Posts

Showing posts from July, 2010

கனிமொழி - இசை விமர்சனம்

Image
சில ஆல்பங்களுக்காக  காது மேல் காது வைத்து காத்திருப்போம். ஆனால் அது சொதப்பி விடும்.(உதாரணம் : தில்லாலங்கடி)  சில ஆல்பங்களை  எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி போகிற போக்கில்  கேட்போம். அது அப்படியே உயிரை  கரைத்து பெவிகால் போட்டு மனசுக்குள் அமர்ந்து கொள்ளும் (உதாரணம் : மின்னலே). அந்த வரிசையில்  இதோ ஒரு பரவச ஆல்பம் ' கனிமொழி'   முதலில், இந்த பட பாடல்களை கேட்க எனக்கு எந்த ஒரு தூண்டுதலுமே ஏற்படவில்லை. யதோட்சையாக இதன் இசையமைப்பாளர் "சதீஷ் சக்ரவர்த்தி" என்ற பெயரை பார்த்ததுமே மனதில் ஒரு பொறி. 'லீலை' (படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை) இவருக்கு மிக சிறந்த விசிட்டிங் கார்டு. அதில் வரும் "ஜில்லென்று ஒரு கலவரம்" மற்றும் "பொன் மாலை பொழுது" இரண்டும்  என்னுடைய ஆல் டைம் FAVOURITE SONGS . அதில் பத்து அடி பாய்ந்திருந்தால் இதில் 20  அடி பாய்ந்திருக்கிறார் சதீஷ்.  முதல் பாடல் "பெண்ணே போகதே" இந்த ஆல்பத்துக்கு ஒரு திருஷ்டி போல. அதை விட்டு தள்ளுங்கள். அதற்க்கு பிறகு வரும்  பாடலான "முழு மதி"  விஜய் யேசுதாஸ், பெலே ஷிண்டே குரல்களில் தித்திக்கிற ஸ்

ஒரு காதலின் டைரி குறிப்புகள்

Image
அவள் முகம்...  ஒரு முகம்... என் தினங்களை வண்ணங்களால் நிறைத்து அழகுபடுத்தும் திருமுகம். ஓராயிரம் சந்தோஷங்கள் அதை காணும் போதெல்லாம்..  துரு துரு கண்கள்.. முத்தமிடும் ஆசையே தூண்டும் சிவந்த இதழ்கள்... அதில் வெளிப்படும் புன்னகை... ஒரு கவிதை போல.... நிற்காது பொழியும் பரிசுத்தமான மழையே போல.. கன்னக்குழியில் இலவச இணைப்பாய் இன்னொரு புன்னகை... என் கவலைகளை துடைத்தெறியும் மந்திர புன்னகை. குழந்தை அல்ல.. ஆனால் குழந்தைதான்.. குமரியும் அல்ல. ஆனால் குமரிதான். கன்னங்களின்  மென்மை அதை செல்லமாய் கிள்ள சொல்லி என் உயிர் எடுக்கும். கண்களில் வழியும் காதல் என்னை மொத்தமாய் திருடி என் உயிர் குடிக்கும். அந்த முகம் பார்க்கும் போதெல்லாம் அதன் வெளிச்சம் என் மீது பிரதிபலித்து நானும் அழகாகிறேன். ஹட்ச் நாய்க்குட்டி போல அவள் பின்னாலேயே  சுற்றி வரும் நிழல் ஆகிறேன். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.. மனசு கேட்பதில்லை.  பார்க்காத தருணங்களில்  ஆக்சிஜன் இழந்த மீனை போல துடிக்கிறேன். பார்த்த நொடியில்  பரவச பட்டாசாய் வெடிக்கிறேன். அந்த முகம், என்னை சிரிக்க வைக்கிறது.. அவளை பற்றியே அனுதினமும் சிந்திக்க வைக

கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்

Image
கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம் -  ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் (THE WAY THE COOKIE CRUMBLES) உங்களுக்கு BANK ROBBERY கதைகள் மிகவும் பிடிக்குமா?  அப்படியானால் இந்த  நாவல் உங்களுக்கு செம தீனி. எதிர்பார்க்கவே முடியாத அட்டகாசமான  திட்டத்தோடு  ஒரு  பலம் வாய்ந்த பாதுகாப்பினை கொண்ட  வங்கியினை ஒரு மூவர் குழு ஆட்டையே போடும் விதம்தான் இந்த நாவலின் கரு.  எட்ரிஸ் ஒரு குள்ளன். அவன் வேலை செய்யும் ஹோட்டலில் முரியல் என்கின்ற  பெண் தற்கொலை செய்து கொள்ள, அதை பற்றிய விசாரணையில் இருந்து கதை தொடங்குகிறது. தற்கொலைக்கு முன் அந்த பெண் தன் காதலனை தீர்த்து கட்டி விட்டு இந்த ஹோட்டலுக்கு வருவதாக காட்சிகள் விரிகின்றன. இடையே அல்கிர் என்னும் ஆறடி உயர மனிதன், முரியலின் பெண் நொரீனா படிக்கும் பள்ளிக்கு சென்று அவளை தந்திரமாக வெளிய அழைத்து வந்து  கொலை செய்கிறான்.  இப்படி இழவு மேல் இழவு விழுகின்ற நேரத்தில் ஐரா என்கின்ற படு அழகான பெண் சீனில் நுழைய, கதை வேகம் பிடிக்கிறது. அந்த கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது  எட்ரிஸ், அல்கிர், ஐரா ஆகிய மூவரும். காரணம்.. நம்பவே முடியாத ஆனால் நம்ப வைக்கும் அந்த அசத்தலான வங்கி கொள்ளை திட்டம்.

நான் மகான் அல்ல - இசை விமர்சனம்

Image
யுவன் ஷங்கர் ராஜா - காதலுக்காக நேர்ந்து விடப்பட்ட இசையமைப்பாளர். மற்ற பாடல்களை விட காதல் பாடல்களை, அதுவும் யுவன் குரலில் கேட்கும் போது மிக எளிதாக மனசுக்கு நெருக்கமாகி விடும். துள்ளுவதோ இளமையில் நிஜமாகவே அதிகம் துள்ளியது, துள்ள வைத்தது  யுவனின் இசைதான். அதில் ஆரம்பித்து இதோ நான் மகான் அல்ல வரை அவரின் குரல்களில் கேட்கும் பாடல்கள் எல்லாமே  ஒரு வித ஈர்ப்பை, ஒரு சந்தோஷத்தை, கூடவே சேர்ந்து பாடும் விருப்பத்தை கொடுக்கின்றன.  "வா வா நிலவ புடுச்சு" : ராகுல் நம்பியார் குரலிலும், நா.முத்து குமார் வரிகளிலும் அவ்வளவு உற்சாகம். "வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு" என நம்மையும் சேர்ந்து பாடவைக்கும் நல்ல ENERGETIC SONG. எல்லோருக்கும் பிடித்தமான மெட்டு பாடலை எளிதாக ஹிட் லிஸ்டில் சேர்த்து விடும்.   காதலுக்கும், காதலர்களுக்கும் யுவனின் அடுத்த டெடிகேஷன் "இறகை போலே" . யுகபாரதியின் வரிகளும், யுவனின் காதலை கொஞ்சும் குரலும்,வித்தியாசமான அந்த     இன்ஸ்ட்ருமெண்டல் பிட்டும்.. அப்படியே  மெஸ்மரிசம் செய்து அந்த பாட்டுக்கு நம்மை  அடிமையாக்கி விடுகிறது. ஹய்யோ.. இன்னும் எத்தனை முறை இந்த

INCEPTION ( கனவு வேட்டை) - ஒரு அனுபவம்

Image
மன்னிக்கவும், இது கனவு வேட்டை பற்றிய விமர்சனம் அல்ல. படம் பார்ப்பதற்கு முன்... கோபு அண்ணா : (மொபைலில்)  டேய் மனோ, என்ன பண்றே.. நான் : அண்ணா, கனவு வேட்டைன்னு ஒரு படம். பட்டையே கிளப்புதாம். நானும் குட்டியானும் கிளம்பிட்டோம். நீ வர்றியா.. கோபு அண்ணா : இல்லடா... இப்பதான் வேலை முடிஞ்சிது.. கொஞ்ச நேரம் தூங்கலாம்னு பார்க்கிறேன். நான் : தூங்கறதா இப்ப முக்கியம். இது ஒரு அட்டகாசமான, வினோதமான படம்.  மிஸ் பண்ணவே கூடாது. அப்புறம் வாழ்நாள் முழுக்க இந்த படத்தை மிஸ் பண்ணிட்டேமேன்னு வருத்தபடுவே..  படம் பார்த்தா மிரண்டு போய்டுவ... வா... கோபு அண்ணா :என்னடா இப்படி பயமுறுத்தறீங்க.. சரி வீட்ல சொல்லிட்டு வரேன். இடையில் A .P யுடன் போனில் : டேய் மனோ பேசறேன், கனவு வேட்டை படத்துக்கு போறோம்.  வரியா..? AP  : படத்துல பிட்டு வருமா..? நான் : டேய் மூதேவி, இது ஒரு SCI -FICTION மூவி. அதெல்லாம் வராது. AP      : அப்ப நான் வரலே.. நான் :  சரி வராதே. தியேட்டர் செல்லும் வழியில்..  கோபு அண்ணா: டேய், எந்த தியேட்டர் ? குட்டியான் : M.P.S.- மங்கலம் ரோட்ல.. கோபு அண்ணா: அது இங்கிருந்து 15 KM தள்ளி இருக்கு. இந்த வெயில

புலி - இசை விமர்சனம்

Image
ரஹ்மான் இசையில்  முதல் நேரடி தெலுங்கு படம். ஆல்பம்  ரீலிசாகும் வரை  நகம் கடித்து காத்திருந்த டோலிவூட்  பாடல்களை கேட்டவுடன், சூப்பர் என்றும்  படு மொக்கை என்றும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது. நம்மை பொறுத்தவரை  ஆறில் மூன்று  பாடல்கள் வெகு அமர்க்களம்.   நல்ல இசை கேட்பதற்கு மொழி ஒரே தடையே இல்லை.  தெலுங்கில் எனக்கு நன்கு தெரிந்த ஒரே வார்த்தை ஜருகண்டி.. ஜருகண்டி.. (திருப்பதி புண்ணியத்தில்). இருந்தும் பாடல்களை ரசிக்க முடிவதற்கு  காரணம் ரஹ்மான் என்னும் மந்திரச் சாவி. இந்த ஆல்பம் ஒரு ஸ்லோ பாய்சன் போல.. கொஞ்சம் கொஞ்சமாய் கேட்பவரை தன்வச படுத்தி விடும். POWER STAR -  ஹீரோவின் INTRO பாடல் போலிருக்கிறது.  பாட்டின் ஆரம்பத்தில் ஹாரிஸ் ஸ்டைலில் வரிகள் புரியாமல் கயா முயா என்கின்ற பெண்ணின்  குரல் சற்றே வயிற்றை கலக்கினாலும், போக போக கேட்க முடிகிறது. விஜய் பிரகாஷ் கொஞ்சம் ரொமாண்டிக்கான ரகசியம் பேசும் குரலில் பாடியிருப்பதை ரசிக்கலாம்.  AMMA THALE -    நிச்சயம் 'அம்மா தலே' ஆந்திராவையே ஆட வைக்க போகிறது. அட்டகாசமான டியுன். பல்லவி, சரணம் என எந்த கட்டுப்பாடுகளும் இன்றி காட்டாறு போல பாயும் மெட

ஞாபகங்கள்..

Image
கவிதை  எழுத யோசிக்கும் கால நேரங்களில்... ட்ராபிக்கில் சிக்னலுக்காய் காத்திருக்கும் சில்லறை நிமிடங்களில்.. கிட்டாரின் நரம்புகளை விரல்கள் தீண்டிடும் சிறு தருணங்களில்.. பரபரப்பான கிரிக்கெட்டின் விளம்பர இடைவேளைகளில்... நடைபாதைக்கடை இட்லியே ருசிக்கும் பொழுது விக்கல் ஏற்படும் வினாடிகளில்.. உடலின் ஓவ்வொரு மில்லி மீட்டரையும் மழை ஆக்ரமிக்கும் பொழுதுகளில் ... உன் புன்னகை முகம் புயலாய்  - எனை தாக்கும் போதெல்லாம்...  மௌனமாய் சிரித்துக் கொள்கிறேன்..

கொலையுதிர் காலம் - ஒரு பார்வை.

Image
சுஜாதா சாரின் சாகா வாரம் பெற்ற நாவல்களில்  கொலையுதிர் காலத்திற்கு என ஒரு தனி இடம் உண்டு. 1981 ல் எழுதிய நாவல் இது. இப்போது படித்தாலும் சும்மா விறு விறு விறுவென பறக்கிறது.  கணேஷ் வசந்த் ஜோடி இந்த நாவலில் பட்டையே கிளப்பியிருப்பார்கள். அதுவும் வசந்தின் டைமிங் காமெடி இந்த நாவலில் சற்று தூக்கலாகவே இருக்கும். எப்போதும் என்னை ஆச்சரிய படுத்தும் விஷயம்.. சுஜாதா சார் இந்த இரு கதா பாத்திரங்களை வடிவமைத்திருக்கும் விதம்.. கணேஷ் எப்போதுமே சீரியசாக, தன் கேள்விக்கு விடை தெரியும் வரை அதை துரத்துபவன்.. கொஞ்சமாய் பேசுவான். சுஜாதா அவர்களின் புத்திசாலித்தனம் அந்த கேரக்டர் மூலம் வெளிப்படும். வசந்த் அதற்க்கு நேர் மாறானவன்.. சீரியஸ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும்  ஜாலி மேன். ஓயாமல் பேசி பேசி பெண்களை வளைக்க போராடுபவன்.. அவ்வப்போது A ஜோக் சொல்லி பெண்கள் முகம் சிவக்க வைப்பான். சுஜாதா அவர்களின் குறும்புத்தனம் வசந்தின் மூலம் பக்கத்துக்கு பக்கம் நம்மை வசீகரிக்கும். ஒரு எஸ்டேட் சொத்து விஷயங்களை மேற்பார்வை இடுவதற்காக வரும் கணேஷ் வசந்த்,  அங்கு நடக்கும் அமானுஷ்யமான விஷயங்களை கண்டு ஆர்வத்தில் மூக்கை நுழைக்க,

மதராச பட்டிணம் - விமர்சனம்

Image
தமிழில் ஒரு டைட்டானிக்.  காதல் ஒரு காற்று போல..  யாரையும், எப்போது வேண்டுமானாலும் தீண்டிச் செல்லும். ஒரு வெள்ளைக்கார கவர்னர் பெண்ணுக்கும், சலவை தொழில் செய்யும் ஒரு இந்திய வாலிபனுக்கும் இடையே பூக்கும் இந்த காதலும் அதை சொன்ன விதமும் ஒரு செல்லுலாய்ட் ஆச்சரியம். 1945 - 47களில் உள்ள மதராச பட்டினத்தில் நடக்கும் க(வி)தை. அதற்காக இந்த படக்குழு மெனக்கெட்டிருக்கும் விஷயங்கள் ஏராளம். பழைய சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், பக்கிங்காம் கால்வாய் (இப்போதைய கூவம்), டிராம் வண்டிகள், அந்த கால கார்கள், மவுண்ட் ரோடு, என தத்ரூபமாக நம் கண்களுக்குள் கொண்டு வந்து நிறுத்தி,   அதற்கு நடுவே ஒரு பரவசமான காதல் என 3 மணி நேரம் நம்மை சீட்டோடு சீட்டாய்  கட்டிப்போட்டு விடுகிறார்கள். இயக்குனர் விஜய்க்கு ஒரு மிக  பெரிய ராயல் சல்யூட்.  அவரின்  திரைக்கதை, காட்சிக்கு காட்சி சபாஷ் போட வைக்கிறது. ஒரு காதல் கதைக்குள்,  கடைசி கட்ட சுதந்திர போரட்ட நிகழ்வுகள், வெள்ளையர்களின் ஆதிக்க வெறி, போராட்ட காலங்களில் சாமானிய மக்களின் பார்வை நிலை, ஆங்கில அரசுக்கு வேலை செய்யும் இந்திய அதிகாரிகளின் உணர்வுகள்,  ஆங்கிலேயே கலாச்சாரம் ("நான் க

தில்லாலங்கடி - இசை விமர்சனம்

Image
  தெலுங்கில் காட்டுதனமாய் ஓடிய "கிக் " தமிழில் தில்லாலங்கடியாக மாறியுள்ளது. தெலுங்கு பட வெற்றிக்கு அதன் இசையமைப்பாளர் தமனும் ஒரு காரணம்.  தமிழில்  யுவன் ஷங்கர் ராஜா. பாடல்கள் சற்றே சுமார் ரகம்தான்.என்ன ஆச்சு யுவன்? சித்ரா தன் மயக்கும் குரலில் பாடியிருக்கும் "சொல் பேச்சு கேட்காத " பாடல் கேட்கும் ரகம். பாடல் முழுக்க நல்ல ஆர்க்கஸ்ட்ரேஷேன். ஆனால் இந்த ட்யுன் ஏற்கனவே கள்வனின் காதலியில் கேட்ட ஒன்று.  விஜய பிரகாஷ், நவீன் பாடிய 'டிங் டிங்" பாடலும், சிம்பு, மன்சி ஸ்கூட் பாடியிருக்கும் "பாட்டு பாட்டும்"  கேட்க கேட்க பிடித்து போகலாம். அந்த இடைவிடாத முயற்சியே சன் பிச்சர்ஸ் பார்த்துக்கொள்ளும்.     "இதயம் கரைகிறதே"  ஸ்ரீ வர்தினியின் குரலில் நிஜமாகவே இதயம் கரைகிறது.   .ஆனால் இந்த மெட்டையும்   வேறு எந்த படத்திலோ கேட்ட ஞாபகம். மொத்தத்தில் ஏழு பாடல்கள் இருந்தும் சூப்பர், தூள் என சொல்லகூடிய அளவுக்கு எந்த பாடலும் இல்லை என்பது வருத்தமே. யுவன் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதால் பாடல்களை எப்படியும் நம் மண

வாகமன் - TOUR SPOT

Image
எப்படி இந்த இடம் இம்புட்டு நாட்களாய் நம் கண்களுக்கு படவில்லை என உங்களை புலம்ப வைக்கும் அருமையான சுற்றுலா தலம் வாகமன் . கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பூலோக சொர்க்கம்.  கடல் மட்டத்திலிருந்து 3500  அடி உயரத்தில்,  கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை கார்ப்பெட் புல்வெளிகள் என இயற்கையின் பிரம்மாண்டம் நம்  விழிகள் விரிய செய்கிறது.  எப்போதுமே தூவிகொண்டிருக்கும் மெலிதான சாரல், ஆள் அரவமற்ற அமைதி, கண்களை குளிர்விக்கும் பசுமை என இங்கு வரும் ஒவ்வொரு மனிதனும் கடவுளாவான்.இயற்கையில் கரைந்து போவான். 10  முதல் 25 டிகிரி வெப்பநிலை மட்டுமே நிலவுவதால் பிரிட்ஜில் வைத்தது போல இருக்கிறது ஊர். நம்  கால்களுக்கு கீழ் மிதந்து செல்லும் மேகங்களும், முதுகு தண்டை சில்லிட  வைக்கும் குளிரும் ஒரு ரம்மியமான அனுபவத்தை தருகிறது.   குரிசு மலா, முருகன் மலை, தங்கல் மலை என முக்கியமான மூன்று இடங்கள். இதில் குருசு மலாவில் மிக பழமையான புனித செபஸ்டியன் தேவாலயம் உள்ளது. ஓவ்வொரு புனித வெள்ளி அன்றும்   இங்கு கூட்டம் அம்முகிறது. .  வாகமன் முழுதும் தேவதாரு மரக்காடுகளும், பச்சை புல்வெளி பிரதேசங்களும்,