டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 5

கொடுமையிலேயே பெரிய கொடுமை ஏது தெரியுமா.. ஒரு அழகான பெண்ணுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அதை லூசுத்தனமாய்  இழப்பதுதான். அந்த தேவதை என்னை நெருங்கி " காடி மே.. பாடி கா..  கித்னே பஜே " என ஏதோ இந்தியில் விளிக்க.. நான் திரு திருவென இரண்டு நொடி விழித்து ஹி... ஹி.. என  இளித்தேன். என்னை ஏற இறங்க பார்த்தவள் "சாரி" என சொல்லி விட்டு கூட்டத்தில் கலந்தாள்.  இந்தி கற்காத என் மீதும், திராவிட கழகத்தின் மீது ஆத்திரம் எகிற.. நாலைந்து கெட்ட வார்த்தைகள் புதிதாய் பிறந்து இறந்தது.


கூட்டம் காரணமாகவும், நேரமின்மை காரணமாகவும் என் தம்பியின் வீட்டிற்க்கு மின்சார ரயில் தவிர்த்து ஆட்டோவில் செல்லலாம் என முடிவெடுத்தோம். ஆட்டோவை நெருங்கி நாங்கள் செல்லுமிடத்திற்கு எவ்வளவு என்று கேட்டதற்கு, என்னிடமும், பரமு தன் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் பணத்தையும் தவிர , மூன்றாவதாக இன்னொருவரிடம்  திருடினால் கிடைக்கும் தொகையே அவன்  கூறினான். என் தம்பி அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு மேல் வராது என்றதால், அந்த ஆட்டோவை தவிர்த்து இன்னொரு ஆட்டோவிடம் சென்றோம். அவனிடம் சென்று பேசுவதற்கு முன்பாகவே.. வம்சம் படத்தில் சுனைனா ஒரு குரல் கொடுப்பார்களே.. "ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...... மக்காஆஆஆஆஆஆஆஆஆஆ ......................... " என்று.. அது போல அந்த பழைய ஆட்டோகாரன் இவனிடம் ஒரு குரல் கொடுத்து "ஏற்றாதே" என சொல்ல.. அடுத்த ஆட்டோவிடம் சென்றோம்.. அங்கயும் அதே சுனைனா குரல். எல்லா ஆட்டோகாரர்களும் கூட்டாக இருப்பதை கண்டு வெறுப்பாகி முதல் ஆட்டோகாரனிடமே சரணடைந்தோம் . ஏகப்பட்ட இழுபறிகளுக்கு பின் 400 ரூபாய்க்கு அவன் ஒப்புகொள்ள ஏறி அமர்ந்தோம்.. ஆட்டோ கிளம்பி ஒரு ஐந்து  கிலோ மீட்டர் சென்றிருக்கும். தீடிரென ஆட்டோ டிரைவர்  காஸ் தீர்ந்து விட்டதாய் சொல்லி வண்டியே ஓரம் கட்டி நிறுத்தி விட்டான். வெளியே நன்றாக இருட்டிவிட்டிருக்க... முதல் முதலாக வயிற்றிக்குள் ஒரு பய பந்து கட முட கட முடவன உருள ஆரம்பித்தது. இரவில், நகரம் வேறு விதமான ஒரு நிறத்தை கொண்டு விடுகிறது. அதுவரை டெல்லியின் மீது படர்ந்திருந்த கவர்ச்சி தொலைந்து அதன் மீது புதிதாய் ஒரு அச்சம் பிறந்தது. புதிய ஊர், தெரியாத மனிதர்கள்.. புரியாத பாஷை என பயம் குழப்பி அடிக்க..  மீண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்கே அழைத்து செல்ல சொன்னோம். நீண்ட நேர முட்டி மோதல்களுக்கு பிறகு வேறொரு ஆட்டோவை அந்த டிரைவர் பிடித்து கொடுக்க.. ஒரு வித சந்தேகத்துடனே அந்த ஆட்டோவில் ஏறினோம்.. அந்த ஆட்டோ டிரைவர் சரியான கஞ்சா குடிக்கி போல... வாயில் எதையோ மென்று கொண்டே கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருளில் சென்று கொண்டே இருக்க.. அந்த கொடுமையான இரவை மறக்கவே முடியாது..  

என்னுடைய தம்பி, டெல்லியையும்  குர்கானையும் இணைக்கும்  கபசேரா பார்டர் என்னுமிடத்தில் இருக்க.. ஒருவழியாய்  இரவில் அவன் வீடு சென்றடைந்து தூங்கிய தூக்கம் முழுவதிலும்  கனவில் ஆட்டோ சத்தம்.

அடுத்த நாள் ஞாயிறு, ஒரு ட்ராவல்ஸ் மூலம் டெல்லியே சுற்றி பார்க்க என் தம்பி ஏற்பாடு செய்திருக்க, அந்த ட்ராவல்ஸ் குரூப்பில் இணைந்து கொள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்தோம்.

இந்தியாவின் மிக வளர்ச்சியடைந்த.. செல்வ செழிப்பான ஊர்களை பட்டியலிட்டால் அதில் குர்கானுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. பார்க்கும் இடமெல்லாம் பிரம்மாண்டமான கட்டிடங்கள்... ஷாப்பிங் மால்கள் என பின்னுகிறது.
குர்கானின் MG ரோடு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் படு காஸ்ட்லியான ஒரு ஹோட்டல் போல காட்சியளிக்க... டிக்கெட் டோக்கன் பெற்று கொண்டு மேல் தளம் வந்தோம் ரயில் ஏற.  அந்த இடத்தின் வசீகரம் கவர.. பரமுவை நிற்க வைத்து மாறி மாறி அவனை புகைப்படம் எடுத்தேன். தீடிரென தோளில் ஒரு கை விழ.. பின்னால் துப்பாக்கி ஏந்திய  ஒரு போலீஸ்காரர், கையில் இருந்த காமிராவை பறித்துக்கொண்டு " COME TO MY ROOM" என்றார்.

                                                                    -தொடரும்  

Comments

 1. காதல் எபிசோடு ஆரம்பிக்கும் என்று எதிர்பார்த்தால், திகிலோடு முடித்து விட்டீர்களே!

  ReplyDelete
 2. \\ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருளில் சென்று கொண்டே இருக்க.. அந்த கொடுமையான இரவை மறக்கவே முடியாது//

  :)

  இரவு நேரத்திற்கு என்று தனி ரேட் ஒன்று உண்டு தில்லியில்.. அதுவா இருக்குமோ..(அரசாங்கமே அப்படி ரெண்டு ரேட் வைத்திருக்கிறது)

  ReplyDelete
 3. ஆமாம், மனோ நீங்க போலீஸ் கிட்ட அடி வாங்கினத சொல்ல போறீங்களா? வேண்டாமே, அது எனக்கு மட்டும் தான் தெரியும்...

  ReplyDelete
 4. நன்றாக செல்லுகிறது தொடர்... எங்க இன்னும் டெல்லி பொண்ணுங்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை???

  புகைப்படங்கள் அதிகமாக்கவும்.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4