Posts

Showing posts from October, 2014

கத்தி - விமர்சனம்

Image
தொடங்குவதற்கு முன்... சாமி சத்தியமாய் நான் விஜய் ரசிகன் அல்ல. சினிமாவை சினிமாவாக பார்த்தால் இந்த படம் உங்களுக்கும் பிடிக்கலாம்... இணையத்தில் கத்தி கத்தி நடக்கும் சண்டைகள்  நிச்சயம் ஒரு சினிமாவுக்காக அல்ல... தனி நபர் மீது உள்ள வெறுப்போ... அல்லது தன்  அதி புத்திசாலிதனத்தை  பறைசாற்ற ஏற்படுத்திக்கொள்ளும் துடிப்போதான் சில நண்பர்களுக்கு இருக்கிறது. என்னென்ன குறைகள்... குற்றங்கள் கண்டுபிடிக்கலாம் என யோசித்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தால்  எந்த உலக சினிமாவாலும் அவர்களை திருப்தி படுத்த முடியாது.   ஹாலிவுட்டில் அமெரிக்க அதிபரையே வில்லனாக சித்தரித்து... வேற்று கிரக வாசிகளையும் நியூயார்க் நகர வீதிகளில் உலா வர வைக்கலாம்... எவனும் எதற்கும் கேள்வி கேட்பதில்லை... அவர்களை பொறுத்த வரை ஜஸ்ட் லைக் தட் அது ஒரு சினிமா அவ்வளவே... அதற்க்கு மேல் ஒரு இழவும்  இல்லை அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கிடையாது.  ஒரே விஷயம் அவர்கள் எதிர்பார்ப்பது... படம் அவர்களை வசீகரிக்கிறதா... இல்லையா... அவ்வளவே...   கோலா குடிக்கும் இவன்  விவசாயத்தை பற்றி பேசி நடிக்க என்ன தகுதி இருக்கிறது? ஒப்புக்கொள்கிறேன்...