதலை தருமா  என்பதுதான் இப்போதைய  மில்லியன் டாலர் கேள்வி. என்னதான் உயிரை கொடுத்து நடித்தாலும் நடிக்கிற படங்கள் எல்லாம் பப்படம் ஆகிக்கொண்டு வருவதை சீயான் உணர்ந்திருப்பார் போல... அதுதான் ஷங்கரை தேடி சென்று வாய்ப்பை கேட்டு பெறுமளவிற்கு செய்திருக்கிறது. சினிமாவில் ஒரு ஹிட் எல்லாவற்றையும் புரட்டி போட்டு விடும். மதராசபட்டினத்தில் சுவாரசியமான திரைக்கதை செய்த…

நொறுக்கு தீனி - 3 (13.05.12)

Image
வாரா வாரம் ஆரவாரமாய் எழுத வேண்டும் என தொடங்கியது இந்த பகுதி... என் சோம்பேறித்தனமா.....இல்லை உங்கள் நல்ல நேரமா என தெரியவில்லை... இவ்வளவு நாள் எழுதாமல்,  அதிகம் படிக்காமல் விட்டதால்,  மண்டையில் ஒட்டடை படிந்து நானே.... எதோ பழசான பொருளாய் மாறிப்போனது போல ஒரு உணர்வு. இனியும் நேரம் கடத்துவதாய் இல்லை.

வாழ்க்கை ஒரு வட்டம்டா.....

மெட்ராஸ் வெய்யிலில் வருபட்டுக்கொண்டிருப்பவனுக்கு கோயம்புத்தூர்காரனை பார்த்தால் ஒரு ஆதங்கம்.. இவனுக மட்டும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்துல குளு குளுன்னு வாழ்ந்துட்டு இருக்கானுக.. சிறுவாணி தண்ணி குடிச்சுட்டு குஷியா இருக்காங்கன்னு.. கோயம்புத்தூர் காரனுக்கு மெட்ராஸ் காரனை பார்த்தால் ஒரு கோபம்.. .. இவங்களுக்கு  மட்டும் ரெண்டு மணி நேரம் மட்டும் பவர் கட். ஆனா நமக்கு  எட்டு மணி நேரம்...  என்ன கொடுமை டா... ராமான்னு.. இந்த ரெண்டு பேரையும் பார்த்துட்டு நக்கலா ஒரு சிரிப்பு சிரிக்கிறான் புதுக்கோட்டை காரன்.. எங்களுக்கு பவர் கட்டே கிடையாது... வெயில் அடிச்சாலும் சில்ல்ன்னு பீர் குடிக்க இலவசமா வீட்டுக்கு வீடு காசு வேற தராங்கனு...  

ரயில் வருது... ரயில் வருது...ஒரு நகரி…

வழக்கு எண் 18/9 - விமர்சனம்

Image
வாழ்வியல் யதார்த்தங்களை மீறிய மிகைபடுத்தப்பட்ட சம்பவங்களும், கற்பனை கூட செய்து பார்க்க முடியா தனி மனித சாகசங்களுமாய் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.. இந்த பொய் பிம்பங்கள் யாவும் உண்மை என நம்மை  நம்ப வைத்து  நம் மூளை மழுங்க செய்து, அதன் போதையிலேயே கனவில் வாழ்க்கை நகர்த்த வைக்கும் வியாபார சினிமா தந்திரங்களுக்கு  மத்தியில் இந்த மாதிரி படங்கள் கடவுள் போல... காணக் கிடைக்கா வரம்.  தரையில் கால் வைத்து நடப்பதுதான் யதார்த்தம்.  இந்த படைப்பு உங்கள் கை விரல் பிடித்து இரண்டரை மணி நேரம் வாழ்வின் யதார்த்த அழகியலையும், அவலத்தையும் ஒருங்கே காட்டிச்செல்கிறது. 
ஒரு படத்தின் தரம் என்பது,   ஐம்பது கோடி, நூறு கோடி பட்ஜெட், ஸ்டார்  வேல்யு,  ஹை டெக் டெக்னாலஜி,  வெளிநாட்டு லொக்கேஷன்கள் போன்றவைதான் என  தீர்மானிக்கும் கூட்டங்களுக்கு நடுவே, எந்த விதமான பிரம்மாண்டங்களும், ஸ்டார் வேல்யுவும் இன்றி,  அறிமுக நடிகர்களை கொண்டு,  அற்புதமாக  கதை சொல்லியிருக்கும் பாலாஜி சக்திவேல் உலக சினிமா இயக்குனர்கள் வரிசையில் தானும் வரும் தகுதியே வளர்த்துக்கொண்டிருக்கிறார். 


விகடனில், "ஒரு நல்ல சினிமா…