எங்கேயும் எப்போதும் - விமர்சனம்தினசரிகளில் வாகன விபத்து செய்திகளை படிக்கும் போது பலி  எண்ணிக்கையே பொருத்துதான்  நம் கவன ஈர்ப்பு சற்றே ஏறி  இறங்கும். இறந்தவர்களுக்காக பரிதாபப்பட்டு வருந்தும் சில நிமிடங்களை  எல்லாம் தொலைத்து அவரவர் அலுவல்களுக்காக விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் மனித மெஷின்கள் நாம். விபத்தின் அதிர்வுகளை   பங்கு சந்தையின் அன்றைய நிலவரம் போல மற்றுமொரு செய்தியாக பாவிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டோம்.   நமக்கு நேராதவரை விபத்து என்பது நம்மை காற்று போல கடந்து சென்றுவிடும்  சிறு  செய்தி  அவ்வளவே....  அந்த  விபத்துக்குபின்னால் பறி போன மனித உயிர்களின் மதிப்போ... அவர்கள் தொலைத்த கனவுகளின் வலியோ...  நம்மில்  எத்தனை  பேருக்கு   பாதிப்பை  ஏற்படுத்துகிறது? செல்லுலாயிட் கதை என்றாலும் நிஜம் போல கூர்மையாய் மனசுக்குள் இறங்கி பாதிக்க வைக்கிறது எங்கேயும் எப்போதும். 


 ஒரு இயக்குனராக, முதல் நாளே படம் பார்க்க வேண்டும் என்கின்ற விருப்பத்தை தரும்  முருகதாஸ் தனது தயாரிப்பில் வரும் படத்தையும் முதல் நாளே பார்க்கலாம் என்கின்ற நம்பிக்கையே  பலமாக  கொடுத்திருக்கிறார்.    தொடரட்டும் அவரின் இது போலான நல்ல முயற்சிகள். 


எல்லோருக்கும்... எங்கேயும்.... எப்போதும்.... சங்கீதம்... சந்தோசம்...எல்லாமே காதல்தானே...? காதல்,   மனித மனங்களின் ஆதார ஸ்ருதி... இரு வகையான ராகங்களில் அந்த காதலின் உணர்வுகளை ஒரு பஸ் விபத்தின் பின்னணியில்      நுட்பமாக இசைத்திருக்கிறார்  அறிமுக இயக்குனர் சரவணன்.


ரொம்ப நாளைக்கு பிறகு, ஒரு படத்தின் அத்தனை காட்சிகளும் பொருட்காட்சியில் ராட்டினம் பார்த்த குழந்தையே போல உடனே  ஈர்க்கும் ரகம் படத்தின் முதல் பலம்.  நான்  லீனியர்,  பிளாஷ் பேக்கிற்குள்   ஒரு பிளாஷ் பேக் என கதை சிக்கலான சாலையில் பயணம் செய்ததாலும், சராசரி தமிழ் ரசிகனை தலை சுற்ற வைக்காமல்  கதையோடு அழகாய் பயணப்பட வைக்கும் திரைக்கதை படத்திற்க்கான  முக்கிய  எரிபொருள்.  


சரவ் - அனன்யா, ஜெய் - அஞ்சலி  என இரு ஜோடிகள். முன்னது மென்மையான இளநீர் சுவை  என்றால்... பின்னது வெடித்து தெறிக்கும் ஜிகர்தண்டா.   சென்னையின்  அசுர வேக  பரபரப்பையும் , ஹை-டெக்   கலாச்சாரத்தையும்  ஒரு பூச்சாண்டி  போல   பார்த்து மிரளும் கிராமத்து குழந்தை அனன்யா... கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு உதவிடும் சரவ் மேல் உண்டாகும்  ஈர்ப்பை ... அன்பை.... காதலை.... அந்த ஒரே ஒரு நாள் நிகழ்வுகள் மூலம் அவ்வளவு அழகாய் கவிதைபடுத்தியிருக்கிறார்கள்.


பாரதி கண்ட புதுமைபெண்ணாய் அஞ்சலி. தன்னை காதலிக்கும் ஜெய் யை ஹட்ச் நாய்க்குட்டி போல தான் சொன்ன இடங்களுக்கெல்லாம் அலைய வைப்பதாகட்டும், காதலை ஏற்றுக்கொள்வதற்கு முன் சந்திக்க நேரும் பிரச்சனைகளை பட்டியலிட்டு தயார் படுத்துவதாகட்டும் கிடைத்த இடத்தில் எல்லாம் வசன உச்சரிப்புகளிலும், உடல் மொழியாலும், சிக்சர் அடிக்கிறார். 

கர்சீப் மட்டும் கட்டிக்கொண்டு உடல் பிரதேசங்களை விருந்து வைக்கும் ஹீரோயின்களை விட இப்படிப்பட்ட தீர்க்கமான, தைரியசாலியான கதா பாத்திரங்கள்தான் ஆண்களை ஈர்க்கும் என்கின்ற உண்மை எப்போது மற்ற இயக்குனர்களுக்கு தோன்றும்.... தெரியவில்லை.  


ஜெய், அஞ்சலியின்  சரவெடிகளுக்கு  பம்மி  பதுங்கும் சிறுவனாகியிருக்கிறார். விடுங்க பிரதர் நாமாக இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெய்யின் பங்களிப்பு மிக நன்றாக வந்திருக்கும் படம் இது. 


நேருக்கு  நேர்  மோதிக்கொள்ளும்   இரண்டு பஸ்களின் இடையே நாமும் சிக்கிக்கொண்டதை போன்ற பதைபதைப்பை அப்படியே தந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் கேமரா. அது போலவே,  சென்னையின் அழகை.... அதன் இயல்பை அப்படியே   கொடுத்திருக்கும் கோவிந்தா பாடலில் இவரின் உழைப்பு சிறப்பு.


நாம் நேசிக்கும் மனிதர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது  என்கின்ற பரிதவிப்பையும், பயத்தையும் இறுதிகாட்சியில்  நம்முள் விதைத்துவிடும் இயக்குனரின் சாமர்த்தியத்திற்கு உறுதுணையாய் இருக்கிறது கிஷோரின் எடிட்டிங்.


சத்யாவின் பின்னணி இசை பாடல்களை காட்டிலும் அதிகம் ஸ்கோர் செய்கிறது. இசையையும், குரல் இனிமையையும் மீறி நேரடியாக மனசுக்குள் வந்தமர்ந்து கொள்ளும் நா. முத்துகுமாரின் வரிகள் இந்த  படத்தின் ஸ்பெஷல் ஸ்வீட் ட்ரீட்.


இந்த இரு ஜோடிகளை பற்றி மட்டுமல்லாது, பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் (ஒரு கல்லூரி ஜோடி, புதுமண தம்பதி, துபாயில் இருந்து வீடு திரும்பும் பாசமுள்ள அப்பா ) முக்கியத்துவம் கொடுத்த விதத்தில் தனித்து தெரிகிறார் இயக்குனர்.  

சரவ், சென்னை மனிதர்களை பற்றி அனன்யா உறவிடம் சொல்லும் போதும், அனன்யா அதே உறவிடம் தன் காதலை பற்றி சொல்லுமிடத்திலும் வரும்  ஜீவனுள்ள  வசனங்கள் நம்மையும் அறியாமல் கை தட்ட வைத்ததிலும்,
ஒரு பாடலை தவிர மற்ற அனைத்தையும் மாண்டேஜ் பூக்களாக தொடுத்த விதத்திலும், மிக எளிதான கதையில் வலிமையான தாக்கத்தை பார்வையாளனுக்கு    கொடுத்ததிலும் அறிமுக ஆட்டத்திலேயே MAN OF THE FILM விருதை பெறுகிறார் இயக்குனர் சரவணன்.


பிளஸ் (+)

திரைக்கதை
இயக்கம்
வசனங்கள்
கதாபாத்திரங்கள்
ஒளிப்பதிவு
எடிட்டிங்


மைனஸ்(-)

இதை மைனஸ் என்று சொல்வதா என்பதே தெரியவில்லை. இரு ஜோடிகளின் காதலும் அவ்வளவு சுவாரசியமாக செல்லும் போதே தீடிர் தீடிர் என முடித்து விடுவது இன்னும் கொஞ்சம் தொடராதா என ஏங்க வைக்கிறது.


VERDICT : மிதமான வேகம்தான் --- ஆனால் மிக நன்று.
RATING   : 5.7/10.0


EXTRA பிட்டுகள்

இதுவரை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன், உதயம் தியேட்டர் வாசலில் ப்ளாக்கில் டிக்கெட் விற்பதை. தியேட்டர் ஊழியர்களே இந்த செயலில் ஈடுபடுவதை பார்க்கும் போது மகா எரிச்சலாகிவிட்டது.

அடையார் கணபதி ராமில், 60 ரூபாய்க்கு  பால்கனியே  கொடுத்தார்கள். படம் பார்க்கவும், DTS  சவுண்டும்   மிக  நன்றாகவே  இருக்கிறது .


கிண்டியிலிருந்து அடையாறுக்கு அவ்வளவு ட்ராபிக் மத்தியில் பதினைந்து நிமிடத்திருக்கும் குறைவாக பைக்கில் சென்று சேர்ந்த நான்... படம் பார்த்து, அந்த அதிர்வில் திரும்பி வர, அத்தனை காலியான சாலையிலும் அரைமணி நேரத்திற்கும் மேல் எடுத்துக்கொண்டேன். அந்த படத்தில் பார்த்த விபத்து ஏற்படுத்திய அதிர்வில், த்ராட்டிலை முப்பதிற்கு மேல் முறுக்க முடியவில்லை. அத்தனை நாள் பைக்கில் என்னோடு பயணம் செய்த என் கர்வம், பெருமை, வேகமாக  பறக்கும் ஆர்வம் எல்லாமும் நேற்று பெய்த மழையோடு மொத்தமாய் கரைந்து போனது.  வாகனம் ஓட்டும் போது ஏற்படும் அலட்சியமும், அசுர வேகமும் நமக்கு ஒரு புதிய விதியே எழுதும் என்பது இப்படம் உணர்த்தும் செய்தி.

Comments

 1. அருமையான படத்திற்கு அழகான விமர்சனம்.

  //அத்தனை நாள் பைக்கில் என்னோடு பயணம் செய்த என் கர்வம், பெருமை, வேகமாக பறக்கும் ஆர்வம் எல்லாமும் நேற்று பெய்த மழையோடு மொத்தமாய் கரைந்து போனது. வாகனம் ஓட்டும் போது ஏற்படும் அலட்சியமும், அசுர வேகமும் நமக்கு ஒரு புதிய விதியே எழுதும் என்பது இப்படம் உணர்த்தும் செய்தி.//

  படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. தம்பி மனோகர் ,
  என்ன ஆச்சு உனக்கு , ஐஸ் மாதிரி உருகிடாய படம் பார்த்து ...வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 3. 5.7 மதிப்பெண்கள் கொடுத்திருக்கீங்க. கட்டாயம் பார்க்கணும். எங்க ஊரில் (துபாய்) வருமான்னு தெரியலை!

  ReplyDelete
 4. nice review mano.. இன்னைக்கு போறேன் .. kg பாக்குறேன் ..

  ReplyDelete
 5. hellooooo anna.... hmmm merattureengaaaaa..........

  ReplyDelete
 6. HAI DUBAI RAJA,


  THANKS FOR YOUR COMMENTS.

  ReplyDelete
 7. HAI THANGAMANI,

  THANKS FOR YOUR COMMENTS

  ReplyDelete
 8. HAI GOKUL, PONSIVA & SANTHOSH

  THANKS FOR YOUR SWEET COMMENTS

  ReplyDelete
 9. HAI SHANKAR SIR,

  VERY HAPPY TO HEAR THE COMMENT FROM YOU.


  THANKS, THANKS A LOT.

  ReplyDelete
 10. விமர்சனம் அருமை!

  ReplyDelete
 11. நல்ல படம், நல்ல விமர்சனம். நண்பா! வருடம் 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கும் சாலைவிபத்துக்கள் குறித்த சமூக அக்கறையோடு வந்திருக்கும் நல்லபடம் இது. இன்னும் நிறைய பதிவுகள் விளம்பரங்கள் விதிமுறைகள் வேண்டும். ஒரு நிமிட விபத்து, ஒரு தலைமுறையையே பாதித்ததை நேரடியா அனுபவித்தவன் நான்.

  ReplyDelete
 12. அருமையான விமர்சனம். குறிப்பாக கடைசி பாரா. படம் பார்த்த உடன் மட்டுமல்லாது எப்போதும் சாலையில் நிதானத்தை கடி பிடியுங்கள்

  ReplyDelete
 13. விமர்சனம் விளக்கமா அழகா இருக்கு.. படம் பார்ப்போம்..

  ReplyDelete
 14. @ MR.MOHAN,
  @ MR.MURALIKUMAR PADMANATHAN,
  @ MR.MOHAN KUMAR,
  @ MR.RIYAS,


  THANKS FOR YOUR SWEET COMMENTS.


  MANO

  ReplyDelete
 15. //கர்சீப் மட்டும் கட்டிக்கொண்டு உடல் பிரதேசங்களை விருந்து வைக்கும் ஹீரோயின்களை விட இப்படிப்பட்ட தீர்க்கமான, தைரியசாலியான கதா பாத்திரங்கள்தான் ஆண்களை ஈர்க்கும் என்கின்ற உண்மை எப்போது மற்ற இயக்குனர்களுக்கு தோன்றும்.... தெரியவில்லை. //

  சபாஷ்....சுத்தியடி வரிகள்.

  மிக அற்ப்புதமாக படத்தை விமர்சனம் செய்துள்ளீர்கள்.
  வாழ்த்துக்கள்.
  நானும் இப்படத்திற்க்கு எழுதி உள்ளேன்.
  வருகை தாருங்கள்.
  விரும்பி அழைக்கும்,
  உலகசினிமாரசிகன்.

  ReplyDelete
 16. நல்ல விமர்சனம் ... இதே படத்திற்கான என் விமர்சனத்தை வந்து படிக்குமாறு அழைக்கிறேன் ...

  ReplyDelete
 17. நல்ல விமர்சனம்..வாழ்த்துகள்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4