Posts

Showing posts with the label சிறுகதை

செக்கிடோ

Image
பீட்டர் பெஞ்சமின் விரல்கள் நடுங்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பாப்டிஸ்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவர். மருத்துவ   ஆராய்ச்சியில் 30 வருட அனுபவம் , ஆயிரக்கணக்கில் வெற்றிகரமான SRS சர்ஜரிகள். மருத்துவ துறையின் வாழ்நாள் சாதனையாளர் , மொத்த புகழும் இப்போது காணாமல் போக போகிறது...ஒரே ஒரு சின்ன தப்பு , தான் புதிதாய் கண்டுபிடித்த மருந்தே தமக்கு இப்போது வேட்டு வைக்க போகிறது. மருந்தின் முழு தாக்கத்தையும் உணராமல் மூன்று நபர்களுக்கு செலுத்தியது எவ்வளவு பெரிய தவறாகிவிட்டது. அவரது உதவி டாக்டர் ஸ்டீபன் கதவை திறந்து கொண்டு உள் நுழைய , பீட்டர் பரபரப்பானார். "ஸ்டீபன்" அந்த மூன்று பேரது முகவரிகளையும் கண்டறிந்து விட்டாயா , இன்னும் இரு தினங்களுக்குள் அவர்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாக வேண்டும்"   " நிச்சயம்   டாக்டர்"   அந்த மூவர்க்கும் மெயில் அனுப்பி விட்டேன். தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்றைக்குள் பிடித்துவிடலாம்". " நல்லது , பிரச்சனை வெளியில் தெரிவதற்கு முன் இதை தீர்த்தாக வேண்டும...

கிரிக்கெட் காதலன்

Image
மூர்த்தி வெகு அலட்சியமாய் பபிள் கம்மை மென்றபடி சுற்றி நிற்கும் பீல்டிங் வளையத்தை கண்களால் அளந்தான். லாங் OFF , லாங் ஆன் இரண்டு புறமும் பீல்டர்கள் ஆணி அடித்தது போல நிற்க, எதிரணி கேப்டன்  மேலும் இருவரை லெக் சைடில் நிற்க வைத்து பாதுகாப்பு அரண் அமைத்தான். இரண்டே பந்துகள் 10 ரன்கள் தேவை. கடைசி பந்தில் மூர்த்தி அடித்த பவுண்டரி ஆட்டத்தை சூடு கிளப்பி வைத்திருக்க மொத்த கூட்டமும்  கண் இமைக்க மறந்து நகம் கடித்தது.. அந்த பௌலேர் உள்ளங்கை வியர்த்திருக்க , தரையில் கைகளை தேய்த்து கொண்டான். கேப்டன் அவனிடம் தீவிர ஆலோசனை செய்து  அவன் முதுகை தட்டி கொடுத்து உற்சாக படுத்த,  அந்த பௌலேர் சற்றே நிதானித்து.. சீராக அடி எடுத்து விக்கெட்டை நோக்கி ஓடி வர.. மூர்த்தி ஒரு முறை உடலை குலுக்கி ரிலாக்ஸ் செய்து கொண்டான். அந்த பௌலேர் சரியான லைன் அண்ட் லென்த்தில் விக்கெட்டிற்கு நேராக அசுர வேகத்தில் எரிய.. மூர்த்தி விடு விடுவென  ஸ்டெம்ப்பை கடந்து திரும்பி நின்று .. கிட்டத்தட்ட தற்கொலைக்கு இணையான ஷாட் அது..  நேராக கீப்பரின் தலைக்கு மேல் பந்தை அறைந்து  அனுப்ப.. அது இரட்டை வேகத்துடன் எல்லை கோட்...

டாக்டர்.குண்டு ராவ், M.B.B.S

Image
  "ஐயோ" என  இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு வெளியேறிய என் கூக்குரல் என் வீட்டை கடந்து இரண்டாவது தெரு திருப்பத்தில் நுழைந்து  கரைந்தது. மாவு அரைக்கும் மெஷினை ஒத்த குறட்டை ஒலியுடன் தூங்கிகொண்டிருந்த   என் மனைவி கட்டில் அதிர எழுந்தமர்ந்து  நீண்ட பெரு மூச்சுடன் என்னை முறைத்தாள். "ஏன்னா  இப்படி தினம்  அலும்பு பண்றேள், ராத்திரியில் கூட இந்த பொம்பளை அவ புருஷனை போட்டு அடிச்சு கொடுமை பண்றாள்னு பக்கத்தாத்துல இருக்கறவா எல்லாம் என்னை சந்தேகமா பாக்கறா... " "முடியலேடி ரமா... வலி பிராணனை போறது..." இந்த பைல்ஸ்  இப்படி படுத்தும்னு நினைக்கல..." "நல்ல டாக்டர் கிட்ட காட்டுங்கோன்னு சொன்னா  கேட்க மாட்டேன்கறேள். ரோட்ல போறவன்கிட்ட காசு குறைச்சல்னு  களிம்பு வாங்கி தடவினேள்...இப்போ பாருங்கோ அப்பளம் போல பொரிஞ்சு கிடக்கு" மருத்துவமனை செல்வது என்பது ஆதி காலத்தில் இருந்தே எனக்கு பிடிக்காத விஷயமாக இருந்தது... அதன் டெட்டால் வாசமும், வலி நிரம்பிய முகங்களும் என்னை மருத்தவமனையே விட்டு நூறு அடி தள்ளியே வைத்திருந்தது. ஆனால், இனிமேலும் முடியாது. பின் புறத்தில் சிவப்ப...

பிக் பாக்கெட்

Image
 பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே மழை பிடித்துக்கொண்டது.... அவசர அவசரமாக ஜன்னல் கண்ணாடிகளை அடைப்பவர்களிடையே "அப்பா, அப்பா, மழை பார்க்கணும் ஜன்னலை மூடாதீங்க" என்கின்ற குழந்தையின்  கோரிக்கை அதட்டலுடன் நிராகரிக்கப்பட்டது . மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். மழை அமிர்தம், நனைதல் வரம் என்கின்ற வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தது ...  படித்துறை தாண்டுவதற்குள் பேருந்து நிரம்பி வழிய, கண்டக்டர் வாய் ஓயாமல் எல்லோரையும் முன்னுக்கு வர சொல்லிகொண்டிருந்தார்... மழை நனைத்த கோழிகுஞ்சாய் ஒரு பாட்டி நடுங்கியபடியே இடம் தேட ... எழுந்து, அமர்வதற்கு இடம் கொடுத்தேன்.  எங்கே போகணும்...? டவுன் ஹால் .... ஒரு டிக்கெட்...  டிக்கெட் கொடுத்தவர்.... மீதி சில்லறை கொடுக்காமல் நகர, சார், ஐம்பது பைசா மிச்சம் கொடுக்கணும் என கேட்க தோன்றியது. கேட்கவில்லை.  கேட்க விடாமல் தடுத்தது    தாரளமா.. இல்லை யாராவது சிரிப்பார்கள் என்கின்ற கூச்சமா?  உள்ளுக்குள் புகைந்த கோபம் ஒரு கெட்ட வார்த்தையாய் சத்தமில்லாமல் வெளிப்பட....நகர்ந்து வந்து படியருகே நின்று கொண்டேன்... மழை சாரலை முகத்தில் வாங்கிக்கொண்டு...

உலகின் சின்னஞ்சிறு காதல் கதை...

Image
ஹாவென கொட்டாவி விட்டபடி தலையே திருப்பிய போதுதான் அவள் பேருந்துக்குள் ஏறி நான் அமர்ந்த திசை நோக்கி வர ஆரம்பித்தாள். என் கண்கள்  ட்யுப் லைட் போட்டது போல பிரகாசமாக... நடந்து வந்தவள் எனது பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.  அந்த பெண் மிக அழகாக இருந்தாள். மிக அழகாக இருந்தாள் என ஒற்றை வரியில் கூறி விடுவது அவள் அழகையும் எனது பழகு தமிழையும் அவமதிப்பது  போலாகிவிடும். எனவே அவளை பற்றி குறைந்தது நான்கு வரிகளாவது வர்ணிப்பது இங்கே அவசியமாகிவிடுகிறது.. மெல்லிய தேகம், சரித்திர நாவல்களில் வரும் பெண்களுக்கு இருப்பது போல நீண்ட நெடிய கருங்கூந்தல். அப்பழுக்கற்ற கண்கள்.. குப்தா ஸ்வீட்ஸ் குலோப் ஜாமுன்களை நினைவுபடுத்தும் சிவந்த கன்னம்..காதுகளில் சின்னஞ்சிறு ஜிமிக்கி. நெற்றியில் குங்கும தீற்று. கண்களை உறுத்தாத சுடிதார்..பஞ்சு கால்களுக்கு சுமை ஏற்படுத்தாத மெல்லிய கொலுசு.. நேர் வகிடு எடுத்து சீவிய தலையில் மல்லிகை பூ,  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற பேரிளம் பெண்களுக்குரிய குணங்கள் அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாய் போட்டு அடித்தது போல சாந்தமான முகம். லிப்ஸ்டிக் போடாமலேயே சிவந்திருந்த...