வணக்கமுங்க.....


வணக்கமுங்க.. இது என்னோட 100 வது பதிவு. நமக்கு புஸ்தகம் படிக்கிறதுன்னா ரொம்ப உசுருங்க. இந்த பொட்டி வந்ததுக்கப்புறம் தமிழ்ல படிக்க நெட்ல தொழாவும்  போதுதான் இந்த வலைபதிவுகள் (BLOGS ) கண்ணுல பட்டுச்சு. (ENGLISH ல படிக்க நமக்கு புடிக்காதுங்க.. ஏன்னா.. ENGLISH ல படிக்க நமக்கு தெரியாதுங்க..)  நமக்கு புடிச்ச விஷயங்களை நிறைய பேர் எழுதறதை பார்த்ததும் பச்சக்குன்னு மனசுல ஒட்டிக்கிச்சு..  ரொம்ப வருஷமா படிச்சுட்டு மட்டுமே இருந்தேன். ஒரு நாள் மல்லாக்க படுத்துட்டு வெட்டியா  யோசிச்சுட்டு இருக்கும்போது   தோனுச்சு.. ஏன் நாமளும் எழுத கூடாது ன்னு..  அது வரைக்கும் நான் டைரி மட்டும்தான் எழுதியிருக்கிறேன். அந்த தகுதி மட்டும் போதுமான்னு எனக்கு பயங்கர சந்தேகம். சரி ஒரு கை பார்க்கலாமுன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன். 

அது பாருங்க, திடு திப்புன்னு நூறு பதிவு ஆய்டிச்சு, கோயம்பத்தூர்ல இருக்கிற வரைக்கும் பொட்டி தட்ட நிறைய நேரம் கெடச்சதுங்க... இப்ப சென்னை வந்த பிறகு சுத்தமா நேரம் கிடைக்க மாட்டேங்குதுங்க.. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்குங்களா...? அது மாதிரியே எதாவது எழுதியே ஆகணும்னு  கை எல்லாம் ஞம ஞம ங்குதுங்க. அதுதான் இந்த தீபாவளிக்கு ஒரு லேப் டாப் எப்படியாவது வாங்கிபோடனும்னு ஒரு மாதிரி வெறித்தனமா சுத்தீட்டு   இருக்கேனுங்க.. அதுக்கப்புறம்... நின்ன, நடந்தா... தூங்குனா.. பதிவுதானுங்க.. மக்கா... அதுவரைக்கும் என்னை ஞாபகம் வச்சுக்கிட்டு இருங்க..இவன் ஏதும் எழுதறது இல்லைன்னு மறந்து கிறந்து போய்டாதீங்க..

இந்த பதிவுலகத்தை ஆயுளுக்கும் நம்மால விட முடியாதுங்க... எத்தனை எத்தனை நண்பர்களை எனக்கு சம்பாதிச்சு குடுத்துருக்கு.. சென்னை வந்த புதுசுல கொஞ்சம் மனசளவுல தளர்ந்து போய் நின்னப்ப போன் மூலமாகவும், மெயில் வழியாகவும் எனக்கு ஆறுதல் சொன்ன நண்பர்கள் எல்லாத்தையும் பார்க்கணும், பேசணும்னு ஆசையா இருக்குங்க.. இப்ப கூட பாருங்க... எப்படியாவது வலை பதிவு படிக்கனும்னு, செல்போன்ல நெட் CONNECTION வாங்க ஏர்  செல் கஸ்டமர் கேர் ல வார கணக்கா முட்டி மோதி, ஒருவழியா GPRS வசதி பெற்று, ஆசை ஆசையா நம்ம ப்ளாக்க   திறந்தா எல்லாமும் பொட்டி பொட்டியா தெரியுது. என்னடா இதுன்னு.. குழம்பி நின்னப்ப MM அப்துல்லா சார் தமிழ்ல தெரிய உதவி பண்ணுனார். இப்படி முகம் தெரியா நல்ல நண்பர்களை எனக்கு கொடுத்த பதிவுலகத்தை விட்டுட முடியுங்களா.. அதுக்கு எதாச்சும் பண்ணியே ஆகணுங்களே... அதான்.. பயங்கர பயங்கரமா எழுதி ஒரு வழி பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். வந்துடறேன்.. சீக்கிரம்... 

பாசமுடன்,
மனோ

Comments

 1. நூறாவது பதிவு, வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் மனோ...

  ReplyDelete
 3. நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 4. நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. வாழ்த்துகள் மனோ 

  ReplyDelete
 6. // குழம்பி நின்னப்ப MM அப்துல்லா சார் தமிழ்ல தெரிய உதவி பண்ணுனார்.

  //

  நீங்க அப்துல்லா சார்னு சொல்றது பதிவர் அப்துல்லா அண்ணனா?? அவரா இருந்தால் என்ன நேரத்தில் என்ன உதவின்னாலும் கேக்கலாம்.எந்த ஆர்ப்பாட்டமும்,விளம்பரமுமின்றி அவர் செய்துவரும் சமூக சேவைகள் மிக அதிகம்

  ReplyDelete
 7. வாழ்த்துகள் மனோ

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் மனோ.
  comeback soon....

  ReplyDelete
 10. 100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் வாழ்வு சிறக்கட்டும்!

  ReplyDelete
 11. vaazhthukkal mano

  கேபிள் சங்கர்

  ReplyDelete
 12. வாழ்த்துக்கல் மனோ!

  ReplyDelete
 13. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள் மனோ!

  ரொம்ப நல்லா எழுதிட்டு வர்றீங்க!

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் மனோ...
  நூறு ஆயிரமாக, ஆயிரம் லட்சமாக வாழ்த்துக்கள்
  தமிழ் உதயன்

  ReplyDelete
 15. Nice Nice....
  Expecting Lot from u....

  ReplyDelete
 16. மாமா அதுக்குள்ள நூறு பதிவு எழுதிட்டியா :)

  வாழ்த்துக்கள் மாம்ஸ் :)

  ReplyDelete
 17. /// பயங்கர பயங்கரமா எழுதி ஒரு வழி பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். வந்துடறேன்.. சீக்கிரம்... ///

  நீ பயங்கரமா எழுதுறது நாங்களும் படிக்கிறோம் எழுது எழுதி சீக்கிரம் :)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4