காதல் எனப்படுவது யாதெனில்..

பாதியாய் பகிர்ந்து
பருகும்
காப்பிக் கோப்பையில்


அபரிமிதமாய்
வழிந்தோடுகிறது
அன்பு.


பேசிய
வார்த்தைகளில்
வெளிப்பட்டதை விட....


பேசாத மௌனங்களில்
புலப்பட்டது 
அதிகம்...
நேசத்திற்கான 
அர்த்தம். 

சிறு தலை கோதல்களிலும்
கன்னக் கிள்ளல்களிலுமே 
வயிறு நிரம்பி விடுகிறது 
எனக்கு.


ஒவ்வொரு விடியலிலும் 
உன்னால் தட்டிஎழுப்பப்படுகிறது 
அந்நாளுக்குரிய  சந்தோஷங்கள்....

சாலை கடக்கையில் 
இயல்பாய் கோர்க்கும் 
விரல்களை போல....


அழகாய் சேர்ந்திருக்கிறது 
நம் மனசின் 
குழந்தைகள்.. 


மழை போன்று 
எல்லையற்று பொழியும் 
உன் அன்பிற்குள்....


நனைந்து கொண்டே 
இருப்பதை தவிர 
வேறெதுவும் 
செய்வதிற்கில்லை 
என்னால்........Comments

 1. அழகு! அருமை!

  ReplyDelete
 2. "ஒவ்வொரு விடியலிலும்
  உன்னால் தட்டிஎழுப்பப்படுகிறது
  அந்நாளுக்குரிய சந்தோஷங்கள்...."

  ரசனையோடு காதலை சொல்லியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 3. Nice kavithai..... I love it lot.......

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4