ராவணன் - விமர்சனம்

 மணி சாரின் படங்கள் எப்போதுமே ரசனையாகவும் ரகளையாகவும் இருக்கும். சொல்ல வந்த விஷயத்தை வசனங்களின் உதவி இன்றி காட்சிகளின் தாக்கத்திலேயே உணர்த்தி விடும் திறமைசாலி. இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். கூழாங்கற்களை கூட வைரமாக மாற்றிக்காட்டும் கலைஞர்.   இவரின் புதிய படைப்பான ராவணன் பார்வையாளனுக்கு எத்தகைய அனுபவத்தை  தருகிறது என்பதை பார்ப்போம். 

"கதைக்காக நாம் வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை. ராமாயணம், மகாபாரதத்தில், இன்னமும் சொல்ல படாத கதைகள் ஆயிரம் உள்ளன.. அவற்றை சொன்னாலே போதும்" என்று கமல் தனது பேட்டியில் ஒரு முறை சொல்லியிருக்கிறார். புராண இதிகாசங்கள், நிகழ்கால சம்பவங்கள் இரண்டையும் இணைத்து கதை செய்வதில் மணிரத்னம் அவர்களின் கெட்டிக்காரத்தனம் வேறு யாருக்கும் வாய்க்காது. ராமாயணத்தின் அப்பட்டமான தழுவல் என்றாலும் காட்சிபடுத்துதல்களில் இருக்கும் வித்தியாசம் ரசிகனை படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறது. 

மேக்கிங்கை பொறுத்த வரை,  தான் ஒரு கிங் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நீருபித்திருக்கிறார் மனிதர். ஆங்கில படங்களை மிஞ்சும் காட்சியமைப்புகள் கண்களை இமைக்க மறந்து பார்க்க வைக்கின்றன. இதற்க்கு பக்கா பலமாய் இருப்பது சந்தோஷ் சிவன், மணிகண்டனின் ஒளிப்பதிவு. பச்சை பசேல் மலைகள்,  ஆரவாரம் செய்யும் அருவிகள், பல நூறு ரகசியங்களை கொண்ட அடர்ந்த காடுகள்,  சலசலக்கும் ஆறுகள்  என  கேமரா எல்லாவற்றிலும் ஊருடுவி பயணம் செய்ய,  பார்க்கும் நமக்கு குளிர் எடுக்கிறது.   ஒளிப்பதிவை பொறுத்தவரை இந்த படம்  அட்டகாசமான ஒரு விஷுவல் ட்ரீட்.
 
 முழுக்க முழுக்க வெளிநாடுகளில்  படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில்  இந்தியாவிலேயே இவ்வளவு அற்புதமான  இடங்கள்  இருக்கின்றன  என  படத்துக்கு படம் வெளிச்சமிட்டு காட்டுவதற்காக மணி சாருக்கு  ஒரு பெரிய சபாஷ்.  எப்படித்தான் இப்படிப்பட்ட லொக்கேஷன்களை பிடிக்கிறாரோ.. ஆச்சர்யம்.  

அதே போல படத்தோடு பயணம் செய்யும் A .R  ரஹ்மானின் இசை இன்னொரு பலம்.  தேவைப்பட்ட இடங்களில் அடக்கி வாசித்தும், தேவையான சமயங்களில் விஸ்வ ரூபம் எடுத்தும் இருக்கிறது.

விக்ரம் என்னும் மஹா கலைஞனுக்கு செம தீனி. தமிழில் ராவணனாகவும், இந்தியில் ராமனாகவும் அடுத்தடுத்து நடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரு வேறு வேடங்களை உள்வாங்கி நடிப்பது எவ்வளவு பெரிய சவால். அலட்சியமாக ஜெய்க்கிறார். 

உலக அழகி என்ற பந்தா இல்லாமல் தனது முதல் படம் போல மழையிலும், காட்டிலும் கஷ்டப்பட்டிருக்கிறார்  ஐஸ்வர்யா ராய். படத்தில் இவரின் அர்ப்பணிப்பு  பாராட்டுக்குரியது.  இவரது விழிகளே முக்கால் வீச்சம் நடித்து விடுவதால் உடல் மொழியில் பெரிதாய் வேலை இல்லை. 

கார்த்திக், பிரபு எல்லோருமே கொடுத்த கதா பாத்திரத்துக்கு தகுந்த உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். சில பிரேம்களில் பிரபுவின் உடல் உருவம் மிகுந்த அச்சமூட்டுவதாக இருக்கிறது.

எப்போதுமே சிக்கலான, சர்ச்சைக்குரிய கதை களனை தேர்ந்தெடுத்து அதில் சவாரி செய்வது மணி சாருக்கு மிக பிடித்தமான விஷயம் போல..  காட்சிகளில்  கொஞ்சம் பிசகினாலும் வேல் கம்புகள் வீடு தேடி வரும் என்பதை உணர்ந்து மிக எச்சரிக்கையாக செயல் பட்டிருக்கிறார். அதுவே படத்திற்கு ஒரு LET-DOWN ஆக  மாறியிருக்கிறது. சீதையே கவர்ந்து வந்த பின் ராவணனுக்கு அவள் பால் ஏற்படும் காதலில் எந்த வித அழுத்தமும் இல்லை அல்லது அதை காட்சி படுத்தவில்லை. சீதைக்கு ராவணன் மீது   கிளைமாக்சில் மெல்லிசாய் ஒரு ஈர்ப்பு இருப்பது  போல கோடிட்டு காட்டுவது  ஒரு நெருடல்.    நிறைய காட்சிகளில் ரசிகனே யூகித்து கொள்ளட்டும் என முடிவை நம் கையில் கொடுத்துவிட்டு தப்பித்து கொள்கிறார் இயக்குனர். கொஞ்சம் CONTRAVERSY யான கதை என்பதால்  கதை மீது படம்  பட்டும் படாமல் நகர்கிறது.

ராமன் சீதாவை சந்தேகப்படவில்லை. ராவணனை பிடித்து கொல்வதர்க்காகவே  அவ்வாறு கூறுகிறான் என்பது விக்ரமின் ஒரு சிறிய வசன உச்சரிப்பில் கடந்து செல்கிறது. இது  தியேட்டரில் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்பது ரொம்ப சந்தேகமே. 

அப்புறம் வசனங்கள், சுஹாசினி அவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் அல்லது வசனங்களை எளிமையாக்கியிருக்கலாம். சுஜாதா அவர்களின் இழப்பு இத்தருணங்களில் நன்றாக புலப்படுகிறது.

டெக்னிகல் விஷயங்களை பொறுத்தவரை  ராவணன் பத்து தலை அல்ல நூறு தலை பலசாலி. திரைகதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் படம்  இன்னமும்  பட்டாசு கிளப்பியிருக்கும். இரண்டாவது, படம் நன்றாகவே இருந்தாலும், இப்படத்திற்கு இருந்த மிதமிஞ்சிய எதிர்பார்ப்பு, ரசிகனை படத்தில் இன்னும் நிறைய வேண்டும் என கேட்க வைத்து விட்டது. மூன்றாவது, இரண்டு மொழிகளில் தயாரானதால் ஒரு நேரடி தமிழ் படத்துக்குரிய தகுதிகள் கொஞ்சம் குறைச்சல்.

(+) பிளஸ் 
ஒளிப்பதிவு
இசை
அணைத்து டெக்னிகல் விஷயங்கள்
லொக்கேஷன்கள்
மணிரத்தினம் சார் ,விக்ரம், ஐஸ்.

(-) மைனஸ் 
அழுத்தம் அற்ற சில காட்சிகள்
 மற்ற மணி சார் பட வசனங்களில் இருக்கும் ஒரு மேஜிக்  இல்லாதது. 
 

VERDICT  : இது மணி சாரின் மாஸ்டர் பீஸ் அல்ல. இருந்தாலும் தவற விட கூடாத படைப்பு.
                 
RATING      : 5 .8  / 10 .0

EXTRA  பிட்டுகள் : 

படம் முடிந்ததும், ஆடியோ CD யில் இல்லாத ஒரு பாடல் ரஹ்மான் குரலில் வருகிறது. அது அட்டகாசம்.


இந்த படத்தை கோவை கனகதாரவில் பார்த்தேன்.  அரங்கினுள் நுழைந்தவுடனே ஏ சி யில் கலந்திருக்கும் ஒரு  PERFUME வாசமும், உள் கட்டமைப்பும் சூப்பர்.


Comments

 1. நல்ல தெளிவான, தேவையான விமர்சனம். படத்தை முழுமையாக ஊடுருவி உள்வாங்கி எழுதியிருக்கிறீர்கள்

  ReplyDelete
 2. நல்ல விமர்சனம் மனோ, மற்றப் பதிவர்கள் இப்ப ராவணனுக்கு டின் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் மணியோட உழைப்பும் விக்ரமோட ஒத்துழைப்பும் சந்தோஷ் மற்றும் ரகுமானோட பங்களிப்பும் அசாத்தியம்

  ReplyDelete
 3. அப்புறம் வசனங்கள், சுஹாசினி அவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் அல்லது வசனங்களை எளிமையாக்கியிருக்கலாம். சுஜாதா அவர்களின் இழப்பு இத்தருணங்களில் நன்றாக புலப்படுகிறது.


  ithai nan vali moligiren mano

  nalla vimarsanap parvai ungaludaiyathu..

  valthugal ..

  ReplyDelete
 4. படம் பார்த்து எழுதியுள்ளீர் என்பது தெரிகிறது? 'புலவன் புலிகேசி'க்கு பெட்டெர்.

  ReplyDelete
 5. உங்க‌ளுடைய‌ விம‌ர்ச‌னம் ந‌ன்றாக‌ இருக்கிறது.

  ReplyDelete
 6. // ஒளிப்பதிவை பொறுத்தவரை இந்த படம் அட்டகாசமான ஒரு விஷுவல் ட்ரீட்.

  படம் பார்க்கும் எல்லோருடைய ஒருமித்த கருத்தும் இதுதான்.

  வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 7. ஒரு தடவை படம் பாக்கலாமுன்னு சொல்லுறீங்க
  அப்படிதானே.?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4