எந்திரன் - இசை விமர்சனம்


 1995 ம் வருடம்.  என்னுடைய விடலை பருவம்.  ரஜினி என்றால் ஏதோ சொல்ல தெரியாத ஈர்ப்பு. ஒரு பரவசம். அவரை போலவே, தலை கோதி, நடை பழகி, அவரின் பாடல்களை மனப்பாடம் செய்த  தினங்கள். அதே கால கட்டத்தில் ரஹ்மான் என்னும் புயல் புது புது மெட்டுக்கள், இதற்க்கு முன் கேட்டறியாத இசை கருவிகளின்  வினோத  ஒலிகள், என தனக்கென ஒரு இசை சாம்ராஜியத்தை நிறுவிய நேரம். இந்த இரண்டு தலைகளும் ஒன்று சேர்கிறார்கள் "முத்து" படத்திற்காக. மொத்த தமிழ் நாடும் அந்த பட பாடல்களை கேட்க மிக ஆவலாக இருந்தது. ஏனெனனில்  வழக்கமான ரஜினி பட பாடல்கள் ஒரே மாதிரி TEMPLATE  ஆக இருக்கும். ஆனால் ரஹ்மானின் இசை வேறு வகை. இவர்கள் இருவரும் சேரும் போது அதில் யாருடைய ஆதிக்கம் இருக்கும் என்பது எல்லோருக்குமான சந்தேகம். 

ஆனால், அப்போதைய ரஹ்மான் புத்திசாலித்தனமாக, தனது தனித்தன்மையையும் விட்டு கொடுக்காமல், ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும் போட்ட மெட்டுக்கள்  பட்டி தொட்டி எங்கும் தில்லானா  தில்லானா என பட்டையே கிளப்பியது. "குலுவாலிலே" அக்மார்க் ரஹ்மான் ஸ்டைல் ரஜினி பாடல்.  ஆனால் நாளாக நாளாக ரஜினி என்னும் ஒரு மிக பெரிய இமேஜ் வட்டத்திற்குள்  ரஹ்மானின் தனி தன்மை குறைந்து போனதை மறுக்க முடியாது. ரஜினி சார் படத்திற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டியதுள்ளது என்று  அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதனாலோ என்னவோ ரஜினி படங்களில் பாடல்கள் கேட்கும்படி நன்றாகவே இருந்தாலும் ரஹ்மானின் தனித்துவத்தை, ஒரு மேஜிக்கை   நாம் இழப்பது  வாடிக்கையாகி விட்டது.

ஆனால், எந்திரனில் ரஹ்மானின் பங்களிப்பு எப்படி..?  இதற்க்கான விடைதான் கொஞ்சம் சுவாரசியம்.

 "புதிய மனிதா பூமிக்கு வா"  - SPB யின் குரல் அவ்வப்போது சிலிர்ப்பூட்டினாலும் கொஞ்சம் வேகம் குறைவான மெட்டு இதை ரஜினியின் INTRO பாடலாக இருக்காது என்றே எண்ண வைக்கிறது.

விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் "காதல் அணுக்கள்" - ஆல்பத்தில் ரொம்பவுமே பிரெஷ்ஷான  பாடல். மெட்டும் சரி, வரிகளும் சரி கேட்டதும் பிடித்து போகும் ரகம். வைரமுத்து விஞ்ஞானத்தையும், காதலையும் மையில் கலக்கியடித்து கவிதை வடித்திருக்கிறார். என்னுடைய முதல் ஓட்டு இந்த பாடலுக்கே. ரஹ்மானின் ஸ்டைல் பாடலில் தெரிகிறது. 

ரஹ்மானின் குரல் ஒரு காந்தம் போல.. எளிதில் கவர்ந்து  பாடலோடு நம்மை பிணைத்து விடும். ஆனால், 'இரும்பிலே ஒரு இதயம்'  பாடல் எனக்கு சரி ஏமாற்றம்.  வீரியமற்ற மெட்டு கவனத்தை கலைத்தாலும் ரஹ்மானின் குரலால் தப்பிக்கிறது.

"கிளி மஞ்சரோ"  ஜாவித் அலி, சின்மயி குரல்களில் உற்சாகமான இசை சவாரி. பாடல் முழுக்க வித்தியாசமான இசை கோர்வைகள், சரணத்தில் சின்ன சின்ன தித்திப்புகள் என ரஜினி ரசிகர்களின் பிடித்தமான பாடலாக மாறும் தகுதி இதற்குண்டு. என்னுடைய இரண்டாவது ஓட்டு இந்த பாடலுக்கு. இனி இதை அடிக்கடி சூரியன் F .M இல் கேட்கலாம்.நிச்சயம்  இந்த பாட்டு எல்லோரையும் கவர்ந்து விடும்.

"அரிமா அரிமா" பாடலின் தொடக்கம் மிரட்டுகிறது. கம்பீரமான ஆர்கேஸ்ட்ரேஷன் பாடல் மீதான எதிர்பார்ப்பை  தூண்டி உள்ளே இழுக்க,  வைரமுத்து வரிகளுக்கு தகுந்த படி  ஹரிஹரன், சாதனா சர்க்கம்  ஸ்ருதியே ஏற்றி இறக்கி பாடியிருக்கிறார்கள். ஷங்கர் படம் என்பதால் பாடலுக்கு தகுந்த பிரம்மாண்டமான விஷுவலை பார்க்க இப்போதே ஆர்வமாக இருக்கிறது.


"பூம் பூம் ரோபோ டா"   ரஹ்மானின் தரத்திற்கு ரொம்பவுமே சுமாரான பாடல்.  எனக்கு பிடிக்கவில்லை.

"CHITTI DANCE SHOW CASE" - படத்தின் தீம் மியூசிக் போல இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் ஸ்லம் டாக் மில்லியனர்  சாயல் வந்தாலும் ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில், இந்த ஆல்பத்தை பற்றி என்ன சொல்வது.,மூன்று பாடல்களில் வெளுத்து வாங்கியிருக்கும் ரஹ்மான் மிச்ச பாடல்களில் இன்னமும்  கொஞ்சம் கவனம் செலுத்தி செதுக்கியிருக்கலாம்.  ஆனாலும் ரஹ்மான் ஸ்டைல் மியூசிக் இந்த ஆல்பத்தில் நிறையவே இருக்கிறது. நிறைய இடங்களில்  அதை ரசிக்க முடிகிறது.

SONGS CAN LISTEN

காதல் அணுக்கள் - விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்
கிளி மஞ்சரோ - ஜாவித் அலி, சின்மயி 
அரிமா அரிமா - ஹரி ஹரன், சாதனா சர்க்கம்.

VERDICT : 3.1 / 5.0

Comments

 1. மனோ நேற்றே பாடல்களை கேட்டுவிட்டேன்,விமர்சனத்தையும் நேற்றே எதிர்பார்த்தேன்.விஷுவலுடன் பார்க்கும் போது இன்னும் நல்லாயிருக்குமோ என்னவோ.

  ReplyDelete
 2. எதார்த்தமான விமர்சனம்

  ///கொஞ்சம் வேகம் குறைவான மெட்டு ///

  பாலு சாரின் ஏற்ற இறக்கத்தில் இந்த ஸ்லோ பீட்டெல்லாம் மறந்து போகும் என்று நினைக்கறேன்

  எனக்கு மிகவும் பிடித்தது பூம் பூம் ரோபோ டா தான்,யோகி பி ராப் செம செம அதான்

  இரும்பிலே ஒரு இருதையம்- kash'n'krissy யை தமிழில் சில வார்ததைகள் பாட வைத்தது வித்யாசமாகத்தான் இருந்து,ரஹ்மான் சான்சே இல்ல

  எல்லாப் பாடலும் எனக்கு பிடித்துவிட்டது

  ReplyDelete
 3. காலைச் சுற்றும் பாம்போ - நீ
  காதல் செய்யும் ரோபோ
  போ போ....

  பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
  கால்கள் கொண்டுதான் ருசியரியும்
  காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
  கண்கள் கொண்டே ருசியரியும்.

  எனக்கு எல்லாமே பிடித்திருக்கிறது.

  ReplyDelete
 4. என் ஓட்டு ‘கிளிமஞ்சாரோ’க்கு தான்.கலக்கபோவது உறுதி.

  ReplyDelete
 5. 1 GB RAM robot. It is going to be a comedy piece.

  ReplyDelete
 6. Hi Mano,

  Ranam Sugam pop song album ketu parunga

  nalla iruku

  -Mohan (Maduraimohan)

  jilluku enna pathi theriyum

  ReplyDelete
 7. @ arun prasth,

  ஷங்கர் படம் என்பதால் நிச்சயம் பிரம்மாண்டமான விஷுவலை பர்க்கலாம்.

  மனோ

  ReplyDelete
 8. @ YOGEH,
  @ KALA NESAN,
  @ MAYIL RAVANAN
  @ MYTHEES

  THANKS FOR YOUR SWEET COMMENTS

  ReplyDelete
 9. HAI MADURAI MOHAN,

  நிச்சயம் நீங்கள் சொன்ன ஆல்பத்தை கேட்டு விட்டு சொல்கிறேன்.

  மனோ

  ReplyDelete
 10. கிளிமஞ்சாரோ’நான் பல முறை ரசித்து கேட்க்க வாய்த்த பாடல் . விமர்சனம் அருமை . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 11. மன்னிக்கவும் மனோ
  இப்பொழுதுதான் பார்த்தேன்....

  ReplyDelete
 12. மிகவும் அவசரத்தில் எழுதப்பட்ட விமர்சனம்..!

  ReplyDelete
 13. Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

  by
  TS  டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4