அய்யனார் - இசை விமர்சனம்

குத்து பாட்டில் கூட வெஸ்டர்ன் டைப் இசையே மட்டுமே கொடுத்து வந்த தமனுக்கு முதல் பரீட்சை. அய்யனார் வில்லேஜ் சப்ஜெக்ட் என்பதால் இளையராஜாவின் உதவியோடு கொஞ்சம் சமாளித்திருக்கிறார். முதல் பாடலான, "குத்து குத்து" முன் வரிசை ரசிகர்களை ஆட வைக்கும் குத்து எனினும், சரணம், கரகாட்டகாரன் "ஊரு விட்டு ஊரு வந்து" மெட்டில் அட்சரம் பிசகாமல் TRAVEL செய்வதை தமன் கவனித்திருக்கலாம். ஈரத்தில் ஐஸ் கிரீம் குரலில் செவிகளை நனைத்த ரஞ்சித் இதில் பிரியதர்ஷினியுடன் இணைந்து பாடும் "பனியே" ஒரு அழகான ஜில் ஜில் டூயட். பாடல் முழுதும் வரும் வயலின்கள் பீட்டும், ரகசியமான அந்த ரொமான்ஸும் ரொம்ப அழகு. இதிலும் ராஜா சாரின் சாயல் வருவது ஏனோ..? "ஆத்தாடி " தமனின் அடுத்த பட்டாசு. கொஞ்சம் வெஸ்டர்ன் ஸ்டைல் மெட்டும், கிராமிய காதல் வரிகளும் கொண்ட ஒரு பக்கவான காக்டெயில். நவீனின் குரலில் இனி அடிக்கடி F .M களில் கேட்கலாம். ராகுல் நம்பியார் குரலில் வரும் " பச்சை கிளி" குடும்ப உறவுகளின் உன்னதத்தை சொல்லி செல்கிற...