Sunday, August 21, 2011

தமிழ் சினிமாவில் தற்போது முனுமுனுக்க வைக்கும் சூப்பர் ஹிட் பாடல்கள் - ஒரு பார்வை.இசையால் வசமாகா இதயமுண்டோ....?  காலை நேர வாக்கிங்கில்  நம்மோடு ஆரம்பித்து, அலுவலகம் செல்லும் வழி எங்கும் கூடவே பயணம் செய்து, இடைவேளைகளில்       இளைப்பாற வைத்து...  மாலை நேர உற்சாகங்களை இரட்டிப்பாக்கி... இரவு நம்மை தூங்க வைத்து தாலாட்டும் வரை... இசை ஒரு தாய். 

எத்தனை டென்ஷன் இருந்தாலும், கவலைகள் இருந்தாலும், ராஜாவோ, ரஹ்மானோ, யுவனோ.......  நம் செவி வழி நுழைந்தால் போதும்...... மனம் லேசாகும். நம் உடலையும்... மனசையும் RE-FRESH செய்யும்  நல்ல மருத்துவர்கள் அவர்கள்.

இசையால் நம்மை வசப்படுத்த, தமிழ் சினிமாவில் நிறைய புதியவர்கள் வந்திருப்பது, இசை பிரியர்களை சந்தோஷபடுத்தும் நல்ல செய்தி. எழுத  நேரம் கிடைக்காத காரணத்தினால், நிறைய நல்ல ஆல்பங்களை பற்றி பகிர்ந்து கொள்ள முடியாமலேயே போய் விட்டது. தற்போது என்னை முனுமுனுக்க  வைக்கும் சில பாடல்கள் உங்களுக்காக....


கார்த்திக்கின் குரல் எப்போதுமே ஸ்பெஷல். அதுவும் காதல் பாடல்கள் என்றால்.... ஐஸ் க்ரீமாய் கரையும். "வேங்கை"யில்   வரும்  "காலங்கார்த்தாலே" பாடல் வெரி இம்ப்ரசிவ்.     தேவிஸ்ரீ பிரசாத்தின்  அழகான  பீட்டில் சரணத்தில் நீளும் அந்த சங்கதிகள் ரொம்பவுமே ஸ்பெஷல். அதே படத்தில் வரும்,  "என்ன சொல்ல  போற" பாடலும் திரும்ப திரும்ப முனுமுனுக்க வைக்கும் ரகம்.


புதிய இசையமைப்பாளர் அருள் தேவ், ஹரிஹரன் குரலில், போட்டா போட்டியில் கொடுத்திருக்கும்,  "இது வரை"  பாடல் அழகான மெலடி. கொஞ்சம் "கண்கள் இரண்டால்" சாயல் இருந்தாலும் இந்த பாடல் இவருக்கு மிக சிறந்த விசிடிங் கார்டு.


அதேபோல , புதுமுக இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது முதல் படத்திலேயே (வாகை சூட வா) எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.     நேஹா பேசின் பாடியிருக்கும் "போறானே" பாடல் ஆல்பத்தின் ஹாட் கேக். அப்புறம், சின்மயி குரலில் வரும் "சர சர" பாடலும் தினசரி ப்ளே லிஸ்ட்டில் நிச்சயம்  இருந்தே  ஆகவேண்டிய ஒன்று.  குதுகலப்படுத்தும் இசை அந்த பாடல் முழுதும் நிரம்பி வழிகிறது.

குத்து பாடல்தான். ஆனாலும் அந்த குரல் மீண்டும் மீண்டும் கேட்கவைக்கிறது. காஞ்சனா படத்தில் வரும் " கருப்பு  பேரழகா" பாடலில்   தர்சனாவின் குரல் அவ்வளவு அழகு. கொஞ்சி கொஞ்சி பாடும் அந்த குரலுக்கு நான் ரசிகன் ஆகி விட்டேன்.


தமனின் இன்னொரு முக்கியமான ஆல்பம். "வந்தான் வென்றான்". "காஞ்சன மாலா ", "அஞ்சனா" என நிறைய வசீகரங்கள் இருந்தாலும் தமன் உருகும் "நகருதே" பாடல் SOMETHING SPECIAL.   மிக  சிறப்பான  ஆர்க்கேஸ்ட்ரேஷன்   மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

எல்லா மியூசிக் சானல்களிலும், ரௌத்திரம் படத்தின்  "அழகே  உன்  கண்கள்  " பாடல்தான் ரிபீட்   ஆகிறது. அதை விட ரெணைனா   ரெட்டியின் ரொமாண்டிக் குரலில் வரும் "மாலை மயங்கும் நேரம் " மிகவும் ரம்மியம்.   இரவு  நேர  I-POD சாய்ஸ் .

 அடுத்ததாக, ஹாரிஸின் ஏழாம் அறிவு, நண்பன், விஜய் ஆண்டனியின் "வேலாயுதம்" என இசை மழை காத்திருக்கிறது. நனைவோம். 


Monday, August 15, 2011

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)படிக்கின்ற வயதில்,  பிட்டு படம் பார்ப்பதற்கு  நெஞ்சில் அசாத்திய தைரியமும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் நிச்சயம் வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இல்லையென்றால் கூட பிட்டு பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காது.

தியேட்டரில் நல்ல பிட்டு ஓடுகிறது என்கின்ற செவி வழி செய்தி வந்தவுடனேயே ஆர்வக்கோளாறில் உடனே கிளம்பிவிடக்கூடாது. ஏனென்றால் அதே செய்தி நம் சொந்த பந்தங்களுக்கும் புயல் வேகத்தில்  ரீச் ஆகியிருக்கும். தியேட்டர் வாசலிலோ, டிக்கெட் கவுன்டரிலோ, நம் சித்தப்பாவையோ, அப்பாவின் நண்பரையோ பார்த்து அதிர்ந்து அசடு வழிவது, ஒருவரிடம் ஒரு லட்சம் கடன் கேட்டு அசடு வழிவதை விட அசிங்கமானது அந்த காலங்களில். 


 
எவ்வளவோ திட்டமிட்டும், முகம் மறைத்தும், தைரியம் கொண்டு  சம்பவ இடத்தை நெருங்கினாலும், பயம் ஒரு நாய்  குட்டியே போல நம் கால்களுக்குள்லேயே சுற்றிக்கொண்டிருக்கும்.  அதற்க்கு ஏற்றார் போல்,  தியேட்டர் வாசலை நெருங்கியதுமே, பக்கத்துக்கு வீட்டு ரங்குடு மாமா, தோள் தொட்டு திருப்பி, "எங்கடா இந்த பக்கம்?"  என்பார்.   "ப்ரென்ட் வீட்டுக்கு போறேன் மாமா  " என சமாளித்தாலும், படவா... இந்த  வயசிலேயே மலையாள படமா.... சரி சரி... நீயும் என்னை பார்த்தேன்னு மாமி கிட்டே உளறிடாதே " என கேட்டுக்கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்ததுன்டு.


 
இத்தனைஅரும்பாடுபட்டு, உள்ளே நுழைந்தாலும், அன்றைய தின 
அதிர்ஷ்டமே பிட்டு தரிசிக்கும் பாக்கியத்தை கொடுக்கும். அதிர்ஷ்டம்
 இல்லையேல்.... வெறும் மலையாள  பாஷையே மட்டும் கற்றுக்கொண்டு வெளியே வர வேண்டியதுதான்.


என் முதல் பிட்டு   பட அனுபவம், வேறு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக  என் பன்னிரண்டாவது வயதிலேயே  கிடைத்தது. என் பெரியப்பா பையன், கிராமத்தில் 
 இருந்தவன்,     ஒருநாள் எங்கள் வீட்டிற்க்கு வந்து சினிமாவிற்கு போகிறேன், சைக்கிள் வேண்டும் என என் அப்பாவிடம் கேட்க... அடுத்த நொடி நான் சைக்கிள் கேரியரில் அமர்ந்துகொண்டிருந்தேன். முதலில் என்னை பார்த்து அதிர்ந்தவன்.."கீழே இறங்கு" என மிரட்ட..சைக்கிள் வேண்டுமென்றால் அவனையும் அழைத்துக்கொண்டு போ என என் அப்பா
எனக்காக வாதாட... உள்ளுக்குள் திட்டிக்கொண்டே என்னை அழைத்து சென்றான். முதலில் நாங்கள் சென்றது.. ரஜினியின் பணக்காரன் படத்திற்கு..


 கூடி நின்ற கூட்டம், அடுத்த இரண்டு நாட்களுக்கு டிக்கெட் கிடைக்காது என்றது..  சரி என கமல், விஜயகாந்த், ராமராஜன் என்று எங்கள் தேவையின் தரத்தை குறைத்தாலும்... எங்கும் டிக்கெட் கிடைத்தபாடில்லை. கடைசியில் எதோ ஒரு முடிவெடுத்தவன்.. என்னிடம் வந்து "டேய்,நான்  உன்னை ஒரு
படத்திற்கு கூட்டிட்டு போறேன்" ஆனா நான் சொல்லும் போதெல்லாம் நீ கண்ணை மூடிக்கனும் என்றான்" எப்படியாவது ஏதாவதொரு சினிமாவாவது பார்க்க வேண்டும் என நான் ஒரு   உயர்ந்த லட்சியத்தில் இருக்க.. ஊம்  என      தலையாட்டினேன்.

அடுத்து நாங்கள் நின்று கொண்டிருந்தது... சூர்யா தியேட்டர் வாசலில். பிட்டு படங்களுக்க்காகவே நேர்ந்து விடப்பட்ட தியேட்டர். "தகாரா" என்கின்ற மலையாள படம். டிக்கெட் கவுன்ட்டர் முன்பு ஒரு பத்து பதினைந்து பேர் நின்று கொண்டிருக்க.... டிராயர் போட்டுக்கொண்டு வரிசையில்  நின்ற எனனை பார்த்து.. கூட்டம் மொத்தமும் அதிர்ந்தது. தம்பி, சின்ன பசங்களையெல்லாம் இங்கே கூட்டிட்டு வரக்கூடாது என என் அண்ணனிடம் எச்சரிக்க... அவனோ... " இவன்,  இந்த மாதிரி  படமெல்லாம் நல்லாவே பார்ப்பானுங்க" என என் இமேஜை காலி செய்ய... நானும்            
" ஆமாம்" என்பது போல புரிந்தும் புரியாமல் தலையாட்டி வைத்தேன். 

அந்த படத்தை என்னால் இன்றும் மறக்க முடியாது. காரணம், இடைவேளை முடிந்தவுடன் மங்கலாக 30 நொடிகள் எதோ  ஒரு கன்றாவி காட்சி முடிந்தவுடன், என் அண்ணன் என்னை கிளப்ப.. .நான் முழு படமும் பார்த்த பின்தான் வருவேன் என அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவன் மானத்தை வாங்கியது இன்னமும் நினைவிருக்கிறது... அதே படம்  பிறிதொரு நாளில் "ஆவாரம்பூ" என  தமிழில் பார்த்த போது... இந்த பிளாஷ் பேக் என் மனக்கண்ணில் வந்து மறைந்தது நினைவிருக்கிறது.

அதற்க்கு பிறகான என் பிட்டு பட அனுபவங்கள்.. வயதின் வளர்ச்சிக்கேற்ப பல்கி பெருக முக்கிய காரணம் என் நண்பர்கள் தங்கமணி (என்ன பொருத்தமான பெயர் ) ராஜா இருவரும். பன்னிரண்டாவது படிக்கும்  போதே என்னை குண்டுகட்டாய் தூக்கி சென்று எனக்கு பாலியியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய நல் ஆசிரியர்கள் அவர்கள்.


கல்லூரி காலங்களில்,  போஸ்டர் பார்த்து ஏமாந்து, ஷகீலா ஆன்ட்டியின் ஒரே படத்தை தமிழிலும்,மலையாளத்திலும் இரண்டு முறை பார்த்து பல்பு வாங்கிய அனுபவங்களும் உண்டு.    


இப்போதைய இன்டர்நெட், dvd  கலாச்சாரம் பிட்டு படம் பார்க்கும் வசதியே ரொம்பவே எளிதாக்கிவிட்டலும்,  ஆரம்ப காலங்களில் பிட்டு படம் பார்க்க மேற்கொண்ட சாகசங்களும், அந்த த்ரில்லும் இப்போது இல்லாததது இந்த தலைமுறைக்கு ஒரு சாபம்தான்.


டிஸ்கி : இதை படித்து, நான் எதோ பிட்டு படங்களின் பரம ரசிகன்  என என்னை நினைத்து விட வேண்டாம். என் வாழ்வில் நடந்த சில பல சுவாரசியங்களை எழுதவே இந்த பிளாஷ் பேக்.  

Sunday, August 14, 2011

மங்காத்தா - இசை விமர்சனம்வெங்கட் பிரபு,  யுவன் கூட்டணி என்றாலே உற்சாகமான இசைக்கு குறை இருக்காது. இதில் அஜித் வேறு இணைந்தவுடன் எதிர்பார்ப்புகள் எவரெஸ்ட்  உயரத்திற்கு எகிற... மங்கத்தா இந்த எதிர்பார்ப்புகளை முழுமை படுத்தியிருக்கிறதா.... ?

 முதல் பாடல் "விளையாடு மங்காத்தா " ஏற்கனவே ஒற்றை ஆல்பமாக வெளிவந்து ரசிக கண்மணிகளின் பல்ஸ் பார்த்தது. தல ரசிகர்களை மட்டுமே உசுப்பேற்றும் அந்த பாடல் இசை ரசிகர்களை அவ்வளவாக இம்ப்ரெஸ் செய்யவில்லை என்பதே உண்மை. அனால் அந்த ஆரம்ப இசை செம மிரட்டல்.

 ஆல்பத்தின் இரண்டாவது பாடல் " நீ நான் " நல்ல மெலடி. SPB  குரலில் இருக்கும் ஒரு தனித்துவம்  அவரது மகன் குரலிலும் தொடர்வது சிறப்பு. நிரஞ்சன் பாரதியின் அழகான வரிகளும், சரண், பவதாரணி மயக்கும் குரல்களும்  இப்பாடலின் ஸ்கோரை ஏற்றுகிறது. பல்லவியில் ஆரம்பிக்கும் வசீகரம், சரணத்தில் தொலைந்து போவதுதான் கொஞ்சம் வருத்தம்.
  கோவாவில் கேட்ட " இடை வழி " பாடல் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இதில் "வாடா பின்லேடா" ஆகியிருக்கிறது. சுசித்ரா குரலில் இருக்கும் ஒரு போதை இப்பாடலின் பிளஸ்.   ஆர்கேஸ்ட்ட்ரஷனில் நிறைய பரிசோதனை முயற்சிகள்  செய்திருக்கிறார் யுவன். ஆனாலும் வரிகள் அநியாயத்திற்கு உவ்வே   ரகம். 

"மச்சி OPEN THE BOTTLE" என அடுத்த குத்துக்கு கிளம்பி விட்டார்கள் வெங்கட் பிரபு கோஷ்டியினர். அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பதும் இதைத்தான். "சரோஜா சாமான் நிக்காலோ" போல இதுவும் மியூசிக் சானல்களின் புண்ணியத்தில் ஹிட்டாகும் . இடையில் " ராமன் ஆண்டாலும் " படலை ரீ மிக்ஸ் செய்திருப்பது சூப்பர். 

   மதுஸ்ரீயின் குரலில் தொடங்கும் "நண்பனே" மிக மெதுவான மெலடி என்பதால் கடந்துவிடலாம் என FORWARD  பட்டனை அமுக்கும் முன்பே,  யுவனின் காந்த குரல் அப்படியே கட்டிப்போடுகிறது. ஏற்கனவே சொன்னது போல யுவனின் குரல் காதலுக்காக டெடிக்கேட்  செய்தாகிவிட்டது. மெதுவான அனால் மென்மையான மெலடி. 

 "பல்லேலக்கா " பாடலில் அப்படியொன்றும் விசேஷமில்லை. ஐந்தோடு ஆறு. அவ்வளவே. ஒரே விசேஷம் துரை தயாநிதியின் துணைவியார் பாடியிருப்பது. குரல் வளம் OK . 

 அஜீத்துக்கான அட்டகாசமான பில்ட் அப். மங்காத்தா தீம் மியூசிக். படம் ஹிட்டாகும் பட்சத்தில் இந்த தீம் மியூசிக் நன்கு பேசப்படலாம். 

 மொத்தத்தில்... அஜித் ரசிகர்களை ஏமாற்றாத, யுவன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத ABOVE AVERAGE ALBUM இந்த மங்காத்தா. 

SONGS CAN LISTEN  :

நீ நான்...
மச்சி OPEN THE பாட்டில்
நண்பனே 

VERDICT : ABOVE AVERAGE
RATING   : 2.6/5
you might like this also...

Related Posts with Thumbnails