நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 4

1 பொன்னியின் செல்வன் - அமரர்.கல்கி.


தமிழின் மிக சிறந்த புதினம்... இப்போதும்... எப்போதும்... இன்னொரு நூல் இது போல என்றும் வருவதற்கில்லை. 1950 ல் எழுதப்பட்ட இந்நூல் பல தலை முறைகளை கடந்தும் அதன் கம்பீரம் மாறாமல் இன்னமும் விரும்பி வாசிக்க படுகிறது.

பொன்னியின் செல்வன் ஒரு அபாயமான சுழல் போல... நம்மை அப்படியே  உள் இழுத்துகொள்ளும். ஐந்து பாகங்கள்.. தொண்ணுற்று ஒன்று  அத்தியாயங்கள் கொண்ட பிரம்மாண்டமான ஒரு புதினத்தை ஒரே மூச்சில் படிக்க செய்திடும்  மந்திர எழுத்துக்கள். இரவு, பகல், தெரியாமல்... பசி, தூக்கம் மறந்து இந்த புத்தகமே கதி என கிடக்க வைக்கும் அனுபவம்  எனக்கு மட்டுமல்ல படித்தவர் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம்.

ஆச்சரியமான விஷயம்.. இப்போது நம் கைகளில் ஐந்து பாகங்களும் ஒரு சேர இருக்கிறது.. ஒரே மூச்சில் படித்து விடுகிறோம். அனால்.. இந்த கதை எழுதப்பட்ட காலத்தில், ஒரு தொடராக சுமார் 3 1/2 வருடங்கள்,  வாரம் ஒருமுறை நம் மக்கள் பொறுமையாய் காத்திருந்து படித்தது வியப்பான ஒன்று. வேறெந்த ஒரு தொடரும் லட்சகணக்கான மக்களை இவ்வளவு வருட காலம் வசீகரித்து வந்தததில்லை.

வந்திய தேவன், அருள்மொழி, குந்தவை, நந்தினி, பூங்குழலி, கரிகாலன், வானதி, சின்ன பழுவேட்டரையர், பெரிய  பழுவேட்டரையர் என அக்கதை மாந்தர்களோடு ஒருவராய், நாமும் பயணிக்கும் ஒரு மிக பிரம்மாண்டமான சரித்திர பயணம் இப்புத்தகம். 

குறிப்பாக, குந்தவைக்கும்  வந்திய தேவனுக்கும் இடையேயான காதலும், அவர்களின் உரையாடல்களும், மறக்கவே முடியாத பசுமையான பக்கங்கள். 

தமிழுக்கு பெருமை சேர்த்த புத்தகங்களில் பொன்னியின் செல்வனுக்கு என்றும் நிலையான ஒரு  இடம் உண்டு.  இதை வாசிப்பது நிச்சயம் ஓரு அற்புதமான அனுபவம்.

இந்த பதிவை, தொடர் பதிவாக எழுத இதை படிக்கும் எல்லோரையும் அழைக்கிறேன். இதன் மூலம், தமிழின் வேறு மிக சிறப்பான புத்தகங்களையும் அடையாளம் காண முடியும் என்கின்ற ஆசையில்.  புத்தகங்கள்... ஒரு நல்ல நண்பன் உங்களுக்கு பிடித்தமான நண்பர்களையும்  வரிசை படுத்துங்கள்.. ..வாசிக்க காத்திருக்கிறேன்.

Comments

 1. it takes lot of time to open your blog, please rectify or remove colr photos.

  ReplyDelete
 2. பொன்னியின் செல்வன் பகிர்வுக்கு நன்றி..!

  என்னக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் இல்லை சார் நல்ல புத்தகங்களை விமர்ச்னகளுடன் அறிமுகபடுத்தினால் வாசிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. அன்புள்ள மனோ அவர்களுக்கு!

  ‘பொன்னியின் செல்வனை’ பற்றி எழுதியிருந்ததைப் படித்ததும் ‘கல்கி’யின் கனவுலகுக்கு மீண்டும் சென்று வந்ததைப்போன்ற தாக்கம் ஏற்பட்டது. கல்கி அவரது ‘பொன்னியின் செல்வன்’ நாயக, நாயகியருடன் உள்ள இந்த ஓவியம் மிகவும் அழகாக இருக்கிறது. ஒரு எழுத்தாளருக்கு இதைவிட ‘சிறந்த பரிசு’ வேறு எதுவும் இருக்க முடியாது!

  கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ தான் என்றுமே என் மனதில் முதலிடத்தில் உள்ள நாவல். பல்லவ இளவரசன் நரசிம்மனுக்கும் ஆடலரசி சிவகாமிக்கும் இடையே மலர்ந்த காதல், சிவகாமியின் கலை கர்வத்திற்கும் நரசிம்ம பல்லவனின் அரசியல் நிர்ப்பந்தத்திற்கும் இடையே அனலாய் கொந்தளிக்கும் உணர்ச்சிகள், இடையே சிவகாமியை தன்னையே மறந்து நேசிக்கும் புத்தத் துறவி நாகநந்தியின் காதல்-இப்படி ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு பாகமும் நம்மை அந்த பல்லவ சாம்ராஜ்யத்திற்கும், சிற்பங்களிடையே நடனமாடும் சிவகாமியிடமும் அழைத்துச் சென்று விடும். இதை எத்தனை முறை படித்திருக்கிறேன் என்பதே எனக்கு நினைவில்லை. கடைசி பக்கம் படிக்கும்போது கண்ணீர் வழிவதும் இன்று வரை நிற்கவில்லை.
  இதை எழுத சந்தர்ப்பம் கொடுத்ததற்கு என் நன்றி!

  ReplyDelete
 4. மனோ அவர்களுக்கு, தங்களின். பதிவு நன்றாக இருந்தது. 3 மாதங்களுக்கு முன்பு தான் பொன்னியின் செல்வன் மீண்டும் ஒரு முறை படித்தேன். முதலில் படித்தது. சிறு வயதில் - பத்தாவது படிக்கும் சமயம் என நினைக்கிறேன். எங்கள் வீட்டில் அந்த காலத்தில் வாரப் பத்திரிகைகளில் வரும் தொடர்கள் அனைத்தையும் சேர்த்து bind செய்து வருவோம். இப்பொழுதும் தொடர்கிறது. நான் இப்பொழுது படித்தது pdf வடிவிலானது. ஆரம்பித்ததில் இருந்து விடாமல் தொடர்ந்து படித்து முடித்து விட்டேன். முடிந்த பின்பும் பல நாட்கள் அதே சிந்தனையில் இருந்தேன். பார்ப்பவரிடம் எல்லாம் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். நான் தற்சமயம் இருப்பது. UAE - ல். என் மனைவி, மகள், சகோதரி ஆகியோரையும் படிக்க தூண்டி உள்ளேன். என்னைப் பொருத்தவரையில் தமிழ் எழுத படிக்க தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும் என்பது என் ஆவல். என் நண்பர்களுக்கும் நான் பரிந்துரைக்கிறேன்.
  பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 5. அன்பு மனோ
  என் இருபதாம் அகவையில்
  என்னுடன் உறவாடிய
  வந்திய தேவன், அருள்மொழி, குந்தவை, நந்தினி, பூங்குழலி, கரிகாலன், வானதி, சின்ன பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையர்
  என பொன்னியின் செல்வனை
  என் முன் நிறுத்தியதற்கு மிக்க
  நன்றி......
  இந்நாவலின் தாக்கம்
  என் மகன் சிபி சக்கரவர்த்தி....

  ReplyDelete
 6. k


  கோவை குழந்தையே
  சிங்கார சென்னை -உன்னை
  அரவணைக்கிறது .........

  ReplyDelete
 7. கோவை குழந்தையே
  சிங்கார சென்னை -உன்னை
  அரவணைக்கிறது .........

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4