யாதுமாகி.. - விமர்சனம்
விதி வலியது... வேறென்ன சொல்ல... தம்பிக்கு இந்த ஊரு.. மாத்தி யோசி படங்களின் விமர்சனங்கள் ஏற்கனவே பீதியே கிளப்பியதால் மீதமிருக்கும் ஒரே OPTION யாதுமாகி.. நம்பி தியேட்டர்க்கு போனேன்பா... சும்மா 2.5 மணி நேரம்.... கதற கதற.. மொக்கை போடுறாங்க...
கதை... பொன்னேட்டில் பொரித்து வைக்க வேண்டிய கதை. ஹீரோ சமூக சேவை காரணமாக அடிக்கடி பிரச்சனையில் சிக்கிக் கொண்டு காடாறு மாதம், நாடாறு மாதம் என வசிப்பவர். அதாவது.. வீட்டில் 15 நாள். மேன்ஷன் நண்பர்களுடன் 15 நாள். விளம்பர நிறுவனத்தில் PHOTOGRAPHER.ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பிரச்சனை காரணமாக பழைய மேன்ஷனில் இருந்து புது வீட்டிற்கு குடி போகிறார். வீட்டு உரிமையாளர் மகள் நம்ம ஹீரோயின். ஹீரோயின் நம்ம ஹீரோவை ஒரு தலையாய் லவ்வுகிறார். நம் ஹீரோ, ஹீரோயினை அவரது வேண்டுகோளுகிணங்க எடுத்த புகைப்படம் ஒன்று அவரது விளம்பர நிறுவன சகா மூலமாய் உள்ளாடை விளம்பரங்களில் மார்பிங் முறையில் பயன்படுத்தபடுகிறது. இதை அறியாத ஹீரோ வீட்டில் சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க.. லவ்வை சொல்லாத ஹீரோயின் மனமுடைந்து தன் தந்தையுடன் சொந்த ஊருக்கு சென்று விடுகிறார். மீண்டும் ஒரு சமூக சேவை காரணமாக கல்யாணத்தை நிறுத்தும் ஹீரோ.. வீட்டிக்கு பயந்து எதோ ஒரு பஸ் ஏறுகிறார். YES.. உங்கள் யூகம் சரி... அது சரியாக நம் ஹீரோயின் இருக்கும் ஊருக்கே செல்கிறது. அங்கு ஹீரோயினை கண்ட ஹீரோ காதல் வயப்படுகிறார். தன் புகைப்படம் தவறான விளம்பரங்களுக்கு பயன்படுவதை கண்ட ஹீரோயின் இம்முறை ஹீரோவை காதலிக்க மறுக்கிறார். எத்தனையோ முயற்சிகள் செய்தும் மனம் மாறாத ஹீரோயினை கண்டு நம் ஹீரோ மனம் வெறுத்து, தமிழ் படங்களின் குல வாகனமான தண்ணி லாரியில் அடிபட்டு சாக அதன் முன் பாய்கிறார். உடனே ஹீரோயின் இடையில் புகுந்து அடிபடுகிறார். அடிபட்ட ஹீரோயின் பிழைத்தாரா? ஹீரோவை ஏற்று கொண்டாரா என்பதை மனதில் நெஞ்சுரம் உள்ளவர்கள் தியேட்டர்க்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஒரு முழு ஆட்டு குட்டியே விழுங்கிய மலை பாம்பு போல படம் திக்கி திணறி நகர்கிறது. அழுத்தம் இல்லாத கதை. சுவாரசியமே இல்லாத திரைகதை, சவ சவ வசனங்கள் என படம் நெடுகிலும் நம் பொறுமையே சோதித்து சீட்டை கிழிக்க வைக்கிறது.
சுனைனா, தமிழ் சினிமாவின் பாரம்பரிய வழக்கப்படி ஒரு முழு லூசு ஹீரோயின்.படம் பூராவும் பாவாடை தாவணியில் வருகிறார். கெக்கே பிக்கே என சிரிக்கிறார். காரணமே இன்றி காதலில் விழுகிறார். ஆனாலும் படத்தின் ஒரே RELAXATION இவர்தான். ஹீ.. ஹீ..
ஹீரோ புது முகம் சச்சின். , ஹீரோயினிக்கு சிறிதும் சளைத்தவர் அல்ல என்று அரை லூசாக வருகிறார். பிரேம்ஜி அமரன் போல தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது, நடு மண்டையில் சுத்தியலால் போடலாம் போல தோன்றுகிறது.
இயக்குனர் இந்த படத்தில் பல்வேறு புதுமைகள் செய்துள்ளார். ஹீரோவிற்கு அக்கா போன்று இருப்பவரை அவரது அம்மாவாகவும், ஹீரோயினிக்கு அம்மா போல இருப்பவரை அவரது தோழியாகவும் நடிக்க வைத்திருப்பது வெகு சிறப்பு. வேறு எதுவும் இயக்குனரை பற்றி சொல்ல தோன்றவில்லை.
படத்தில் உருப்படியாக எதுமே இல்லையா என கேட்பவர்களுக்கு, ஜேம்ஸ் வசந்த் அவர்களின் இரண்டு பாடல்கள் தேறுகின்றன. அதுவும் சரியான சிச்சுவேஷனில் இல்லாததால் படத்தில் ஒட்டவில்லை.
(+) பிளஸ்.
அட விடுங்க பாஸ்.
(-) மைனஸ்
திரைகதை, வசனம்.
1990 களில் வந்திருக்க வேண்டிய கதை.
கேரக்டர் செலெக்ஷன்
VERDICT : யாதுமாகி... மொக்கை தவிர வேறேதுமில்லை.
RATING : 2.3 / 10.0
EXTRA பிட்டுகள் :
கடும் கண்டனங்கள் : இந்த படத்தின் இயக்குனருக்கும். , பாதி படத்தில் எங்களை வெளிய விட மறுத்த ஜோதி தியேட்டர் வாட்ச் மேனுக்கும்..
ஆழ்ந்த அனுதாபங்கள் : இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், IPL போட்டிகளை புறக்கணித்து விட்டு என் நச்சரிப்பின் காரணமாக என்னுடன் படத்திற்கு வந்து மொக்கை வாங்கிய என் நண்பர்கள் குட்டி மற்றும் சிவாவிற்கும்
இந்தப் படம் வெளி வந்ததால் நடந்த உருப்படியான ஒரே விசயம், உங்களுடைய அருமையான இந்த விமர்சனமென்றுதான் நினைக்கிறேன்.
ReplyDeleteMohan's comment is acceptable....
ReplyDeleteகடும் கண்டனங்கள் : இந்த படத்தின் இயக்குனருக்கும். , பாதி படத்தில் எங்களை வெளிய விட மறுத்த ஜோதி தியேட்டர் வாட்ச் மேனுக்கும்.. //
ReplyDeleteசூப்பர் பஞ்ச் மாமேய்...வோட்டு போட்டாச்சு
நல்ல வேளை தோழா நான் தப்பிச்சேன்... நன்றி
ReplyDelete//தமிழ் படங்களின் குல வாகனமான தண்ணி லாரியில் அடிபட்டு சாக அதன் முன் பாய்கிறார்.//..........:-)
ReplyDelete//இயக்குனர் இந்த படத்தில் பல்வேறு புதுமைகள் செய்துள்ளார். ஹீரோவிற்கு அக்கா போன்று இருப்பவரை அவரது அம்மாவாகவும், ஹீரோயினிக்கு அம்மா போல இருப்பவரை அவரது தோழியாகவும் நடிக்க வைத்திருப்பது வெகு சிறப்பு.//.....ஆஹா.. என்னவொரு புதுமைகள்!
உங்க விமர்சனம் நல்ல இருக்கு!