TOUR SPOT - கோவளம் (இது ஒரு குட்டி கோவா)

 TOUR SPOT - கோவளம் (இது ஒரு குட்டி கோவா)















கடல் என்றுமே ஆச்சரியமான விஷயம். ஒரு அழகான பெண் போல... பார்க்க பார்க்க சலிக்கவே சலிக்காத ஒன்று... நண்பர்களுடன் குதித்து கும்மாளமிடவும், காதலியுடன் கை கோர்த்து நடக்கவும், தனிமையில் இனிமை காணவும் எல்லோருடைய ALL TIME FAVOURITE கடற்கரை மட்டுமே...


திருவனந்தபுரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோவளம். கடற்கரை சுற்றிலும் நிறைய தென்னை மரங்கள்... மிதமான  வெயில், பச்சை பசேல் புல் வெளிகள் என இது ஒரு குட்டி கோவா. ஒரே இடத்தில் 3 வகையான கடற்கரைகளை கொண்டிருக்கிறது.

1.லைட் ஹவுஸ் பீச்
2.ஹவா பீச்
3.சமுத்ரா பீச்

லைட் ஹவுஸ் பீச் 












முழுவதும் வெளிநாட்டவர்கள் நிரம்பி வழிகிறார்கள். இதன் சிறப்பம்சம் இங்கு ஆழம் மிக குறைவு.. ஆனால் அலைகளோ.. இரு ஆள் உயரத்திற்கு எழும்பும். அலை  விளையாட்டுக்கள் விளையாட ஏற்ற இடம். இங்குள்ள லைட் ஹவுஸ் வழியாக கண்ணுக்கெட்டும் தூரம் வரை விரிந்திருக்கும் கடல் ரசிப்பது தனி அனுபவம். கடற்கரையில் பாதுகாவலர்கள் இருப்பதால் தைரியமாய் இங்கு அலையில் விளையாடலாம்.

ஹவா பீச் 















தென்னை மரங்கள் சூழ்ந்த,  சற்று அலைகள் குறைவான ஆனால் நீளமான கடற்கரை. பெண்கள், குழந்தைகள், விளையாட ஏற்ற இடம்.



சமுத்ரா பீச். 














தனிமை விரும்பிகளுக்கு பிடித்த இடம். மிக ஆழமான மீன் பிடி பகுதியாதலால் கடலில் இறங்கி விளையாட முடியாது. ஆனால் இங்கு ஒரு சாகச பயணம் மேற்கொள்ளலாம்.. தலைக்கு 50 ரூபாய் கொடுத்தால் அங்குள்ள மீனவர்கள் தங்கள் கட்டு மரங்களில் கடலுக்குள் 2-3 கிலோ மீட்டர்கள் உங்களை அழைத்து செல்வர்கள்... நீங்கள் படகிலோ, கப்பலிலோ செல்லும்  போது உணர முடியாத கடலின் ஆழத்தை கட்டுமரத்தில் உணரலாம். முதுகு தண்டை சில்லிட வைக்கும் ஒரு த்ரில் அனுபவம் அது.. சிறிது தொலைவு சென்றதும்.. உங்களுக்கு விருப்பமிருந்தால்  LIFE-JACKET கொடுத்து கடலினுள் இறக்கி விடுவார்கள்... அதை எழுத்தில் விவரிக்க முடியாது சார்... அனுபவித்து பாருங்கள்..

  • கேரளா வகை உணவுகள் மட்டுமே அதிக அளவில் கிடைக்கும்..
  • தங்குவதற்கு 300 முதல் 3000 வரை வசதியான அறைகள் உண்டு. 
  • கடல் சார்ந்த கலை பொருட்களை பிரம்மாண்டமான விலைக்கு விற்கிறார்கள்... நமக்கு கட்டுபடி ஆகாது.. 

  • மசாஜ் சென்டர்கள் உண்டு.. நன்கு விசாரித்து செல்லவும்... இல்லையேல் பர்ஸ் காலி. 

  • சரக்கு வஞ்சகமில்லாமல் கிடைக்கிறது... 

வழிகாட்டி...

திருவனந்தபுரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர்
 ஆட்டோ ,பஸ் ,ஜீப் வசதி உண்டு..

Comments

  1. திருவனந்தபுரம் செல்லும் ஆசையைத் தூண்டி விடுகிறது உங்களின் இந்தப் பதிவு.

    ReplyDelete
  2. என்னுடைய பதிவிற்கு நீங்கள் வந்ததற்கும்,கருத்துரைத்ததற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. எனக்கும் ஆசையாக உள்ளது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....