வெடி - விமர்சனம்
சொந்த காசில் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்வதற்க்கும் வெடி படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. காதல் ஒரு மனிதனை எவ்வளவு பைத்தியம் ஆக்கிவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம் பிரபுதேவா. மனிதர், நயன்தாராவிடம் மனதோடு சேர்த்து மூளையையும் பறிகொடுத்து விட்டாரா என்பது தெரியவில்லை. வில்லு, எங்கேயும் காதல் போன்ற உலக வரலாற்று காவியங்களின் வரிசையில் அவரின் அடுத்த படைப்பு வெடி. தெலுங்கு ரசிக கண்மணிகளை பொறுத்த வரை எல்லாமே அவர்களுக்கு மிதமிஞ்சியதாகத்தான் இருக்க வேண்டும் . பிரியாணியில் காரம் அதிகமாக இருப்பதில் தொடங்கி...ஹீரோயிசம், ஆக்ஷன், கவர்ச்சி, காமெடி என எல்லாவற்றிலும் உச்சபட்ச எல்லைகளை தொட்டு பார்க்கும் ரசனைக்காரர்கள் அவர்கள். அதை அப்படியே தமிழ் படுத்தும் போது ரொம்பவே படுத்துகிறது. ஒரு நேர்மையான போலீஸ், அநியாயம் செய்யும் வில்லன், அவனின் ரௌடி மகன்,அவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், இடையில் பாடல்களை நகர...