யுவனின் அசத்தல் இசை - "பேசு" - இசை விமர்சனம்.



F.M. என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. நல்ல இசைக்கு நடுவே தேவையற்ற விளம்பரங்களும், அரட்டைகளும் நிரம்பி வழியும் இடியட்  பாக்ஸ் அது. ஆனால் அதே F.M. யுவனின் அற்புதமான இசையே எனக்கு அறிமுகபடுத்தி வைத்தது... தேங்க்ஸ் FM . 

யதோட்சையாக FM  கேட்க நேர்ந்த போது, "I HAVE A DREAM" என யுவன் உருகிக்கொண்டிருந்தார்.   என்னடா இது...மனுஷன் சொந்த குரலில் இனிமேல் பாடமாட்டேன் என்றாரே...இதுவரை கேட்டறியாத புது பாடலாக இருக்கிறதே என தோண்டி துருவியதில்.. யுவனின் லேட்டஸ்ட் ஆல்பம் "பேசு".
இப்படி ஒரு படம் வரவிருக்கிறது  என்று  இதுவரை எந்த தகவலுமே இல்லை. ஆனால் பாடல்களை தரவிறக்கம் செய்து கேட்டதில் எல்லாமே... அட்டகாசமாக அதுவும் காதல் பாடல்களாக இருக்கிறது. 

முதல் பாடலான " I HAVE A DREAM" ஆல்பத்தின் மோஸ்ட் வாண்டட் சாங். யுவனின் குரலில் காதல் ஐஸ் கிரீம். மெட்டும் அற்புதமாக இருக்கிறது. 

ஆல்பத்தின் அடுத்த காதல் ஐஸ் கிரீம், ராகுல் நம்பியார், ரீட்டா  குரல்களில் "இதயம் பேசுதே" மென்மையான மெலடி... அதிலும் இடையில் வரும் அந்த பெண்ணின் ஹம்மிங் உங்கள் இதயம் கரைத்து அப்படியே உருக்கி விடும். 
கோரிஷ், ராஜலக்ஷ்மி குரல்களில்  வரும் "உந்தன் வார்த்தையில்" பாடல் ஏற்கனவே கேட்டது போல இருந்தாலும் பாடலின் ஆர்கெஸ்ட்ரேஷன் பிரமாதமான ஒன்று. உற்சாகமான இசை கருவிகளை தேர்ந்தேடுப்பதில் யுவன் யுவன்தான். 

"என் பேர் தேவதை" ஹரிசரண்,ரோஷினி குரல்களில் ஆர்ப்பாட்டமில்லாத அழகான டூயட். பாடலின் வரிகள் ரொம்பவும் வசீகரிக்கின்றன. 
  விஜய் யேசுதாஸ், பிரியா  பாடியிருக்கும் "கெட்டிமேளம்" பாடல் கேட்க கேட்க பிடிக்கக்கூடிய ஒன்று. 
ஒரு வெயில் காயும் தினத்தில், தீடிரென பெய்து குளிர்விக்கும் மழை போல.. இந்த ஆல்பம் இசை பிரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்  மழை. 
RATING : 2.6 /5.0.
SONGS CAN LISTEN : 
I HAVE A DREAM 
உந்தன் வார்த்தையில்..


Comments

  1. என்ன பாஸ் இதெல்லாம் மறந்திட்டிங்கலோனு நினைச்சேன்,ஆல்பம் ரிலீஸ் ஆகி கிட்ட தட்ட ரெண்டு வாரமாகுது.
    என்னோட favorite - இதயம் பேசுதே.
    -அருண்-

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....