கனிமொழி - இசை விமர்சனம்


சில ஆல்பங்களுக்காக  காது மேல் காது வைத்து காத்திருப்போம். ஆனால் அது சொதப்பி விடும்.(உதாரணம் : தில்லாலங்கடி)  சில ஆல்பங்களை  எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி போகிற போக்கில்  கேட்போம். அது அப்படியே உயிரை  கரைத்து பெவிகால் போட்டு மனசுக்குள் அமர்ந்து கொள்ளும் (உதாரணம் : மின்னலே). அந்த வரிசையில்  இதோ ஒரு பரவச ஆல்பம் 'கனிமொழி' 

முதலில், இந்த பட பாடல்களை கேட்க எனக்கு எந்த ஒரு தூண்டுதலுமே ஏற்படவில்லை. யதோட்சையாக இதன் இசையமைப்பாளர் "சதீஷ் சக்ரவர்த்தி" என்ற பெயரை பார்த்ததுமே மனதில் ஒரு பொறி. 'லீலை' (படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை) இவருக்கு மிக சிறந்த விசிட்டிங் கார்டு. அதில் வரும் "ஜில்லென்று ஒரு கலவரம்" மற்றும் "பொன் மாலை பொழுது" இரண்டும்  என்னுடைய ஆல் டைம் FAVOURITE SONGS . அதில் பத்து அடி பாய்ந்திருந்தால் இதில் 20  அடி பாய்ந்திருக்கிறார் சதீஷ். 

முதல் பாடல் "பெண்ணே போகதே" இந்த ஆல்பத்துக்கு ஒரு திருஷ்டி போல. அதை விட்டு தள்ளுங்கள். அதற்க்கு பிறகு வரும்  பாடலான "முழு மதி"  விஜய் யேசுதாஸ், பெலே ஷிண்டே குரல்களில் தித்திக்கிற ஸ்வீட் மெலடி. பாடல் முழுதும் அவ்வளவு அற்புதமான ஆர்கஸ்ட்ரேஷன். இதே பாடல் குரல்கள் இல்லாமல் கீ-போர்டு, புல்லாங்குழலில்  இன்னமும் வசீகரிக்கிறது. 

முகேஷ், பெலே ஷிண்டே, "யாரோ இவள் இவள் யாரோ"  பாடலில்  உற்சாக  காதல் திருவிழா நடத்தியிருக்கிறார்கள். எளிமையான வரிகள், தாளம் போட வைக்கும் மெட்டு என பாடல் களை கட்டுகிறது. 

கடைசியாக கிளிண்டன், சதீஷ் சக்ரவர்த்தி குரல்களில்   "தட தட என்று"  பாடல்.  மாலை நேரம், மரங்கள் அடர்ந்த சாலை, அங்கு  மெல்லிசாய்  துளிர்க்கும் மழை, அதில் உங்கள் விருப்பமானவரின் விரல் கோர்த்து நடக்கும் போது ஒரு சந்தோஷத்தை  உணர்வீர்களே, அதே போல உணர்வு இந்த பாடலை கேட்கும் போதும் ஏற்படுகிறது.    இந்த பாடல் பற்றி என்ன சொல்ல.. சதீஷ் எதோ ஒரு மேஜிக் செய்திருக்கிறார். ஆல்பத்தில்  எனக்கு மிகவும் பிடித்த பாடல். 

நான்கு பாடல்களில் மூன்று கேட்டதும் இனிக்கிறது. இந்த படமாவது சீக்கிரம் வெளி வந்து சதிஷ்க்கு, கோலிவுட் சிவப்பு கம்பளம் விரிக்கட்டும். 

SONGS CAN LISTEN

தட தட என்று - கிளிண்டன், சதீஷ் சக்ரவர்த்தி
யாரோ இவள் இவள் யாரோ - முகேஷ், பெலே ஷிண்டே
 முழு மதி - விஜய் யேசுதாஸ், பெலே ஷிண்டே

VERDICT : 3.0 / 5.0 

Comments

 1. //முதல் பாடல் "பெண்ணே போகதே" இந்த ஆல்பத்துக்கு ஒரு திருஷ்டி போல. அதை விட்டு தள்ளுங்கள் //

  இந்த பாடலை தான் முதலில் தரவிறக்கினேன்

  கேட்டுவிட்டு அவ்வளவு தான் மற்ற பாடல்களை தரவிறக்கி வேஸ்ட் என்று விட்டு விட்டேன்

  நீங்க சொல்றிங்க இனிதான் மற்றவை கேட்டு பார்கனும்

  ReplyDelete
 2. எனக்கும் லீலையில் சுரேஷ் சக்ரவர்த்தியின் இசை மிகவும் பிடித்திருந்தது. இனிமேல்தான் கனிமொழி பாடல்களைத் தரவிறக்கம் பண்ணி கேட்க வேண்டும்.

  ReplyDelete
 3. பாடல்கள் நல்லாயிருக்கு Mano. முழுமதி அருமை

  ReplyDelete
 4. லீலை-ஜில்லென்று ஒரு கலவரம் பிடித்திருந்தது,இனிமேதான் கனிமொழி பாடல்கள் கேட்கணும்.

  ReplyDelete
 5. @ YOGESH,
  @ MOHAN
  @ KOZHI PAYAN
  @ VINO
  @ ARUN PRASATH

  THANKS FOR YOUR SWEET COMMENTS

  ReplyDelete
 6. Nice Songs !
  @@@@Happy friendship day Maappu@@@@

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4