ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க ! - ஒரு பார்வை


தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட்  பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியாசம்.  ஒரு நல்ல நண்பனிடம் யதார்த்தமாய் உரையாடுவதை போன்ற அவரது எழுத்து நடை மனசுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கிறது.

நம் கனவுகள், குறிகோள்கள், உழைப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நம்பிக்கை   எல்லாவற்றிற்கும் பின்னணியில் நம் மனம்தான் அத்தனையையும்   தீர்மானிக்கும் சக்தி என்பதை ரொம்பவும் உளவியல் ரீதியில் அலசாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் இருந்தே எடுத்துகாட்டியிருப்பது சிறப்பு. 

இது அட்வைஸ் செய்கிற புத்தகம் அல்ல. சந்தோஷமான நம் வாழ்கையே ரொம்ப சந்தோஷமாக மாற்றுவதற்கு கோபி கொடுக்கும் சுவாரசியமான சில டிப்ஸ் அவ்வளவே. 

நமக்கு நாமே கேள்வி கேட்டு பதில் சொல்லும்படியான சூழ்நிலைகளை புத்தகம் முழுதிலும் விரவ விட்டுள்ளார். நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள அருமையான வாய்ப்பு இந்த புத்தகம். 

"சந்தோஷம் எதில் இருக்கிறது? 
ரொம்ப சுலபம். 
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் அது இருக்கிறது"

"உங்களை அடுத்தவர் ரசிக்க வேண்டும்,கவனிக்க வேண்டும், உங்கள் சிறப்பியல்புகளை, உங்கள் தனித்துவங்களை அடையாளங்கண்டு பாராட்ட வேண்டும் என்று நீங்கள் ஆசைபடுவது உண்மை என்றால், அதை உங்களில் இருந்து நீங்கள்தான் தொடங்க வேண்டும் "

இது போன்ற பாசிடிவ் எனர்ஜி  எல்லா பக்கங்களிலும் பரவி கிடப்பதால் இந்த புத்தகத்தை படிப்பதே ஒரு பாட்டில் குளுகோஸ் குடிப்பது போல.. படித்து பாருங்கள்.. உங்களுக்குள்ளும் ஒரு உற்சாகம் தொற்றிகொள்வதை உணர்வீர்கள். 

ஆசிரியர் பற்றி.. 

கோபிநாத், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் எல்லோருடைய கவனம் ஈர்த்தவர். கணீர் பேச்சும், தோழமையான அணுகுமுறையும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் வட்டத்தை உண்டாக்கி வைத்திருக்கின்றன. 
2004 ம் ஆண்டு - இந்தியாவின் மிக சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துனராக அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டவர். 
2007  ம் ஆண்டில்  சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், 2008 ம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த பத்து நபர்களுள் ஒருவராகவும் ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
2008 - சிறந்த இளம் இந்தியர் - ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல்

பதிப்பகம் பற்றி.

சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் 
சென்னை. 

விலை : RS 60 /- 

Comments

  1. ஆனந்த விகடனில் எனர்ஜி பக்கங்களில் கோபிநாத் அவர்களின் அருமையான தன்னம்பிக்கை தொடர் வருகிறது

    அவர் எழுத்துக்களை படித்து பார்க்க வேண்டும்

    ReplyDelete
  2. நன்றி ஜில் தன்னி,

    இதை நான் குறிப்பிட நினைத்து மறந்து விட்டேன்.

    மனோ

    ReplyDelete
  3. சிறப்பான நடையில் எழுதியிருக்கிறீர்கள் மனோ.. அருமை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....