கற்றது களவு - விமர்சனம்


 சில படங்களை  எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி பார்க்கும் போது நிறைய  ஆச்சரியங்களை கொடுப்பதுண்டு. நல்ல ஸ்க்ரிப்டை சரியான முறையில் ப்ரெசென்டேஷன்  செய்யும் போது மிக எளிதாக நம்மை கவர்ந்து விடும். அப்படி  கவர்ந்திருக்கவேண்டிய இந்த  படம் சின்ன சின்ன லாஜிக் மீறல்களிலும், ரசிகர்களின் ரசனை பற்றிய புரிதலில் உள்ள குறைபாட்டிலும் கவர்ந்திழுக்க முடியாமல் போய் விட்டது.

கதா நாயகன் கிருஷ்ணா, தன் ப்ராஜெக்ட் மூலம் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தையும், புகழையும்  வேறொருவன் தட்டிக்கொண்டு செல்ல, அவனை பழி வாங்க துடிப்பவன். கதாநாயகி வேணி, ஏர்  ஹோஸ்டல் பணியில் சேர விரும்பி வீட்டை விட்டு வெளியில் வந்தவள். யதோட்சையான சந்திப்பில் இனையும் இருவரும் பணம் ஈட்டுவதற்காக தேர்ந்தெடுக்கும் வழி களவு. சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் இருவரும் ஒரு கட்டத்தில் அரசியல்வாதி ஒருவரின் ரகசியங்களை திருடி பணம் பறிக்க,  ரகசியம் வெளி வராமல் இருக்கவும், பழி வாங்கவும்  அரசியல்வாதி தன் அதிகார பலத்தால்  என்கவுன்ட்டர் மூலம் இருவரையும் கொல்ல முயற்சித்து துரத்த,  அவரிடம்  இருந்து திருடிய ரகசியத்தை தெரிந்து கொள்ள ஒரு லோக்கல் போலீஸ்  இவ்வுருவரையும் காப்பாற்றி விசாரிக்க, முடிவு என்னவென்பது கிளைமாக்ஸ்.

படத்தின் முதல் ஆச்சரியம் நீரவ்ஷா.   மிக தெளிவான, அட்டகாசமான ஒளிப்பதிவு படம் முழுதும். ஆங்கில படங்களை மிஞ்சும் கேமரா கோணங்களும், லைட்டிங்கும் சபாஷ் போட வைக்கின்றன. ராமேஸ்வரம் சேஸிங் காட்சிகளும், ஒரு சில க்ளோஸ் அப்  காட்சிகளும் உலகத்தரம். படத்தின் முதுகெலும்பாய் விளங்குகிறது இவரது ஒளிப்பதிவு.

இரண்டாவது ஆச்சரியம், கொஞ்சம் வித்தியாசமான கதையும்  அதை  படமாக்கிய விதமும்.  ஆரம்ப கட்ட காட்சிகளில் ஒரு வித சஸ்பென்சொடு பயணம் செய்யும் கதை படத்தை ஒரு ஈர்ப்போடு பார்க்க வைக்கிறது. ஆனால் மோசடி செய்யும் இருவரை பற்றி விசாரிக்கும் இன்வெஸ்ட்டிகேஷன் காட்சிகளை கஞ்சா கருப்பை வைத்து காமெடி செய்ததில் அதுவரை  ஏறிக்கொண்டிருந்த  மொத்த டெம்போவும் தேங்காய் உடைத்தது  போல சிதறி போய் விடுகிறது. அதற்க்கு பிறகு படம் கிளைமாக்ஸ் வரையும் எழுந்திரிக்க  முடியாமல் தடுமாறுகிறது.  இன்வெஸ்ட்டிகேஷன் காட்சிகளை சீரியசாக காட்டியிருந்தால் இந்த படத்திற்கு நிச்சயம் வேறொரு நிறம் கிடைத்திருக்கும்.

மூன்றாவது ஆச்சரியம் சம்பத். லோக்கல் போலீஸ் ஆபீசராக வரும் இவரது உடல் மொழியும், வசன உச்சரிப்பும் அருமை. படத்துக்கு படம் இவரது கிராப் ஏறிக்கொண்டே போகிறது.


அலி பாபாவில் பிரெஞ்ச் பியர்டில் பார்த்த கிருஷ்ணா இதில் மழுங்க மழுங்க ஷேவ் செய்து சற்றே சின்ன பையன் போல இருக்கிறார். சேஸிங் காட்சிகளில் உயிரை கொடுத்து ஓடியிருக்கிறார். மற்றபடி பெரிதாய் வேலை இல்லை. பக்கத்துக்கு  வீட்டு பெண் போல இருந்த விஜய லக்ஷ்மி இதில் படம் முழுதும் மாடர்ன் உடைகளில் வலம் வருகிறார். கீச்சு குரலில் இவர் பேசுவது ரசிக்கும் படி இருக்கிறது.

பாடல்கள் முழுக்க வெஸ்டர்ன் இசையில் ராப் குத்துகளோடு இருப்பதால் எதுவும் மனசில் ஒட்டமறுக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை.

"கற்றது களவு" பாடலில் வரும் கோரியோகிராப்பி  புருவம் உயர்த்துகிறது, வித்தியாசமான மூவ்மென்ட்டுகள்.நல்ல முயற்சி.

படத்தின் ஆரம்ப காட்சிகளிலும், பாடல்களை படமாக்கிய விதத்திலும் கவனிக்க வைத்த இயக்குனர், சீரியஸ் கதையில் தேவையில்லாமல் மொக்கை  காமெடியே புகுத்தி முதல் படத்தில் பாஸ் ஆகும் வாய்ப்பை அநியாயமாக தவற விட்டுள்ளார். இயக்குனரின் அனுபவமின்மை படத்தில் ஏகப்பட்ட கேள்விகளை கேட்க வைக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் தீடிரென தோன்றும்  ஒரு தேவையற்ற பிளாஷ்பேக்கும், ஐட்டம் பாடலும் எரிச்சல் ரகம். இரண்டாவது, கிருஷ்ணா தவறான வழியில் செல்ல சொல்லும் காரணமும் அழுத்தம் இல்லாத ஒன்று.

(+) பிளஸ்

நீரவ் ஷா ஒளிப்பதிவு
ஆரம்பகட்ட சேஸிங் காட்சிகள்
சம்பத் நடிப்பு

(-) மைனஸ்

அநியாய லாஜிக் மீறல்கள்
இயக்கம்
அழுத்தம் அற்ற காட்சிகள்
பாடல்கள் 

VERDICT  : கற்றது களவு, பாதி சமையல். 

RATING     : 3 .9 / 10

EXTRA  பிட்டுகள் :

இந்த படம் ரிலீஸ் ஆனது திருப்பூர் ராம் லட்சுமன் தியேட்டரில். கடைசியாய் இங்கு 100 நாட்கள் ஓடிய படம் "சின்ன தம்பி" அதற்க்கு பிறகு இந்த தியேட்டரில் வந்த எந்த படமும் உருப்படவில்லை. நேற்று இரவு நைட் ஷோவில் ஒரு கூத்து நடந்தது. ஒரு மணி நேரம் படம் ஓடியிருக்கும். தீடிரென கரண்ட் கட்டாகிவிட்டது. ஜெனரேட்டரில் எண்ணெய் இல்லையோ என்னவோ 10 நிமிடம் தியேட்டர்  இருளில் மூழ்க ஒரே களேபரம். ஒரு வழியாய் மின்சாரம் வந்து படத்தை போட்டால்.. அது முதலில் இருந்து ஓடுகிறது. படம் டிஜிட்டல் முறையில் திரையிடப்பட்டதால் அதில் ஏதோ குளறுபடி. பின் மீண்டும் படத்தை நிறுத்தி FORWARD  செய்து ஓட விட்டால் அது இன்டர்வெல் அருகே வந்து நிற்கிறது. நம் ரசிக பெருமக்கள் PROJECTION  ரூமை முற்றுகையிட்டு கொடுத்த காசை திருப்பி தருமாறு சவுண்ட் விட ஒரே கலாட்டா. பாவம் அந்த ஆபரேட்டர். நேற்று ஒரு வழி ஆகி விட்டார்.

Comments

 1. அதுவும் இந்தப் படத்தில் கிருஷ்ணாவும்,விஜயலட்சுமியும் சேர்ந்து நகைக்கடை ஓனரை ஏமாற்றுவது,ஏவிம் ஸ்டூடியோவை விற்பதாகக் காட்டும் காட்சிகளெல்லாம் மிகப் பெரிய காமெடி.படததோட தயாரிப்பாளர் மாதிரியே,படம் பார்ப்பவர்களும் இருப்பார்களென்று டைரக்டர் நினைத்து விட்டாரோ என்னவோ!

  உங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது!

  ReplyDelete
 2. தல, பத்துக்கு 3.9 மார்க்ன்னா, 39%ல்லா. எங்கூருல இது பாஸ் மார்க்கு. ஆ.விகடன்ல 36 எடுததாவே போதும். நான் படத்த பாக்கட்டா வேணாம்மா, இன்னா சொல்ற?

  ReplyDelete
 3. டியர் ஜானகிராமன்,

  அந்த 39 மார்க் நீரவ்ஷா ஒளிப்பதிவுக்காக....உங்களுக்கு அவர் ஒளிப்பதிவு பிடிக்கும் என்றால் பார்க்கலாம்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4