சுறா - இசை விமர்சனம்
விஜய் பட பாடல்களின் வழக்கமான பார்முலாவில் இருந்து துளியும் விலகாமல் இருக்கிறது சுறா படத்தின் பாடல்களும். ஹீரோ துதி பாடும் ஓபனிங் சாங். மூன்று டூயட்டுகள், அப்புறம் அநியாயத்தை தட்டி கேட்க புறப்படும் ஹீரோவை உசுப்பேற்றும் புரட்சிகர பாட்டு. இறுதியில் ஹீரோயினின் திறமையே நாட்டுக்கு உணர்த்தும் குத்து பாடல் ஒன்று.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால்.. வேட்டைக்காரன் அளவிற்கு கூட எந்த பாடல்களும் எளிதில் கவரவில்லை என்பதே..
எலெக்ட்ரிக் கிடாரின் பீட்டோடு தொடங்கும்.."நான் நடந்தால் அதிரடி" ஓரளவிற்கு தேறுகிறது. "தஞ்சாவூர் ஜில்லாகாரி " ஏற்கனவே கேட்ட சாயல் இருந்தாலும் பரவாயில்லை, ரசிக்க முடிகிறது. மீதமுள்ள நான்கு பாடல்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. BELOW AVERAGE.
மணி ஷர்மா இம்முறை விஜய் காலை வாரி விட்டார் என்றே தோன்றுகிறது. எனினும் சன் டிவி யின் உபயத்தாலும் , F . M புண்ணியத்திலும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்து பாடல்களை ஹிட்டடித்து விடுவார்கள்.காதுகள் பத்திரம்.
VERDICT : 1 .5 STARS - உப்பு சப்பில்லாத சுறா .
Comments
Post a Comment