நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 3
எங்கள் வாத்தியார் ஒரு தீர்க்க தரிசி என்பதை பறை சற்றும் ஒரு அற்புதமான சிறுகதை தொகுப்பு. 20 - 25 வருடங்களுக்கு முன் கற்பனையாய் எழுதிய விஷயங்கள் இப்போது நிஜத்திற்கு மிக அருகில். ஆங்கிலத்தில் மட்டுமே பழக்கப்பட்ட SCIENCE FICTION சமாச்சாரங்கள் முதன் முதலில் தமிழில், பிரமிக்க வைக்கும் எழுத்து நடையில் அமைந்த நூல் இது. இதில் வரும் "ஜில்லு" என்னும் சிறுகதை நிச்சயம் உங்களை தூங்க விடாது.
3 . ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் - சுஜாதா
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் ஒரு பொக்கிஷம். கதைகள் என்பதையும் தாண்டி ஒரு அழகான வாழ்வியல் அனுபவம். நமக்குள் ஒளிந்து கிடக்கும் நுண்ணிய உணர்வுகளை மயிலிறகு கொண்டு எழுப்புவதை போல சிநேகமான எழுத்துக்கள். படிக்கும் ஒவ்வொருவரையும் ஒரு சேர சிரிக்கவும் வைக்கும், அதே சமயத்தில் கண்ணீர் சிந்தவும் வைக்கும் ஆச்சர்யம் இது. காதல், நட்பு, கடவுள், அரசியல், கிரிக்கெட் என எல்லா இடங்களையும் தொட்டு செல்லும் எழுத்து நதி இந்த புத்தகம். சாரலாய் தூறும் மழையில் நனைந்த படி உங்கள் மனம் பிடித்தவரின் கைகள் கோர்த்து நடக்கும் போது உணர்வீர்களே ஒரு சந்தோஷத்தை.... இந்த புத்தகமும் அதே உணர்வினை கொடுக்கும்.
2 . காந்தளூர் வசந்த குமரன் கதை - சுஜாதா
ராஜா ராணி கதைகளை நான் அதிகம் படிப்பதில்லை . காரணம், "இளவரசி நடந்து வருகிறாள் " என்கின்ற ஒரு விஷயத்தையே 4 பக்கங்களுக்கு நீட்டி முழக்கி, எதுகை மோனை வர்ணனைகளுடன் கொட்டாவி விட வைக்கும் எழுத்து நடைதான். ஆனால் காந்தளூர் வசந்த குமாரன் முற்றிலும் வித்தியாசமானவன். உங்களை மெல்லிசாய் புன்னகைக்க வைத்துக்கொண்டே புயல் வேகத்தில் கடப்பவன். அவனுடைய காதல் குழந்தை தனமானது என்றாலும் அது ஜெயிக்க வேண்டும் என்று உங்களையும் அறியாமல் பிரார்த்திக்க வைக்கும். வரலாற்று பின்னணியில் சுஜாதா சார் எழுதிய ஒரு SWEET & CUTE LOVE STORY. இதிலும் கணேஷ் (கணேஷ பட்டர் ) வசந்த் (வசந்த குமாரன்) கதாபத்திரங்களை உள் நுழைத்து விளையாடியிருப்பார். மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் அருமையான படைப்பு. இந்த புத்தகத்தை நான் அதிகம் விரும்ப இன்னொரு காரணம்... என்னை மிகவும் நேசிக்கும் ஒரு உயிருக்கு நான் முதன் முதலில் பரிசளித்தது இந்த புத்தகத்தைதான்... அதனால் கூட இருக்கலாம்.. LOVE IS ALWAYS SWEET.
- அடுத்த பதிவில் முடியும்.
- அடுத்த பதிவில் முடியும்.
Comments
Post a Comment