புலி - இசை விமர்சனம்


ரஹ்மான் இசையில்  முதல் நேரடி தெலுங்கு படம். ஆல்பம்  ரீலிசாகும் வரை  நகம் கடித்து காத்திருந்த டோலிவூட்  பாடல்களை கேட்டவுடன், சூப்பர் என்றும்  படு மொக்கை என்றும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது. நம்மை பொறுத்தவரை  ஆறில் மூன்று  பாடல்கள் வெகு அமர்க்களம்.   நல்ல இசை கேட்பதற்கு மொழி ஒரே தடையே இல்லை.  தெலுங்கில் எனக்கு நன்கு தெரிந்த ஒரே வார்த்தை ஜருகண்டி.. ஜருகண்டி.. (திருப்பதி புண்ணியத்தில்). இருந்தும் பாடல்களை ரசிக்க முடிவதற்கு  காரணம் ரஹ்மான் என்னும் மந்திரச் சாவி. இந்த ஆல்பம் ஒரு ஸ்லோ பாய்சன் போல.. கொஞ்சம் கொஞ்சமாய் கேட்பவரை தன்வச படுத்தி விடும்.

POWER STAR -  ஹீரோவின் INTRO பாடல் போலிருக்கிறது.  பாட்டின் ஆரம்பத்தில் ஹாரிஸ் ஸ்டைலில் வரிகள் புரியாமல் கயா முயா என்கின்ற பெண்ணின்  குரல் சற்றே வயிற்றை கலக்கினாலும், போக போக கேட்க முடிகிறது. விஜய் பிரகாஷ் கொஞ்சம் ரொமாண்டிக்கான ரகசியம் பேசும் குரலில் பாடியிருப்பதை ரசிக்கலாம். 

AMMA THALE -   நிச்சயம் 'அம்மா தலே' ஆந்திராவையே ஆட வைக்க போகிறது. அட்டகாசமான டியுன். பல்லவி, சரணம் என எந்த கட்டுப்பாடுகளும் இன்றி காட்டாறு போல பாயும் மெட்டுக்குள் நம்மையும் அறியாமல் உள் இழுத்து செல்ல படுகிறோம். நல்ல உற்சாகமான இசை பாடல் முழுதும் வழிந்தோட  ஒரு முறை கேட்டுவிட்டால் "அம்மா தலே " என நீங்கள் பாடாமல் இருக்க  முடியாது. நரேஷ் ஐயரும், ஸ்வேதா மோகனும் போட்டி போட்டுக்கொண்டு பாடியிருக்கிறார்கள்.

MAARALENTE -  இது ஒரு தெலுங்கு வந்தே மாதரம். வேகமாக போகும் தேச பக்தி பாடலான இதை  ரஹ்மானின் குரலுக்காக கேட்கலாம். 

MAHAM MAYE -  ஜாவித் அலி, சுசித்ரா குரலில் இந்தி,தமிழ்,தெலுங்கு என எந்த மொழிக்கும் செல்லுபடியாகும் மெட்டு. வித்தியாசமான ஒலிகள், வித விதமான குரல் நெளிவுகள் என வசீகரமான டூயட். இதுவும் ஹிட்லிஸ்டில்  பட்டையே கிளப்பும். 

DOCHEY -  ஆல்பத்தில் ரஹ்மானின் EXPARIMENTAL SONG. ஸ்ரேயா கோஷலின் கிறங்கடிக்கும் குரல் ஹிப் ஹாப் ஸ்டைலில் ஆரம்பித்து,  கிளாசிக்கல் டச்சில் தவழ்ந்து  வெஸ்டர்ன் ஸ்டைலில் முடிகிறது. சூப்பர்  ஆர்க்கேஸ்ட்ரேஷன். 

NAMAKAME -   சின்ன குயில் சித்ரா மற்றும் மதுஸ்ரீ  குரலில், மெலடியான ஒரு பஜன் பாடல். கொஞ்சம்... கொஞ்சம் அல்ல ரொம்பவே  ஸ்லோவாக போவது பாம்பே பட தீம் இசையே நினைவூட்டுகிறது.


SONGS CAN LISTEN 
AMMA THALE 
MAHAM MAYE
DOCHEY

மொத்தத்தில், ரஹ்மான் கையால் வெரைட்டியான ஆந்திர கம்போ மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி.
 
RATING : 3.3 / 5

Comments

  1. <<<
    ரஹ்மான் என்னும் மந்திரச் சாவி. இந்த ஆல்பம் ஒரு ஸ்லோ பாய்சன் போல.. கொஞ்சம் கொஞ்சமாய் கேட்பவரை தன்வச படுத்தி விடும்.
    >>>
    உண்மைதான்.

    பகிர்ந்ததற்க்கு மிக்க நன்றி. :)

    என்கே டவுன்லோடு செய்யலாம் என்று சொன்னாலும் புண்ணியமா போகும்..

    ReplyDelete
  2. இது வெறும் புலி இல்ல தல
    "கோமரம் புலி"

    தரவிறக்கிதான் கேக்கனும் :) பாத்துடுவோம்

    தமிழல்லாத பிற படங்களில் இதை போல் வரும் நல்ல பாடல்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்

    நன்றி

    ReplyDelete
  3. HELLO MASTAN,

    YOU CAN DOWNLOAD THE SONGS AT
    www.sensongs.com

    ReplyDelete
  4. பாடல்கள் தரவிறக்க

    http://www.sensongs.com/KomaramPuli.html

    ReplyDelete
  5. இந்த படத்தில் வரும் DOCHEY பாடல் மெட்டை ரகுமான் ஏற்கெனவே 'Slumdog millionaire' படத்தில் பயன்படுத்தியிருந்தார்.MAARALENTE & AMMA THALE பாடல்கள் நன்றாக இருந்தன.

    ReplyDelete
  6. //தெலுங்கில் எனக்கு நன்கு தெரிந்த ஒரே வார்த்தை ஜருகண்டி.. ஜருகண்டி.. (திருப்பதி புண்ணியத்தில்). இருந்தும் பாடல்களை ரசிக்க முடிவதற்கு காரணம் ரஹ்மான் என்னும் மந்திரச் சாவி.//

    Very true

    ReplyDelete
  7. ரஹ்மான் இசையில் முதல் நேரடி தெலுங்கு படம்./

    இல்லை. ரஹ்மானின் ஆரம்ப காலத்தில் ராஜசேகரின் படம் ஒன்றுக்கும் (தமிழில் மனிதா மனிதா என டப் செய்யப்பட்டது) வெங்கடேஷ் படம் ஒன்றுக்கும் (தமிழில் சூப்பர் போலீஸ் என டப் செய்யப்பட்டது) இசையமைத்திருக்கிறார்.

    ReplyDelete
  8. HAI GANA PRABHA,

    THANKS FOR YOUR INFORMATION.

    MANO

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....