டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4


 தாஜ்மஹால் கொடுத்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்குள் அடுத்த பிரமிப்பு ஆக்ரா கோட்டை. தாஜ் போலவே பிரம்மாண்டமான அதேசமயம் தாஜ்ஜை விட சிலாகிப்பதற்கு நிறைய விஷயங்கள் கொண்ட இடம். முகலாய அரசர்களின் ஆஸ்தான அரண்மனையாக  அந்த காலத்தில் விளங்கிய ஒன்று. நீண்டு உயர்ந்த மதில்கள்.. அகழிகள்.. பாதுகாப்பு வளையங்கள் என எதிரிகள் எளிதில் உள் நுழையாதபடி அந்தகாலத்திலேயே படு பயங்கர பிளான் போட்டு கட்டியிருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் உடனே நம்மை வசீகரிப்பது அரண்மனையின் திறந்தவெளி தர்பார். மக்கள் அமர்வதற்கு எதுவாக படிக்கட்டுகள் போல அமர்வு மேடைகள் ஆச்சர்ய மூட்டுகின்றன. 

திறந்த வெளி தர்பார் 

உட்புற கோட்டை 
ஒரு டிபிக்கல் ராஜாவின் வீடு (அரண்மனை ) எப்படி இருக்கும் என்பதை ஆக்ரா கோட்டை மூலம் உணர்ந்து கொள்ளலாம். ராணிகளின் அறைகள்.. குளிர்பதனம் செய்யப்பட்ட அந்தபுரம், ராஜாவும் ராணியும் ஓடி பிடித்து விளையாட ஏதுவான நீண்ட பால்கனிகள்.. ஆலோசனை மண்டபம், வீரர்கள் தங்குவதற்கான சிறு சிறு அறைகள் என உள்ளுக்குள் வியப்பூட்டும் விஷயங்கள் ஏராளம். 


"அக்பர்" பரமு 
பரமுவும் நானும் ஆக்ரா கோட்டையையும், கோட்டையே பார்க்க வந்த பெண்களையும் ஒரு சேர ரசித்து விட்டு வெளியே வர, கையில் பொம்மைகளுடன் ஏகப்பட்ட வியாபாரிகள் எங்களை சூழ்ந்து கொண்டனர். நான் எதுவும் வேண்டாம் என அவர்களை விட்டு விலகி வந்து விட.. பரமு மட்டும் ஒரு வியாபாரியிடம் தனக்கு தெரிந்த இந்தியில்  "கித்னா" என கேட்டு வைக்க மாட்டிக்கொண்டான்.  ஒரு பொம்மை முப்பது ரூபாய் என 10 பொம்மைகள் அடங்கிய செட் முந்நூறு என கூறி கையில் திணிக்க.. பரமு தீயே தொட்டவன் போல தெறித்து பின் வாங்கினான். இருவருக்கும் இடையே நடைபெற்ற பேரம் பத்து பதினைந்து சுற்றுகளை கடந்தும் கொளுத்தும் வெயிலில் நிற்காமல் இழுத்துக்கொண்டே போக.. ஒரு கட்டத்தில் அந்த வியாபாரி.. உன்னால் எவ்வளவுதான் தர முடியும் என்று கேட்க.. பரமு முப்பது ரூபாய்க்கு பத்தும் தர முடியுமா என கேட்டான். 
தருவியா. தரமாட்டியா..
 அந்த வியாபாரி உடனே சரி என சம்மதித்து 30 ரூபாய் கொடு என கேட்க, இந்த ஆன்ட்டி கிளைமாக்சை எதிர்பார்க்காத பரமு.. வேண்டாம் என விலக.. அவ்வளவுதான்... அந்த டெல்லி வாலா பரமு சட்டையே பிடித்து உலுக்க ஆரம்பிக்க.. பரமு அவசர அவசரமாக முப்பது ரூபாயே தேட ஆரம்பித்தான். 300 ரூபாய் பொருளை 30 ரூபாய்க்கு வாங்கிய பெருமிதத்துடன் பரமு என்னை நோக்கி வர.. அதற்க்கு பிறகுதான்  இருவரும் கவனித்தோம்.. 10 ரூபாய்க்கு 10 பொம்மைகளையும் மற்றவர் விற்றுக்கொண்டிருப்பது. 

ஆக்ராவில் இருந்து டெல்லி செல்லும் ரயிலின் முன் பதிவு செய்யபடாத பெட்டியில் ஆக்ராவின் பாதி மக்கள் தொகை பிதுங்கிகொண்டிருக்க, ரிசர்வ் கம்பார்ட்மென்ட் உள்ளே சென்று காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தோம். ரயிலில் ஒரு குடும்பம். கணவன்,  மனைவி, அப்புறம் ஒரு கை குழந்தை.. மிச்ச பேர் எல்லாம் ஆண்கள். அந்த பெண் தன் சுடிதார்க்கு துப்பட்டா என்கின்ற வஸ்து அவசியமே இல்லை என்பது போல வெளிப்படையாக அமர்ந்து கொண்டிருக்க.. தமிழ் நாட்டில், நொடிக்கொருமுறை தன் புடவை தலைப்பை சரி செய்து கொள்ளும் பெண்கள் என் நினைவுக்கு வந்து போனார்கள்.   கலாச்சாரம் என்பது என்ன..அது எந்த அளவுக்கு மனிதர்களை பன்படுத்துகிறது என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. நாம்தான்.. நாம்  பார்க்கின்ற கண்ணோட்டம் தான் தவறா.. இல்லை அங்கு இருக்கும் ஆண்கள் எல்லாம் உத்தமர்கள்,அவர்கள் அதை எல்லாம்  காம கண்களோடு  பார்க்க மாட்டார்கள் என்றால்.. எனக்கு எதிரில் அமர்ந்து கொண்டிருந்த கிழம் ஒன்று ஒவ்வொரு முறையும் ஓரக்கண்னால் அந்த பெண்ணை விழுங்கி விடுவதை போல பார்த்துக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல தெரியவில்லை. அதை விட மோசம் அந்த கணவன் செய்து கொண்டிருந்த காரியம்.. குட்காவோ, புகையிலையோ கையில் நசுக்கி வாயில் திணித்துக்கொண்டு, புளிச் புளிச் என துப்பிக்கொண்டே.. குழந்தைக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான். தமிழ் நாட்டில் நாம் வாழும் வாழ்க்கை முறை சொர்க்கத்திற்கு ஒப்பானது என்று நினைத்து கொண்டேன். 

டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தை மாலை 6 மணிக்கு வந்தடைய.. ஸ்டேஷனில் கட்டுக்கடங்கா கூட்டம். பரமு என்னை தனியாக நிற்க வைத்து விட்டு மின்சார ரயில் டிக்கெட் எடுப்பதற்காக சென்று விட.. அனாமாத்தாய் நின்று கொண்டிருந்தேன். அப்போது தேவதைகள் லிஸ்டில் சேர்ப்பதற்கு ஒப்பான பெண் ஒருவள், அங்கும் இங்கும் பார்த்து விட்டு ஒரு முடிவோடு என்னை நோக்கி வந்து EXCUSE ME என்றாள்.   

Comments

  1. முதல் வரிலிருந்து நல்லா தான் இருக்கு.. ஆனா கடைசி வரி எழுதம் போது மட்டும் ஏன் கனவு காண ஆரம்பிச்டீங்க?

    ReplyDelete
  2. நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் மனோ

    ReplyDelete
  3. டெல்லி ராஜகுமாரி என்டெர் ஆகிட்டாங்க போல!

    ReplyDelete
  4. ஹ்ம்ம்ம்..கதை இப்ப தான் சூடு பிடிக்குது போல :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....