ஞாபகங்கள்..
கவிதை
எழுத
யோசிக்கும்
கால நேரங்களில்...
ட்ராபிக்கில்
சிக்னலுக்காய்
காத்திருக்கும்
சில்லறை நிமிடங்களில்..
கிட்டாரின்
நரம்புகளை
விரல்கள்
தீண்டிடும்
சிறு தருணங்களில்..
பரபரப்பான
கிரிக்கெட்டின்
விளம்பர
இடைவேளைகளில்...
நடைபாதைக்கடை
இட்லியே
ருசிக்கும் பொழுது
விக்கல்
ஏற்படும்
வினாடிகளில்..
உடலின்
ஓவ்வொரு
மில்லி மீட்டரையும்
மழை
ஆக்ரமிக்கும்
பொழுதுகளில் ...
உன்
புன்னகை
முகம்
புயலாய் - எனை
தாக்கும்
போதெல்லாம்...
மௌனமாய்
சிரித்துக்
கொள்கிறேன்..
//இட்லியே
ReplyDeleteருசிக்கும் பொழுது
விக்கல்
ஏற்படும்
வினாடிகளில்..//
ம்ம்ம் இட்லி கடை-விக்கல்-ஞாபகங்கள்
தேக்கி வைத்த அன்பு ஞாபகங்களின் வெளிப்பாடாய் தெரிகிறது
பக்கா பக்கா.....
நல்லாயிருக்கு மனோ!
ReplyDeleteஅருமை அனைத்து ஞாபகங்களும் கவிதையாக பிறக்கிறது
ReplyDelete:-)
ReplyDelete