Posts

Showing posts from January, 2011

சிறுத்தை - விமர்சனம்

Image
காரமான ஆந்திர மிளகா பஜ்ஜியே கதற கதற வாயில் திணித்து கண், காது, மூக்கு இன்னும் உடலில் துவாரம் உள்ள மிச்ச சொச்ச  இடங்களிலும் புகை வர வைத்திருக்கிறார்கள். சர்க்கரை  போல சந்தானத்தின் காமெடி இருப்பதால் தப்பித்து கொள்கிறோம். என்னதான் டைம் பாஸ் படம் என்றாலும் நல்ல தமிழ் சினிமாக்களின் ராஜ பாட்டையில்   இந்த மாதிரி படங்கள் ஒரு ஸ்பீட் பிரேக் போலத்தான். ஒரு கார்த்தி பிக்பாக்கெட் அடிக்கிறார், தமன்னாவை லவ்வுகிறார்,சந்தானத்துடன் இணைந்து கிக்கிரி பிக்கிரி காமெடி செய்கிறார். ஜாலி வாலாவாக சுற்றும் அவரது இமேஜை காலி செய்யும் விதமாக ஒரு குட்டி பாப்பா இவரை அப்பா என்றழைத்து  அவருடன்  வந்து  ஒட்டிக்கொள்கிறது. கூடவே இலவச இணைப்பாய் தடி தடியான வில்லன்கள் தடிமனான ஆயுதங்களுடன் கார்த்தியே கொலை செய்ய முயற்சிக்க, இன்னொரு கார்த்தி என்ட்ரி. அவர் ஒரு படு பயங்கர போலீஸ் + குழந்தையின் அப்பா.  ஆந்திராவில் தொங்கனா கொடுக்கா வில்லன்களை அடித்து துவம்சம் செய்து நாட்டு மக்களுக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும் கொடுப்பவர். தமிழ் சினிமாவில் அடுத்த சீன் என்ன...  போலீஸ் கார்த்தி வில்லன்களால் தாக்கப்பட்டு இறக்க, பிக்பாக்கெட் கார்த்தி