வெடி - விமர்சனம்



சொந்த காசில் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்வதற்க்கும் வெடி படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.  


காதல் ஒரு மனிதனை எவ்வளவு  பைத்தியம் ஆக்கிவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம் பிரபுதேவா. மனிதர், நயன்தாராவிடம் மனதோடு சேர்த்து மூளையையும் பறிகொடுத்து விட்டாரா என்பது தெரியவில்லை. வில்லு, எங்கேயும் காதல் போன்ற உலக வரலாற்று காவியங்களின்  வரிசையில் அவரின் அடுத்த  படைப்பு  வெடி.




தெலுங்கு   ரசிக கண்மணிகளை  பொறுத்த  வரை  எல்லாமே அவர்களுக்கு  மிதமிஞ்சியதாகத்தான்  இருக்க வேண்டும் .  பிரியாணியில்  காரம்  அதிகமாக  இருப்பதில் தொடங்கி...ஹீரோயிசம், ஆக்ஷன், கவர்ச்சி, காமெடி என எல்லாவற்றிலும் உச்சபட்ச எல்லைகளை தொட்டு பார்க்கும்  ரசனைக்காரர்கள் அவர்கள். அதை அப்படியே தமிழ் படுத்தும் போது ரொம்பவே படுத்துகிறது.


ஒரு நேர்மையான போலீஸ், அநியாயம் செய்யும் வில்லன், அவனின் ரௌடி மகன்,அவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், இடையில்  பாடல்களை நகர்த்த  கவர்ச்சியான ஹீரோயின்  என கீறல்  விழுந்த  அதே  ரெகார்ட். அதில் அண்ணன் தங்கச்சி பாசம் என்கின்ற ஒரு உப ஆலாபனை வேறு கர்ண கடூரமாய் ஒலிக்கிறது.




அவன்  இவனில்  கொஞ்சம்  வித்தியாசம்  காட்டி  கவனிக்க  வைத்த விஷால்... நான் அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்லைங்க என்று இதில் சறுக்கியிருக்கிறார்.  படம் ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் வரை ஏதோ கஷாயம் குடித்தவன் போல முகத்தை படு இறுக்கமாக வைத்து கொண்டு வசனம் பேசுகிறார், சண்டையிடுகிறார்... டூயட் பாடுகிறார்.  விடுங்க  அவரிடம்   இருந்து நாம்  என்ன நடிப்பு நவரசத்தையா எதிர்பார்க்க முடியும்.


வில்லன் வந்து இடுப்பை தொட்டால் கோபப்படும்  ஹீரோயின்... ஹீரோ  வந்து தொட்டதும்  உடனே காதல்  வயப்படுகிறார்.   எந்த  மாதிரி  டெக்னிக்கில் இடுப்பை வளைத்தால் காதல் வரும் என்கின்ற டெக்னாலஜியே இனிவரும் படங்களில் பிரபு தேவா விளக்கினால் பிகர் கிடைக்காமல் கஷ்டப்படும் இளைஞர்கள் பார்த்து,தெளிந்து ஒரு பிகரை   வளைக்க ஏதுவாக  இருக்கும்.




ஒரு படத்தில் ஹீரோயின் மட்டும்தான் லூசாக இருக்க வேண்டும் என்கின்ற கட்டாயமா என்ன...?  ஹீரோயின், ஹீரோயின் குடும்பம், காமெடியன், வில்லன், துணை கதாபாத்திரங்கள்  என எல்லோருமே பாரபட்சமின்றி லூசாக திரிகிறார்கள்.  பத்து  இருபது  பைத்தியங்களுக்கு  மத்தியில்   படம் பார்க்கும் நாமும்  சிக்கிக்கொண்டதை போன்ற ஒரு பீதியே தந்த விதத்தில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.








R.D. ராஜா சேகரின் கேமரா சமீரா ரெட்டியின் முகத்தை விட, அவரது பரந்த மனசை காட்டுவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. சண்டை காட்சிகளில் ஓகே ரகம்.


கையேந்தி பவனில் கூட கணினி மையம் செய்யப்பட்ட இந்த காலத்திலும், வில்லனின் அடியாட்கள் இன்னமும் துப்பாக்கிக்கு மாறாமல் கத்தி, கபடா வகைகளை தூக்கி சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. சாயாஜி ஷிண்டே என்கின்ற நல்ல நடிகனை கத்த மட்டும் வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.



சின்ன கலைவாணர் என்கின்ற பட்டத்தை தயவு செய்து விவேக் திரும்ப கொடுத்துவிடுவது அந்த பட்டத்திற்கு மரியாதை. காமெடி என்கின்ற பெயரில் கடிக்கிறார்.


போக்கிரி, தூள் போன்ற மசாலா படங்களில்  பரபரவென வெடித்து கிளம்பும் திரைக்கதையும், அடுத்து என்ன நடக்கும் என்கின்ற பதை பதைப்பும் சுவாரசியமாக படம் பார்க்க வைத்தது. ஆனால் வெடியில் அடுத்த சீன் என்ன என்பதை  புதிதாய் சினிமா பார்க்கும் குழந்தை கூட யூகித்து விடுவதுதான் படத்தின் முக்கிய மைனஸ்.



இந்த கதை A சென்டருக்கு மட்டும்தான் பிடிக்கும் , இந்த  கதை  C சென்டரில்  வொர்க் அவுட் ஆகும்  என்கின்ற காலம்  எல்லாம் மலை  ஏறி  போச்.... முன்வரிசை பின் வரிசை என்கின்ற பாகுபாடின்றி,  தினசரி வாழ்வியல் நிகழ்வுகளை அதன் யதார்த்தம் மாறாமல் கொடுக்கும்  நல்ல படைப்புகளை ரசிக்கும் பக்குவத்திற்கு தமிழ் ரசிகர்களின் ரசனை வந்து  விட்டது என்பதை  மசாலா பட இயக்குனர்கள் உணராத  வரை இப்படிப்பட்ட  தண்டனைகள்  தொடர்ந்து  கொண்டுதான் இருக்கும்.



(+) பிளஸ் 

இப்படி மழை அடித்தால் பாடல்..
இரண்டாம் பாதி சுவாரசியங்கள்..


(-) மைனஸ்

யுகிக்க முடிகிற திரைக்கதை
லாஜிக் ஓட்டைகள்
காமெடி
புளித்த மாவு கதை 


VERDICT : நமுத்து போன வெடி
RATING  : 3.4/10


EXTRA பிட்டுகள் 


காசி.. பால்கனி. பக்கத்துக்கு சீட் இளைஞர்கள் இருவர் பெப்சி பாட்டிலில் கலந்த சரக்கோடு சந்தோஷமாக படம் பார்க்க ஆரம்பித்தார்கள்.... படம் ஆரம்பித்து இருபது நிமிட மொக்கையில் அடித்த சரக்கெல்லாம் தெளிந்து போய் மலங்க மலங்க விழித்த அவர்களை பார்க்க ரொம்ப பரிதாபமாக இருந்தது.

இவர்கள் இப்படி என்றால், பின் சீட்டில் மூன்று பேர், விஷாலின் அதி தீவிர ரசிகர்கள்... ரசிகர் மன்றத்தின் நல்ல பதவியில்  இருப்பவர்கள் போல.   படத்தின் காலை காட்சி பார்த்து விட்டு, இரவு காட்சியில் அடுத்து வரும் காட்சிகளை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தது இரண்டாம் உலகப்போர் கொடுமை.


---------------------------------------------

டிஸ்கி - தமிழ் 10 , யுடான்ஸ், இன்ட்லியில் ஓட்டு போட உங்களுக்கு 18  வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தாலே போதுமானது. SO... VOTE PLEASE... IF YOU LIKE THIS.....



Comments

  1. நல்லா சொன்னீங்க, கண்டிப்பா இந்தப் படத்தை திருட்டி விசிடியில் கூட பார்க்க மாட்டேன் :)

    ReplyDelete
  2. இந்த அருமையான விமர்சனத்திற்கு காரணமான அந்த அற்புத காவியத்தை கண்டிப்பாக காணவேண்டும் என்றொரு விபரீதமான பேராவல் என் மனதில்.... :))

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  4. தங்கமணிOctober 3, 2011 at 10:12 AM

    மனோ ,
    பெப்சில சரக்க கலந்து குடிச்ச பசங்க நீங்க தானே.

    ReplyDelete
  5. HAI GOKUL...

    THANKS FOR YOUR COMMENTS.

    ReplyDelete
  6. hai dhubai raja...


    dont take too much of risk...


    thanks for your comments.

    ReplyDelete
  7. thanks vichu... thanks for your comments.

    ReplyDelete
  8. dai thanga...


    we are babies... we dont know about drinks

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....