Saturday, July 24, 2010

கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்


கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம் -  ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
(THE WAY THE COOKIE CRUMBLES)

உங்களுக்கு BANK ROBBERY கதைகள் மிகவும் பிடிக்குமா?  அப்படியானால் இந்த  நாவல் உங்களுக்கு செம தீனி. எதிர்பார்க்கவே முடியாத அட்டகாசமான  திட்டத்தோடு  ஒரு  பலம் வாய்ந்த பாதுகாப்பினை கொண்ட  வங்கியினை ஒரு மூவர் குழு ஆட்டையே போடும் விதம்தான் இந்த நாவலின் கரு. 

எட்ரிஸ் ஒரு குள்ளன். அவன் வேலை செய்யும் ஹோட்டலில் முரியல் என்கின்ற  பெண் தற்கொலை செய்து கொள்ள, அதை பற்றிய விசாரணையில் இருந்து கதை தொடங்குகிறது. தற்கொலைக்கு முன் அந்த பெண் தன் காதலனை தீர்த்து கட்டி விட்டு இந்த ஹோட்டலுக்கு வருவதாக காட்சிகள் விரிகின்றன. இடையே அல்கிர் என்னும் ஆறடி உயர மனிதன், முரியலின் பெண் நொரீனா படிக்கும் பள்ளிக்கு சென்று அவளை தந்திரமாக வெளிய அழைத்து வந்து  கொலை செய்கிறான்.  இப்படி இழவு மேல் இழவு விழுகின்ற நேரத்தில் ஐரா என்கின்ற படு அழகான பெண் சீனில் நுழைய, கதை வேகம் பிடிக்கிறது. அந்த கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது  எட்ரிஸ், அல்கிர், ஐரா ஆகிய மூவரும். காரணம்.. நம்பவே முடியாத ஆனால் நம்ப வைக்கும் அந்த அசத்தலான வங்கி கொள்ளை திட்டம். அது வெற்றிகரமாக நடந்ததா..இல்லையா என்பதை தீ பிடிக்கும் வேகத்தில் பறக்கும் நாவலின் பக்கங்களில் தெரிந்து கொள்ளுங்கள்.
படு பயங்கரமான ஆச்சர்யம், இந்த நாவல் எழுதப்பட்டது  1954ல். எந்த வித டெக்னாலஜியும் இல்லாத அந்த கால கட்டத்தில் இப்படியெல்லாம் திட்டம் போட முடியுமா என நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது சேஸின் எழுத்துக்கள்.
சேஸ் கதைகளை பொறுத்தவரை, வில்லன்கள் தான் இவரின் முக்கிய கதாபாத்திரங்கள். கேங் ஸ்டார் கதைகள், குழுவாக கொலை மற்றும் கொள்ளை அடிப்பதுதான் இவரின் கதைகளில் மெய்ன் தீமாக இருக்கும்.  வில்லன் யார் என்பதை கடைசி அத்தியாயங்களில் சொல்லும் முறை எல்லாம்  இவரிடம் செல்லாது. ஆரம்பமே  வில்லன்களை   அறிமுகம் செய்து விட்டு, அவர்களின்  திட்டங்களை ஒவ்வொன்றாக தெளிவாக கூறி, அதற்க்கான நடவடிக்கைகளை பரபரப்பாக கொண்டுசெல்வதுதான் இவரின் பாணி.  ஆனாலும் எப்போதுமே இவர் வில்லன்களை ஜெய்க்க  விட்டதில்லை. எவ்வளவு பெரிய அற்புதமான திட்டமானாலும், ஒரு சிறு தவறில் அவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.

இந்த கதையும் அதில் விதி விலக்கல்ல. 98 % வெற்றிகரமாக கடந்து ஒரு சிறிய தவறில் மாட்டிக்கொள்ளும் அவர்களுக்காக நாம் பரிதாபப்படாமல் இருக்க முடியாது. 


வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் 
விலை       : RS .120/-

2 comments:

  1. //ஆனாலும் எப்போதுமே இவர் வில்லன்களை ஜெய்க்க விட்டதில்லை. எவ்வளவு பெரிய அற்புதமான திட்டமானாலும், ஒரு சிறு தவறில் அவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.//
    Athuthaan Literature grammero ?

    ReplyDelete
  2. for more books of james hadley chase: http://novelsplanet.blogspot.com/search/label/James%20Hadley%20Chase

    ReplyDelete

you might like this also...

Related Posts with Thumbnails