தில்லாலங்கடி - இசை விமர்சனம்

 
தெலுங்கில் காட்டுதனமாய் ஓடிய "கிக் " தமிழில் தில்லாலங்கடியாக மாறியுள்ளது. தெலுங்கு பட வெற்றிக்கு அதன் இசையமைப்பாளர் தமனும் ஒரு காரணம். 

தமிழில்  யுவன் ஷங்கர் ராஜா. பாடல்கள் சற்றே சுமார் ரகம்தான்.என்ன ஆச்சு யுவன்?

சித்ரா தன் மயக்கும் குரலில் பாடியிருக்கும் "சொல் பேச்சு கேட்காத " பாடல் கேட்கும் ரகம். பாடல் முழுக்க நல்ல ஆர்க்கஸ்ட்ரேஷேன். ஆனால் இந்த ட்யுன் ஏற்கனவே கள்வனின் காதலியில் கேட்ட ஒன்று. 

விஜய பிரகாஷ், நவீன் பாடிய 'டிங் டிங்" பாடலும், சிம்பு, மன்சி ஸ்கூட் பாடியிருக்கும் "பாட்டு பாட்டும்"  கேட்க கேட்க பிடித்து போகலாம். அந்த இடைவிடாத முயற்சியே சன் பிச்சர்ஸ் பார்த்துக்கொள்ளும்.  

 "இதயம் கரைகிறதே"  ஸ்ரீ வர்தினியின் குரலில் நிஜமாகவே இதயம் கரைகிறது.   .ஆனால் இந்த மெட்டையும்   வேறு எந்த படத்திலோ கேட்ட ஞாபகம்.

மொத்தத்தில் ஏழு பாடல்கள் இருந்தும் சூப்பர், தூள் என சொல்லகூடிய அளவுக்கு எந்த பாடலும் இல்லை என்பது வருத்தமே. யுவன் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதால் பாடல்களை எப்படியும் நம் மண்டைக்குள் புகுத்தி விடுவார்கள்.

VERDICT : AVERAGE 
RATING : 2.2 / 5.0

Comments

 1. சிம்பு மற்றும் மும்பை பொன்னு மானசி ஸ்காட் பாடிய பட்டு பட்டு பட்டாம்பூச்சி நல்லாயிருக்கு:)

  ஷங்கர் மகாதேவன் ஒரு குத்து பாட்டு பாடியிருக்கிறார்,அது அந்தளவுக்கு இல்ல

  விமர்சனத்திற்கு நன்றி

  ReplyDelete
 2. யுவன் சமீபத்தில் இசையமைத்ததிலேயே ரொம்ப மோசமான பாடல்கள் அமைந்த‌து இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. பாடல்கள் சுமார் தான்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4