பலே பாண்டியா - விமர்சனம்புகைப்பட ஓவியர் சித்தார்த்தின் முதல் திரைப்பட முயற்சி. நாட்டு மக்களுக்கு மெசேஜ் சொல்ல நிறைய பேர் இருப்பதால் ஜஸ்ட் லைக் தட் சிரிப்பு படம் தர முயன்றிருக்கிறார். எந்த வித லாஜிக் மேஜிக் இல்லாமல்...

பாண்டியன் தன் சாவை கூட வெற்றிகரமாக முடிக்க முடியாத ஒரு  அதிர்ஷ்டமில்லா பேர்வழி. தன்னை கொலை செய்துவிடும்படி ஒரு தாதாவிடம் போய் நிற்க.. அவர் 25 லட்சம் ரூபாய் பணத்தை குடுத்து ஒரு மாதம் ஜாலியாக சுற்றி விட்டு வா பின் மனித வெடிகுண்டாக பயன்படுத்தி கொள்கிறேன் என்கிறார். பணம் அதன் பின் காதல்.. அப்புறம் அதிர்ஷ்டம் என பாண்டியன் ஜாதகம் மாற, ஒரு மாத முடிவில், தாதாவை தேடி போக.. அவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதோடு இடைவேளை.. என்ன கதை சூடு பிடிக்கறதா.. அப்படிதான் நானும் நினைத்து பாப்கார்ன் பொட்டலத்துடன் மிச்ச பாதியே பார்க்க ஆரம்பித்தேன்.. ஸ்ஸ்ஸ்ஸ்... நிஜமாகவே முடியல..

சுவாரசியமாக ஆரம்பிக்கும் பயணம் பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்து DRY ஆகி நின்று விடுவதை போல.. இடைவேளைக்கு பிறகு படம் நொண்டியடிக்க ஆரம்பித்து விடுகிறது. காமெடி செய்வது என  முடிவெடுத்தபின்.. வில்லன் என்ன ஹீரோ என்ன.. எல்லோருமே பாரபட்சமின்றி கிச்சு கிச்சு மூட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். காமெடியன் விவேக்கை தவிர. 

இயக்குனர் புகைப்பட ஓவியர் என்பதால்.. பிரேம் பை பிரேம்.. காட்சிகளில்  அழகும்  ரிச்னெஸ்ம்  மிளிர்கிறது. புது புது கேமரா கோணங்கள் ரசிக்க வைத்தாலும்.. வலுவில்லாத கதையும், திரைக்கதையும் ஒரு வித ஆயாசத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது. 

சின்ன சின்ன ரசனையான குறும்புகள்.. சில சில இடங்களில் எட்டி பார்க்கின்றன. தான் காதலிக்கும் பெண் தனக்கு கிரீட்டிங் கார்டு கொடுத்தவுடன்.. அதிலிருக்கும் மின்மினி பூச்சிகள் அப்படியே விஷ்ணுவின் சட்டையே பிடித்து வானத்துக்கு உயர்த்துவதும்.. அந்த கார்டு தனக்கு இல்லை தன் நண்பனுக்கு  என தெரிந்தவுடன், மின்மினி பூச்சிகள்  விஷ்ணுவை விட்டு விட்டு கார்டை மட்டும் பிடிதுக்கொள்வதும் என குட்டி குட்டி ஹைகூக்கள் ரசிக்க வைக்கின்றன. புத்திசாலிதனமான ஷார்ட் & ஸ்வீட் வசனங்கள் சித்தார்த்தை நல்ல வசனகர்த்தாவாக அறிமுகம் செய்கின்றன. 

வெண்ணிலா விஷ்ணு ஒரு வித சோகத்துடன் படம் முழுக்க வளைய வருகிறார். முதல் பாதியில் அவரிடம் இருக்கும் யதார்த்தம்... சேஸிங்.. ஆக்ஷன் என வரும்போது குறைந்துவிடுகிறது. 

பியா.. பியாவிடம்.. எனக்கு பிடித்த விஷயமே.. அந்த இரண்டு.. பெரிய.. அழகான.. வடிவான வடிவுடைய கண்கள்தான். அனால் உடை விஷயத்தில் அம்மணி கோவாவில் பயன்படுத்திய டிசைன்களில் இருந்து மாறினால் தேவலை. 


ஆரம்பத்தில்  எல்லாம், பாடல்கள் மொக்கையாக இருந்தால், தம் அடிக்க வெளியே  செல்வார்கள். இப்போது விவேக்கை காட்டினாலே சிட்டாக வெளியே பறந்து விடுகிறார்கள். கற்பனை வறட்சியில் மனிதர் ரொம்பவே இம்சிக்கிறார். அந்த கட்டண கழிப்பிட காமெடியில் மட்டும் தியேட்டருக்குள் கொஞ்சம் சிரிப்பு சத்தம். 

FILTER காப்பியின் கடைசி உறிஞ்சலில் கிடைக்கும் தித்திப்பு போல படத்தின் இறுதியில் காட்டப்படும் பேப்பர் கட்டிங்குகள் ரொம்பவே சுவாரசியம். படம் முழுக்க இப்படிப்பட்ட ஐடியாக்கள் தூவியிருந்தால் ரொம்பவே ரசித்திருக்கலாம். 

"ஆறாத கோபமில்லை" பாட்டில் வரும் கலர் டோனும், எடுக்கப்பட்ட விதமும் அட்டகாசம். அதே போல "ஹாப்பி" பாட்டில் எல்லா பாடகர்களும் வருவது நல்ல முயற்சி. 

படு மொக்கையான,  லாஜிக் துளியும் இல்லாத  இரண்டாம் பாதி.. முதல் பாதி சுவாரசியங்களை மழுங்கடித்து விடுகிறது.   

DIRECTOR BOSS... இன்னமும் பயிற்சி தேவை. 


(+) பிளஸ் 

வசனங்கள் 
மேக்கிங் 

(-) மைனஸ்

திரைக்கதை 
நம்ப முடியாத கதை 
லாஜிக் 
விவேக் 


VERDICT : பலே என்று சொல்ல முடியவில்லை.

RATING   : 3.3 / 10.00

EXTRA பிட்டுகள் 

தயவு செய்து எல்லோரும் யோகா கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களையும் கற்று கொள்ள தூண்டுங்கள்.  அது உங்களை பல்வேறு ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றலாம்.    உதாரணம்,  குட்டியான்  ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாள்  தீவிர கட்டை யோகாவில் ஆழ்ந்திருந்து ஞாயிறு  காலையில் தான் திரும்பியிருந்தான்.  என்  நச்சரிப்பு தாங்காமல்    அவனது செலவில் இந்த படத்திற்கு போய் பல்பு வாங்கியதில் என் மீது வெறி தனமாக பாய்வான் என்று எதிர் பார்த்தேன். நல்லவேளை கட்டை யோகா காப்பாற்றியது.

Comments

 1. சரி மனோ நீங்க சொல்லிட்டீங்க.. நண்பர் ஒருத்தரை பழி வாங்கணும்...

  ReplyDelete
 2. டேய் மனோ தமிழ் ப்ளாக் எழுதிட்டு இருக்கற உனக்கு கட்ட யோகாவுக்கும் ஹட யோகாவுக்கும் வித்தியாசம் தெரியிலையா ..... ... எந்த ஒருத்தர் ஹட யோகா முழமையாக ஈடுபடுகிறார்களோ அவர்கள் இந்த நவ கிரகங்களின் செயல் தன்மையிலிருந்து தங்களை முழமையாக விடுவித்து கொள்ள முடியும் ..
  thats mean

  “Hata Yoga is the science of using the body to prepare oneself for the ultimate possibility.”- SADHGURU

  ReplyDelete
 3. டேய் நண்பா...

  அது கட்டை யோகா என்றுதான் குட்டியான் சொன்னான். இருந்தாலும் உன் தகவலுக்கு நன்றி.

  மனோ

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4