மன்மதன் அம்பு - விமர்சனம்

காதல் எங்கும் நிறைந்திருப்பது. தன்னுள் நுழைந்த காதலை, சந்தேகத்தின் பேரில் தொலைக்க நினைக்கும் ஒருவனும் , தான் தொலைத்த காதலை தன் நட்பிடமும், தன்னை சுற்றியிருப்பவரிடமும் தேடும் ஒருவனும் முட்டிக்கொள்ள நேரிடும் போது ஏற்படும் குழப்பங்களும், கவிதைகளுமே மன்மதன் அம்பு. அம்பு சாக்ஷி பல பேரின் தூக்கம் கெடுக்கும் பிரபல நடிகை. கிசுகிசுக்களால் நிரம்பி வழியும் அவள் திரையுலகை வாழ்கையே வெறுக்கும் அவளின் மல்டி மில்லியனர் பணக்காரன் மதனகோபால். காதல் என்னும் தேவதையையும் மீறி, சந்தேகம் என்னும் குட்டிச்சாத்தான் மனசுக்குள் முளைக்க, அவளை வேவு பார்க்க ஒரு டிடெக்டிவை நியமிக்கிறான். தன் நண்பனின் கேன்சர் ட்ரீட்மென்ட் செலவுக்காக இந்த உளவு பார்க்கும் வேலையே மேற்கொள்ளும் மேஜர் R மன்னார், மதனகோபால், அம்பு ஆகிய மூவரின் உளவியல் மாற்றங்களை படு சுவாரசியமாக காமெடி கடலில் நீந்த விட்டிருக்கிறார்கள். உள்ளுரிலேயே எடுத்துவிடக்கூடிய கதை.... ஆனால் தயாரிப்பாளர் பசையுள்ள பார்ட்டி என்பதால் உலகின் தலை சிறந்த சுற்றுலா தலங்கள், ஸ்டார் குருஸ் என புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்....