Posts

Showing posts with the label இசை

டிசம்பர் தமிழ் சினிமா இசை - ஒரு பார்வை

Image
வருடம் முழுதும் மழை பொழிந்தாலும் ஒவ்வொரு முறையும் மேல் விழும் துளி புதிதுதான்... இசையும் அப்படிதான்.... "ச ரி க ம ப த நி" என  அதே ஏழு ஸ்வரங்கள்... ஆனால் கொடுக்கும் அனுபவங்கள் ஒவ்வொரு முறையும் புதிதுதான்.... காதல் பிரிவின் வலியில், ஒற்றை குரலாய் கேட்டு பழகிய யுவனின் குரலை ஒரு பெப்பியான டூயட் பாடலில் கேட்கவே படு  உற்சாகமாக இருக்கிறது. "பப்பபப்ப " பாடலின் மெட்டும், யுவன் ரேணு குரலில் தெறிக்கும் உற்சாகமும் 2012 ன் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில்  சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.  இரவில் உங்கள் அன்பிற்கினியவர் மடி சாய்ந்து ஒரு தாலாட்டு கேட்கும் சுகத்தை தருகிறது " நிலா நிலா" பாடலும் "உன்னை கொல்ல போறேன்" பாடலும்.   ஹரிணி, பவதாரணி குரல்கள் கடவுளின் கொடை என்றால் அதை கேட்க வாய்த்தது நமக்கு கிடைத்த வரம். முதல் படத்திலேயே ஈர்க்க வைத்து இன்னமும் எதிர்பார்க்க வைக்கிறார் இசையமைப்பாளர் கார்த்திக்.  ராஜாவின் எண்பதுகளின் கிளப் டான்ஸ் பாடல்களை நினைவுபடுத்தும் ஆர்க்கெஸ்ட்ரேஷன் "லட்டு லட்டு " பாடலின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட். அதே...

யார் உண்மையான AIRTEL சூப்பர் சிங்கர்?

Image
வருட கணக்கில் இழுக்கும் மெகா சீரியல்களை விட மனசுக்கும் செவிக்கும் நன்மை பயந்த நிகழ்ச்சி. விஜய் டிவி நடத்திய AIRTEL SUPER SINGER PROGRAMME. எத்தனை எத்தனை வித விதமான பாடகர்கள்... பாடல்கள்...   இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் நிகழ்ந்த சில சுவையான நிகழ்வுகள் இங்கே... ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சி களை கட்ட ஆரம்பித்து விட்டது. சுஜாதா அவர்களின் மகளும், ஸ்ரீநிவாஸ் மகளும் இணைந்து பாடிய பாடல்கள் அத்தனையும் அவ்வளவு இனிமை. முக்கியமாக சுஜாதா மகளின் குரல் ஒரு லிட்டர் தேனை காதுக்குள் ஊற்றியது போல அவ்வளவு சுவை.  அதே போல போட்டி முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாக பாட வந்த அல்கா அஜித் குரல் வாய்ப்பே இல்லை. "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலை அந்த சின்ன பெண் பாட பாட என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர். DIVINE.   நிகழ்ச்சி நடந்த TRADE CENTER முழுக்க ஏகப்பட்ட பிரபலங்களின் தலைகள். அவர் ஒரு கடம் வித்வான் என்று நினைக்கிறேன்... நிகழ்ச்சிக்கு கடம் கொண்டு வராத காரணத்தினாலோ என்னவோ ஒவ்வொரு பாட்டுக்கும் தலையாலே கடம் வாசித்து கொண்டிருந்தார்.  ...

தமிழ் சினிமாவில் தற்போது முனுமுனுக்க வைக்கும் சூப்பர் ஹிட் பாடல்கள் - ஒரு பார்வை.

Image
இசையால் வசமாகா இதயமுண்டோ....?  காலை நேர வாக்கிங்கில்  நம்மோடு ஆரம்பித்து, அலுவலகம் செல்லும் வழி எங்கும் கூடவே பயணம் செய்து, இடைவேளைகளில்       இளைப்பாற வைத்து...  மாலை நேர உற்சாகங்களை இரட்டிப்பாக்கி... இரவு நம்மை தூங்க வைத்து தாலாட்டும் வரை... இசை ஒரு தாய்.  எத்தனை டென்ஷன் இருந்தாலும், கவலைகள் இருந்தாலும், ராஜாவோ, ரஹ்மானோ, யுவனோ.......  நம் செவி வழி நுழைந்தால் போதும்...... மனம் லேசாகும். நம் உடலையும்... மனசையும் RE-FRESH செய்யும்  நல்ல மருத்துவர்கள் அவர்கள். இசையால் நம்மை வசப்படுத்த, தமிழ் சினிமாவில் நிறைய புதியவர்கள் வந்திருப்பது, இசை பிரியர்களை சந்தோஷபடுத்தும் நல்ல செய்தி. எழுத  நேரம் கிடைக்காத காரணத்தினால், நிறைய நல்ல ஆல்பங்களை பற்றி பகிர்ந்து கொள்ள முடியாமலேயே போய் விட்டது. தற்போது என்னை முனுமுனுக்க  வைக்கும் சில பாடல்கள் உங்களுக்காக.... கார்த்திக்கின் குரல் எப்போதுமே ஸ்பெஷல். அதுவும் காதல் பாடல்கள் என்றால்.... ஐஸ் க்ரீமாய் கரையும். "வேங்கை"யில்   வரும்  "காலங்கார்த்தாலே" பாடல் வெரி இ...

மங்காத்தா - இசை விமர்சனம்

Image
வெங்கட் பிரபு,  யுவன் கூட்டணி என்றாலே உற்சாகமான இசைக்கு குறை இருக்காது. இதில் அஜித் வேறு இணைந்தவுடன் எதிர்பார்ப்புகள் எவரெஸ்ட்  உயரத்திற்கு எகிற... மங்கத்தா இந்த எதிர்பார்ப்புகளை முழுமை படுத்தியிருக்கிறதா.... ?  முதல் பாடல் "விளையாடு மங்காத்தா " ஏற்கனவே ஒற்றை ஆல்பமாக வெளிவந்து ரசிக கண்மணிகளின் பல்ஸ் பார்த்தது. தல ரசிகர்களை மட்டுமே உசுப்பேற்றும் அந்த பாடல் இசை ரசிகர்களை அவ்வளவாக இம்ப்ரெஸ் செய்யவில்லை என்பதே உண்மை. அனால் அந்த ஆரம்ப இசை செம மிரட்டல்.  ஆல்பத்தின் இரண்டாவது பாடல் " நீ நான் " நல்ல மெலடி. SPB  குரலில் இருக்கும் ஒரு தனித்துவம்  அவரது மகன் குரலிலும் தொடர்வது சிறப்பு. நிரஞ்சன் பாரதியின் அழகான வரிகளும், சரண், பவதாரணி மயக்கும் குரல்களும்  இப்பாடலின் ஸ்கோரை ஏற்றுகிறது. பல்லவியில் ஆரம்பிக்கும் வசீகரம், சரணத்தில் தொலைந்து போவதுதான் கொஞ்சம் வருத்தம்.   கோவாவில் கேட்ட " இடை வழி " பாடல் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இதில் "வாடா பின்லேடா" ஆகியிருக்கிறது. சுசித்ரா குரலில் இருக்கும் ஒரு போதை இப்பாடலின் பிளஸ்.   ஆர்கேஸ்ட்ட்ரஷனில் ந...

யுவனின் அசத்தல் இசை - "பேசு" - இசை விமர்சனம்.

Image
F.M. என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. நல்ல இசைக்கு நடுவே தேவையற்ற விளம்பரங்களும், அரட்டைகளும் நிரம்பி வழியும் இடியட்  பாக்ஸ் அது. ஆனால் அதே F.M. யுவனின் அற்புதமான இசையே எனக்கு அறிமுகபடுத்தி வைத்தது... தேங்க்ஸ் FM .  யதோட்சையாக FM  கேட்க நேர்ந்த போது, "I HAVE A DREAM" என யுவன் உருகிக்கொண்டிருந்தார்.   என்னடா இது...மனுஷன் சொந்த குரலில் இனிமேல் பாடமாட்டேன் என்றாரே...இதுவரை கேட்டறியாத புது பாடலாக இருக்கிறதே என தோண்டி துருவியதில்.. யுவனின் லேட்டஸ்ட் ஆல்பம் "பேசு". இப்படி ஒரு படம் வரவிருக்கிறது  என்று  இதுவரை எந்த தகவலுமே இல்லை. ஆனால் பாடல்களை தரவிறக்கம் செய்து கேட்டதில் எல்லாமே... அட்டகாசமாக அதுவும் காதல் பாடல்களாக இருக்கிறது.  முதல் பாடலான " I HAVE A DREAM" ஆல்பத்தின் மோஸ்ட் வாண்டட் சாங். யுவனின் குரலில் காதல் ஐஸ் கிரீம். மெட்டும் அற்புதமாக இருக்கிறது.  ஆல்பத்தின் அடுத்த காதல் ஐஸ் கிரீம், ராகுல் நம்பியார், ரீட்டா  குரல்களில் "இதயம் பேசுதே" மென்மையான மெலடி... அதிலும் இடையில் வரும் அந்த பெண்ணின் ஹம்மிங் உங்கள் இதயம் கரைத்து அப்படியே உருக்கி விட...

வ- குவார்ட்டர் கட்டிங் - இசை விமர்சனம்

Image
வித்தியாசமான மேக்கிங்கும், படம் நெடுக வரும் காமெடியும் ஓரம்போவை மற்ற திரை படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது. அதன் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் அடுத்த முயற்சிதான் வ - குவார்ட்டர்  கட்டிங். ட்ரைலர் மற்றும் பாடல்கள் இதுவும்  வேறு மாதிரியான படம் என்பதை உணர்த்துகிறது. உன்னை கண் தேடுதே - பிரகாஷ் குமாரும், கான உலகநாதனும் இணைந்து பாடியிருக்கும் டீசென்டான ரீமிக்ஸ்  பாடல். வரிகளில் 5000 பீரின் நுரையே போல, சரக்கின் அருமை பெருமைகள் பொங்குவது இன்னமும் பிளஸ். தேடியே தேடியே   -  ஆண்ட்ரியாவின், ஒயினில் நனைத்த குரல் கொஞ்சம் சைடு டிஷ் போல ரொமான்ஸ் கலந்து ஏகத்துக்கும்  கிக் ஏற்றுகிறது. ஆர்க்கெஸ்ட்ரேஷன் எளிமையாக இருந்தாலும் மெட்டின் வசீகரம் ரசிக்க வைக்கிறது. சவூதி பாஷா -  பாடலில் கவிஞர் அவதாரம் எடுத்திற்கும் சிவாவின் வரிகளில்  இருக்கும் உற்சாகமும், அரேபிய ஸ்டைல் இசையும்  ஒரு குவார்ட்ர் அடித்ததற்கு  ஒப்பான மன நிலையே தந்து களிப்பூட்டுகிறது. ஷார்ப்பு ஷார்ப்பு - ஆல்பத்தின் தீர்த்த திருவிழா. நண்பர்களுடன் ஆட்டம் போட்டு விளையாட வைக்...

எந்திரன் - இசை விமர்சனம்

Image
 1995 ம் வருடம்.  என்னுடைய விடலை பருவம்.  ரஜினி என்றால் ஏதோ சொல்ல தெரியாத ஈர்ப்பு. ஒரு பரவசம். அவரை போலவே, தலை கோதி, நடை பழகி, அவரின் பாடல்களை மனப்பாடம் செய்த  தினங்கள். அதே கால கட்டத்தில் ரஹ்மான் என்னும் புயல் புது புது மெட்டுக்கள், இதற்க்கு முன் கேட்டறியாத இசை கருவிகளின்  வினோத  ஒலிகள், என தனக்கென ஒரு இசை சாம்ராஜியத்தை நிறுவிய நேரம். இந்த இரண்டு தலைகளும் ஒன்று சேர்கிறார்கள் "முத்து" படத்திற்காக. மொத்த தமிழ் நாடும் அந்த பட பாடல்களை கேட்க மிக ஆவலாக இருந்தது. ஏனெனனில்  வழக்கமான ரஜினி பட பாடல்கள் ஒரே மாதிரி TEMPLATE  ஆக இருக்கும். ஆனால் ரஹ்மானின் இசை வேறு வகை. இவர்கள் இருவரும் சேரும் போது அதில் யாருடைய ஆதிக்கம் இருக்கும் என்பது எல்லோருக்குமான சந்தேகம்.  ஆனால், அப்போதைய ரஹ்மான் புத்திசாலித்தனமாக, தனது தனித்தன்மையையும் விட்டு கொடுக்காமல், ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும் போட்ட மெட்டுக்கள்  பட்டி தொட்டி எங்கும் தில்லானா  தில்லானா என பட்டையே கிளப்பியது. "குலுவாலிலே" அக்மார்க் ரஹ்மான் ஸ்டைல் ரஜினி பாடல்.  ஆனால் நாளாக நாளாக ரஜி...

கனிமொழி - இசை விமர்சனம்

Image
சில ஆல்பங்களுக்காக  காது மேல் காது வைத்து காத்திருப்போம். ஆனால் அது சொதப்பி விடும்.(உதாரணம் : தில்லாலங்கடி)  சில ஆல்பங்களை  எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி போகிற போக்கில்  கேட்போம். அது அப்படியே உயிரை  கரைத்து பெவிகால் போட்டு மனசுக்குள் அமர்ந்து கொள்ளும் (உதாரணம் : மின்னலே). அந்த வரிசையில்  இதோ ஒரு பரவச ஆல்பம் ' கனிமொழி'   முதலில், இந்த பட பாடல்களை கேட்க எனக்கு எந்த ஒரு தூண்டுதலுமே ஏற்படவில்லை. யதோட்சையாக இதன் இசையமைப்பாளர் "சதீஷ் சக்ரவர்த்தி" என்ற பெயரை பார்த்ததுமே மனதில் ஒரு பொறி. 'லீலை' (படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை) இவருக்கு மிக சிறந்த விசிட்டிங் கார்டு. அதில் வரும் "ஜில்லென்று ஒரு கலவரம்" மற்றும் "பொன் மாலை பொழுது" இரண்டும்  என்னுடைய ஆல் டைம் FAVOURITE SONGS . அதில் பத்து அடி பாய்ந்திருந்தால் இதில் 20  அடி பாய்ந்திருக்கிறார் சதீஷ்.  முதல் பாடல் "பெண்ணே போகதே" இந்த ஆல்பத்துக்கு ஒரு திருஷ்டி போல. அதை விட்டு தள்ளுங்கள். அதற்க்கு பிறகு வரும்  பாடலான "முழு மதி"  விஜய் யேசுதாஸ், பெலே ஷிண்டே குரல்களில் தித்திக்கிற ஸ்...

நான் மகான் அல்ல - இசை விமர்சனம்

Image
யுவன் ஷங்கர் ராஜா - காதலுக்காக நேர்ந்து விடப்பட்ட இசையமைப்பாளர். மற்ற பாடல்களை விட காதல் பாடல்களை, அதுவும் யுவன் குரலில் கேட்கும் போது மிக எளிதாக மனசுக்கு நெருக்கமாகி விடும். துள்ளுவதோ இளமையில் நிஜமாகவே அதிகம் துள்ளியது, துள்ள வைத்தது  யுவனின் இசைதான். அதில் ஆரம்பித்து இதோ நான் மகான் அல்ல வரை அவரின் குரல்களில் கேட்கும் பாடல்கள் எல்லாமே  ஒரு வித ஈர்ப்பை, ஒரு சந்தோஷத்தை, கூடவே சேர்ந்து பாடும் விருப்பத்தை கொடுக்கின்றன.  "வா வா நிலவ புடுச்சு" : ராகுல் நம்பியார் குரலிலும், நா.முத்து குமார் வரிகளிலும் அவ்வளவு உற்சாகம். "வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு" என நம்மையும் சேர்ந்து பாடவைக்கும் நல்ல ENERGETIC SONG. எல்லோருக்கும் பிடித்தமான மெட்டு பாடலை எளிதாக ஹிட் லிஸ்டில் சேர்த்து விடும்.   காதலுக்கும், காதலர்களுக்கும் யுவனின் அடுத்த டெடிகேஷன் "இறகை போலே" . யுகபாரதியின் வரிகளும், யுவனின் காதலை கொஞ்சும் குரலும்,வித்தியாசமான அந்த     இன்ஸ்ட்ருமெண்டல் பிட்டும்.. அப்படியே  மெஸ்மரிசம் செய்து அந்த பாட்டுக்கு நம்மை  அடிமையாக்கி விடுகிறது. ஹய்யோ.. இன்னு...

புலி - இசை விமர்சனம்

Image
ரஹ்மான் இசையில்  முதல் நேரடி தெலுங்கு படம். ஆல்பம்  ரீலிசாகும் வரை  நகம் கடித்து காத்திருந்த டோலிவூட்  பாடல்களை கேட்டவுடன், சூப்பர் என்றும்  படு மொக்கை என்றும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது. நம்மை பொறுத்தவரை  ஆறில் மூன்று  பாடல்கள் வெகு அமர்க்களம்.   நல்ல இசை கேட்பதற்கு மொழி ஒரே தடையே இல்லை.  தெலுங்கில் எனக்கு நன்கு தெரிந்த ஒரே வார்த்தை ஜருகண்டி.. ஜருகண்டி.. (திருப்பதி புண்ணியத்தில்). இருந்தும் பாடல்களை ரசிக்க முடிவதற்கு  காரணம் ரஹ்மான் என்னும் மந்திரச் சாவி. இந்த ஆல்பம் ஒரு ஸ்லோ பாய்சன் போல.. கொஞ்சம் கொஞ்சமாய் கேட்பவரை தன்வச படுத்தி விடும். POWER STAR -  ஹீரோவின் INTRO பாடல் போலிருக்கிறது.  பாட்டின் ஆரம்பத்தில் ஹாரிஸ் ஸ்டைலில் வரிகள் புரியாமல் கயா முயா என்கின்ற பெண்ணின்  குரல் சற்றே வயிற்றை கலக்கினாலும், போக போக கேட்க முடிகிறது. விஜய் பிரகாஷ் கொஞ்சம் ரொமாண்டிக்கான ரகசியம் பேசும் குரலில் பாடியிருப்பதை ரசிக்கலாம்.  AMMA THALE -    நிச்சயம் 'அம்மா தலே' ஆந்திராவையே ஆட வைக்க போகிறது. அட்டகாசமான ...

தில்லாலங்கடி - இசை விமர்சனம்

Image
  தெலுங்கில் காட்டுதனமாய் ஓடிய "கிக் " தமிழில் தில்லாலங்கடியாக மாறியுள்ளது. தெலுங்கு பட வெற்றிக்கு அதன் இசையமைப்பாளர் தமனும் ஒரு காரணம்.  தமிழில்  யுவன் ஷங்கர் ராஜா. பாடல்கள் சற்றே சுமார் ரகம்தான்.என்ன ஆச்சு யுவன்? சித்ரா தன் மயக்கும் குரலில் பாடியிருக்கும் "சொல் பேச்சு கேட்காத " பாடல் கேட்கும் ரகம். பாடல் முழுக்க நல்ல ஆர்க்கஸ்ட்ரேஷேன். ஆனால் இந்த ட்யுன் ஏற்கனவே கள்வனின் காதலியில் கேட்ட ஒன்று.  விஜய பிரகாஷ், நவீன் பாடிய 'டிங் டிங்" பாடலும், சிம்பு, மன்சி ஸ்கூட் பாடியிருக்கும் "பாட்டு பாட்டும்"  கேட்க கேட்க பிடித்து போகலாம். அந்த இடைவிடாத முயற்சியே சன் பிச்சர்ஸ் பார்த்துக்கொள்ளும்.     "இதயம் கரைகிறதே"  ஸ்ரீ வர்தினியின் குரலில் நிஜமாகவே இதயம் கரைகிறது.   .ஆனால் இந்த மெட்டையும்   வேறு எந்த படத்திலோ கேட்ட ஞாபகம். மொத்தத்தில் ஏழு பாடல்கள் இருந்தும் சூப்பர், தூள் என சொல்லகூடிய அளவுக்கு எந்த பாடலும் இல்லை என்பது வருத்தமே. யுவன் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதால் பாடல்களை எப்படியும் ந...

அய்யனார் - இசை விமர்சனம்

Image
குத்து பாட்டில் கூட வெஸ்டர்ன் டைப் இசையே மட்டுமே  கொடுத்து வந்த தமனுக்கு முதல் பரீட்சை. அய்யனார்  வில்லேஜ் சப்ஜெக்ட் என்பதால் இளையராஜாவின் உதவியோடு கொஞ்சம் சமாளித்திருக்கிறார். முதல் பாடலான, "குத்து குத்து"   முன் வரிசை ரசிகர்களை ஆட வைக்கும் குத்து எனினும், சரணம், கரகாட்டகாரன் "ஊரு விட்டு ஊரு வந்து" மெட்டில்  அட்சரம் பிசகாமல்  TRAVEL செய்வதை தமன் கவனித்திருக்கலாம்.   ஈரத்தில் ஐஸ் கிரீம் குரலில் செவிகளை நனைத்த ரஞ்சித் இதில்  பிரியதர்ஷினியுடன்  இணைந்து பாடும் "பனியே" ஒரு அழகான ஜில் ஜில் டூயட்.    பாடல் முழுதும் வரும் வயலின்கள் பீட்டும்,  ரகசியமான அந்த  ரொமான்ஸும் ரொம்ப அழகு. இதிலும் ராஜா சாரின் சாயல் வருவது ஏனோ..?  "ஆத்தாடி " தமனின் அடுத்த பட்டாசு.  கொஞ்சம் வெஸ்டர்ன் ஸ்டைல் மெட்டும்,  கிராமிய காதல் வரிகளும்  கொண்ட ஒரு பக்கவான காக்டெயில்.   நவீனின் குரலில் இனி அடிக்கடி F .M களில் கேட்கலாம்.   ராகுல் நம்பியார் குரலில் வரும் " பச்சை கிளி" குடும்ப உறவுகளின் உன்னதத்தை சொல்லி செல்கிற...

காதல் சொல்ல வந்தேன் - இசை விமர்சனம்

Image
 காதல் சொல்ல வந்தேன்  - இசை விமர்சனம் காதலை கொண்டாட யுவன் இசையில் வித விதமாய் 5 காதல் பாடல்கள். யுவனின் வசீகர மெட்டும், நா. முத்து குமாரின் மயக்கும் வரிகளும் கலந்த அழகான காதல் பொக்கே இந்த ஆல்பம்.  ஆரம்பமே அமர்க்களம்....  ஓ ஷலா.. என யுவனின்  குரலில் காதலின் உற்சாகம் பொங்கி வழிகிறது...  மிக எளிதாக ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கும் தகுதி உண்டு.  அன்புள்ள சந்தியா.. . கார்த்திக் குரலில்.. ஒரு காதல் கடிதம் படித்த உணர்வு.. சரணத்தில் முத்து குமாரின் வரிகள் அவ்வளவு அழகு. காதல் என்றாலே மனுஷன் பின்னி எடுக்கிறார்.  ஒரு வானவில்லின் பக்கத்திலே - உதித் நாராயண் குரலில் குறும்பும், இளமை துள்ளலும் நிறைந்திருந்தாலும் தமிழை அவர் உச்சரிக்கும் விதம்தான் வயிற்றை ஏதோ செய்கிறது.  என்ன என்ன ஆகிறேன்.. விஜய யேசுதாஸ் குரலில் மென்மையான காதல் பயணம். சாமி வருகுது   - அட ராமா... என்ன கொடுமை இது. "எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது" என்கின்ற ஐயப்ப சாமியின் பிரபலமான பாடல் மெட்டில் காதல் பாடல்... ஐயப்பன் மன்னிப்பாராக...   ரொம்ப நாளைக்கு பிறகு, ஒரு ஆல்பம...

அரிது அரிது - இசை விமர்சனம்

Image
 வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் தமன் ஒரு  முக்கியமான நபர். வித்தியாசமான மெட்டுக்களும், மெனக்கெடல்களும் தவறாது  இவரது இசையில்  இருக்கும். இவரின் புதிய ஆல்பம் இது. ஆறு பாடல்கள். எந்த ஒரு டூயட்டும்  இல்லாமல் ஆண் குரலில் 3 சோலோ. பெண் குரல்களில் 3 சோலோ.  பெண்கள் குரலில் வரும்  மூன்று  பாடல்களிலும் வெஸ்டர்ன் இசை கொடி கட்டி பறக்கிறது. இளசுகளை குறி வைத்து அடித்து துவைத்திருக்கிறார் தமன். ஷங்கரிடம் உதவி இயக்குனாராக இருந்த மதிவாணன்  இப்படத்தின் இயக்குனர். எல்லா பாடல்களையும் இவரே எழுதியிருக்கிறார். ஆங்கில பாடல் வரிகளுக்கு மத்தியில் போனால் போகிறதென கொஞ்சம் தமிழ் வார்த்தைகளும் வருகிறது. முக்கியமாய் உஜ்ஜைனி குரலில் வரும்  "SATURDAY " பாடல் பார்ட்டி உற்சவம் என்றால், "மிஸ்ஸிங் யு" ரீட்டா குரலில் மென்மையான பீட்டோடு கண்கள் மூடி லயிக்க செய்யும் அசத்தல்      டியுன்.  இரண்டு பாடல்களுமே எதோ ஒரு பாப் ஆல்பம் கேட்கும் உணர்வை கொடுக்கின்றன. தமனின் ஆஸ்தான பாடகி சுசியின் குரலில் வரும்  "ஊ லலாளி"   வழக்கமான தமன் சமையல்...

சிங்கம் - இசை விமர்சனம்

Image
  "ஆறு"க்கு  பிறகு  தேவி ஸ்ரீ பிரசாத், ஹரி, சூர்யா கூட்டணி இணைந்திருக்கும் படம். ஒரு மசாலா படத்திற்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்திருக்கிறார் DSP. ஆல்பத்தில் குறிப்பிட வேண்டிய பாடல், பாபா சீகல் குரலில் வரும் " காதல் வந்தாலே" . இது வில்லு பட " வாடா மாப்பிளை" யின் அச்சு அசலான காப்பி  என்றாலும்  ரிதத்திலும், வித்தியாசமான இன்ஸ்ட்ருமேண்ட்டல்  தேர்வும் நம்மையும் அறியமால் தாளம் போட வைக்கிறது. நிச்சயம் ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கும்.  சாதாரணமான மெட்டு கூட சுசித்ரா பாடும் போது கொஞ்சம் ஸ்பெஷல் ஆகி விடுகிறது. ஹஸ்கி வாய்சில் அவர் பாடும் " என் இதயம்"   பாடல் அவரின் குரலுக்காக கேட்கலாம்.  ராகங்களை வளைத்து, நெளித்து, குழைத்து படுவதில் "ஷான்" ரொம்பவுமே பிரபலம். "SHE STOLE MY HEART" பாடலில் அதற்க்கு அவ்வளவு வேலை இல்லை என்றாலும் வெஸ்டர்ன் சாயல் இசையும், வேகமான கிட்டார் நோட்டுகளும் ரசிக்க வைக்கிறது.  DSP ராக்ஸ்.. , கற்க கற்க பாடலை போல ஒரு போலீஸ் ஆபிசரின் திறமைகளை பற்றி பாடும் " சிங்கம் சிங்கம் " வேகமான மெட்டும், DSP  குரலும் ப...

பானா - இசை விமர்சனம்

Image
யுவனின் துள்ளல் குரலில் ஆரம்பிக்கும் "தாக்குதே" பாடல் ஆல்பத்தில் அழகான காதல் பொக்கே.  நா.முத்துக்குமார் வரிகளில் சர்க்கரை தடவிய சுவை. " ஒரு பைத்தியம் பிடிக்குது " கார்த்திக்கின் குரலில்  ஒரு வித வசீகரத்துடன் ஆரம்பிக்கிறது    ஆனால் சரணம் மிக மெதுவாக செல்வது மைனஸ். காதல் பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  யுவன்  ஐட்டம் பாடல்களுக்கு கொடுப்பதில்லை. " உள்ளார பூந்து பாரு " ஒரு AVERAGE ஐட்டம் சாங். ஸ்ரேயா கோஷல்  குரலில் " என் நெஞ்சில்" பாடல் ஒரு சோலோ லவ் சாங். மென் சோக குரலும், வரிகளும் காதலின் வலியினை  எளிதாக உள் புகுத்திவிடுகிறது. " குப்பத்து ராஜாக்கள்" படத்தின் ஆரம்ப பாடலாக இருக்ககூடும். கேட்கலாம்.  லோ பட்ஜெட் படம் போல இது லோ பட்ஜெட் இசை. எல்லா பாடல்களிலும்  ரொம்பவுமே எளிமையான ARCHESTRATION. யுவனின் முந்தைய ஆல்பத்தோடு (பையா) ஒப்பிடும்போது இதில் யுவனின் பாதி அளவு திறமைதான் வெளிப்பட்டிருக்கிறது.  VERDICT : 2 .5  STARS

ராவண் - ராவணன் - இசை விமர்சனம்

Image
  மொசார்ட் ஆப் மெட்ராஸ் இன் அடுத்த சிக்ஸர். இந்தியில் பாடல்கள் வெளியானவுடனேயே அதை பற்றி எழுத  விரல்கள் துடித்தது. தமிழில் வரும் வரை காத்திருந்து இதோ, ராவண் - ஒரு இசை அனுபவம்.  BEERA BEERA  - விஜய் பிரகாஷின் கம்பீர குரலில்,  இதுவரை கேட்டிராத இசை கருவிகள் உற்சாக அருவியாய் கொட்ட, கேட்டவுடன் பிடித்து போகிறது... இந்த வருடத்தின் MOST WANTED SONG  நிச்சயம் இதுதான்.  அருமையான  ஒரு  ENERGETIC SONG . BEHNA DE  - வரிகள் புரியாவிடினும், காதலின் வலியே கார்த்திக்கின் குரலில் நன்கு உணர முடிகிறது.  பாடல் முழுதும் ரஹ்மான் சாரின்  சின்ன சின்ன மேஜிக்கல் டச் பரவி இருக்கிறது.  THOK DE KILLI -  சுக்விந்தர் சிங்கின் கணீர் குரலில், மற்றுமோர் ENERGETIC SONG. மெட்டும், அர்க்கேஸ்ட்ரேஷனும், வித விதமாய் சரணத்தில் வரிகள் நீளும் அழகும் உலக தரம். RANJHA RANJHA -   ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ரீனா பரத்வாஜின் போதையேற்றும் குரல் நம்மை  ஒரு ரொமாண்டிக் மூடிற்கு அழைத்து செல்கிறது. ஜாவித் அலியின் குரலும் கச்சிதம். திரும்ப திர...

பலே பாண்டியா - இசை விமர்சனம்

Image
புகை பட ஓவியர் சித்தார்த்தின் முதல் திரைப்படம். தேவன் எகாம்பரம் இசை இந்த படத்திற்கு துருப்பு சீட்டா இல்லையா என்பதை பார்க்கலாம்.  "சிரிக்கிறேன்" பாடல்  கானாவும், ராப்பும், வெஸ்டர்னும் இணைந்த ஒரு கலக்கல் காக்டெயில். தாளம் போட வைக்கும் மெட்டுடன் தொடங்கும் பாடல் சரணத்தில் திக்கு திசையின்றி அலைகிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்த வருட  ஹிட் லிஸ்டில் சுலபமாக இடம் பிடித்திருக்கலாம்.  உன்னி கிருஷ்ணன், மிருநளினி குரல்களில் "கண்களே கமலாலயம்" மென்மையான காதல் டூயட். இருவரது குரல்களும்  மனசுக்குள் புகுந்து என்னவோ பண்ணுகிறது. அதை போலவே "ஆறாத கோபமில்லை" பாடலும், தனிமையில் இரவில்  ஐ பாடில் கேட்க நல்ல சாய்ஸ் இந்த இரண்டு பாடல்களும். "ஹாப்பி" பாடல் வித்தியாசமாக இருந்தாலும் மெட்டில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்திஇருக்கலாம்.  " இவன் தேடல் ", " பலே பாண்டியா " என மற்ற இரண்டு பாடல்களும் சுமார் ரகம். சிரிக்கிறேன் பாடலிலும், இரண்டு மெலடிகளிலும் நம்பிக்கை அளிக்கிறார் புது இசையமைப்பாளர் தேவன். VERDICT  : 2 .4  STARS

வாடா, அம்பா சமுத்திரம் அம்பானி - இசை விமர்சனம்

Image
  வாடா. படத்திற்கு ஒரு பாடல்  மட்டும் ஹிட் கொடுக்கும் இமான் இதில் " மெஸ்மரிசம் " என்னும் பாடலில் மெஸ்மரிசம் செய்கிறார். நல்லதொரு ரொமாண்டிக் டூயட் இது. மகா கவி பாரதியின் "அக்னி குஞ்சொன்று கண்டேன்"  ஷங்கர் மகா தேவனின் குரலை ஒத்த MLR கார்த்திகேயன் குரலில் கவர்கிறது. பாரதியின் வரிகளுக்காக கேட்கலாம். ஆனால் சுந்தர் C படத்தில் இந்த பாடலா என்பதுதான் பீதியே கிளப்புகிறது. பாடலின் பின்னணியில் சுந்தர் C பிகினியில் ஓடும் ஹீரோயினை மணல்  தெறிக்க துரத்தாமல் இருந்தால் கோடி புண்ணியம்.  சுந்தர்.C,  இமானின் பரம்பரை பழக்கமாக ஒரு ரீ-மிக்ஸ் . "என்னடி ராக்கம்மா " இந்த ரீ மிக்ஸ் கலாச்சாரத்தை இவர்கள் விடவே மாட்டார்களா.?   மற்றபடி எண்ணிக்கைக்கு பாடல்கள் அவ்வளவே...  VERDICT  : 2 STARS ------------------------------------- அம்பா சமுத்திரம் அம்பானி   கருணாசின் இசை அவதாரம்.. "பூ பூக்கும் தருணம் " கருணாசின் பழைய பக்கா பாப் சாங். அப்படியே இந்த படத்திற்காக உருவியிருக்கிறார். ஆல்பத்தில் இந்த பாடல் மட்டுமே கேட்கும்படி இருக்கிறது. மற்றவை.. ம்ம்ம்ஹூம்.  இதி...

மதராச பட்டினம், கோரிப்பாளையம்- இசை விமர்சனம்

Image
மதராச பட்டினம் அறிமுக படத்திலேயே அசத்தலான பெயர் வாங்கிய G .V  பிரகாஷ் அந்த பெயரை காப்பாற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.  பீரியட் பிலிம் என்பதாலோ என்னவோ இசை கருவிகளில் நிறையவே வித்தியாசம் காட்டியிருக்கும் பிரகாஷ் பச்சக்கென கேட்டதும் ஒட்டிக்கொள்ளும் மெட்டுக்களை போட்டிருந்தால்...அவருக்கு இது ஒரு முக்கியமான ஆல்பமாக அமைந்திருக்கும்.  "பூக்கள் பூக்கும் தருணம் " ரூப் குமார் ரத்தோட் குரலில் அழகான மெலடி. ஆல்பத்தில் சிறப்பான பாடலும் இதுவே. "வாம்மா துரையம்மா" பாடலில் எப்போதும் தமிழை கடித்து தின்று துப்பும் உதித் நாராயண் கொஞ்சம் புரியும் படி பாடியிருப்பது ஆறுதல். M.S.V., சீயான் விக்ரம், நாசர் சேர்ந்து பாடியிருக்கும் "மேகமே" கேட்க கேட்க பிடிக்கலாம். தமிழில் மிக சிறப்பான பாடகர்கள் இருந்தாலும், ஏன் வட இந்திய பாடகர்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த ஆல்பத்திலும் பெரும்பாலோர் ஹிந்தி பாடகர்கள். ஹிந்தியில்  முக்கிய பாடகரான சோனு நிகாம் தமிழில் "ஆருயிரே" என்பதற்கு பதிலாக "ஹருயிரே" என்கிறார்.  முடியல... பாடல்கள் நீளம் அதிகம...