கனிமொழி - இசை விமர்சனம்
சில ஆல்பங்களுக்காக காது மேல் காது வைத்து காத்திருப்போம். ஆனால் அது சொதப்பி விடும்.(உதாரணம் : தில்லாலங்கடி) சில ஆல்பங்களை எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி போகிற போக்கில் கேட்போம். அது அப்படியே உயிரை கரைத்து பெவிகால் போட்டு மனசுக்குள் அமர்ந்து கொள்ளும் (உதாரணம் : மின்னலே). அந்த வரிசையில் இதோ ஒரு பரவச ஆல்பம் ' கனிமொழி' முதலில், இந்த பட பாடல்களை கேட்க எனக்கு எந்த ஒரு தூண்டுதலுமே ஏற்படவில்லை. யதோட்சையாக இதன் இசையமைப்பாளர் "சதீஷ் சக்ரவர்த்தி" என்ற பெயரை பார்த்ததுமே மனதில் ஒரு பொறி. 'லீலை' (படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை) இவருக்கு மிக சிறந்த விசிட்டிங் கார்டு. அதில் வரும் "ஜில்லென்று ஒரு கலவரம்" மற்றும் "பொன் மாலை பொழுது" இரண்டும் என்னுடைய ஆல் டைம் FAVOURITE SONGS . அதில் பத்து அடி பாய்ந்திருந்தால் இதில் 20 அடி பாய்ந்திருக்கிறார் சதீஷ். முதல் பாடல் "பெண்ணே போகதே" இந்த ஆல்பத்துக்கு ஒரு திருஷ்டி போல. அதை விட்டு தள்ளுங்கள். அதற்க்கு பிறகு வரும் பாடலான "முழு மதி" விஜய் யேசுதாஸ், பெலே ஷிண்டே குரல்களில் தித்திக்கிற ஸ்...