விண்ணை தாண்டி வருவாயா... - விமர்சனம்

ரொம்பவும் யதார்த்தமான சினிமா எடுக்கனுமா ? வண்டிய மதுரைக்கு விடு... காதல், பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் என நாம் பார்த்த யதார்த்த சினிமாக்கள் கிராமத்து பின்னணியில் உருவானவை.... ஆனால் இம்முறை சென்னை நகர பின்னணியில் ஒரு யதார்த்த சினிமா தர முயன்றிருக்கிறார் கெளதம்.. படத்தில் ஹீரோ, ஹீரோயின், ஹீரோயிசம் என குறிப்பிட்டு எதுவும் கிடையாது.. நம் தினசரி வாழ்வில் பார்க்கும் சராசரி மனிதர்கள் அவர்களுக்குள் ஏற்படும் இயல்பான காதல், ஊடல், பிரிவு, கோபம், மகிழ்ச்சி, ஸ்பரிசம், போன்றவற்றை சினிமாத்தனம் இன்றி தந்திருப்பதர்க்காகவே பாராட்டலாம்...இம்மாதிரி படங்களில் திடுக்கிடும் திருப்பங்களோ, சீட் நுனியில் அமரவைக்கும் சுவாரசியமான நிகழ்வுகளோ ஏதுமின்றி வெறும் வசனங்கள், சின்ன சின்ன சம்பவங்கள் மூலமாகவே கதையை நகர்த்தி செல்ல ஒரு தனி திறமை வேண்டும்... முதற் பாதியில் எளிதாக சிக்ஸர் அடித்த கெளதம் இரண்டாம் பாதியில் சற்றே திணறியிருக்கிறார்... கார்த்திக், ஜெஸ்ஸி - இருவருக்குமுண்டன காதல்.. என இந்த இரு கதாபத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு படம் நகர்கிறது.. கிட்டத்தட்ட எல்லா சீன்களிலும் கார்த்தி...