தற்போது தமிழ் சினிமா மறந்துபோன ஐந்து பாரம்பரிய விஷயங்கள் 1 . கிளைமாக்ஸ். வில்லனுக்கும், ஹீரோவுக்கும் நடக்கும் கடுமையான மோதலில், ஹீரோ படு பயங்கரமாக தாக்கப்பட்டு கீழே விழுந்து கிடக்க.. உடனே ஹீரோவின் நினைவுகளில், வில்லனால் கொலை செய்யப்பட்ட அம்மாவின் முகமோ , தங்கையின் முகமோ பிளாஷ் அடித்து, வேகமாக நூறு வயலின்கள் வாசிக்க, அதன் பின் ஹீரோ வெகுண்டெழுந்து வில்லனை துவம்சம் செய்வது. 2 . ஹீரோயின் வில்லனின் கற்பழிப்பு பிடியில் வசமாக சிக்கிக்கொண்டு, புடவை உருவப்பட்டு, ஐந்து நிமிடம் துரத்தி விளையாடி , படுக்கையில் வீழ்த்தி, இறுதியில் வில்லன் ஹீரோயின் கழுத்தில் முகம் புதைக்கும் போது ஹீரோ சரியாக அங்கு என்ட்ரி ஆவது.. (இப்போதெல்லாம் ஹீரோ என்ட்ரி ஆவதில்லை. கற்பழிப்பு காட்சிகளை மிக டீடெய்லாக காட்டி விடுகிறார்கள்). 3 . ஹீரோ ஏழை என்றோ ...அல்லது கீழ் சாதி என்றோ ஹீரோயினின் அப்பா, காதலை எதிர்ப்பது. (இப்போது இந்த விஷயத்தில் பெற்றோர்களை எவனும் மதிப்பதே இல்லை). 4 . ஹீரோ தனது புஜ பல பராக்கிரமத்தை காட்டி எல்லோரையும் அடித்து துவைத்த பின் சரியாக போலீஸ் வருவது. 5 . இறுதிய...