யுத்தம் செய் - விமர்சனம்காட்சி அனுபவத்திற்கும், வாசிப்பு அனுபவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. காட்சி அனுபவத்தை விட வாசிப்பு அனுபவம் விசாலமானது... எல்லைகள் அற்ற கற்பனை உலகில் வாசகன் மிக எளிதாக பறக்க முடியும்.ஆனால் இங்கு,   மிஷ்கின் ஒரு சுவாரசியமான நாவல்  வாசிக்கும் அனுபவத்தை காட்சி ரீதியாக கொடுத்திருக்கிறார். FANTASTIC . 

 தமிழ் சினிமா, ஏகப்பட்ட  கிரைம்  த்ரில்லர் வகையறாக்களை கொடுத்திருந்தாலும், இந்த அனுபவம் கொஞ்சம் புதிதானது... மிக மெதுவாய் தொடங்கி... கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்வத்தை தூண்டி... இறுதியில் நம்மையும் வெறித்தனமாய் தேடவைக்கும் வேட்டைதான் யுத்தம் செய்.

போலீஸ்காரர்களை பற்றி எத்தனையோ  விமர்சனங்கள் இருந்தாலும், அனுதினமும் இறந்த உடல்கள் முகத்தில் முழித்து, அதன் பிரச்சனைகளோடு  குடும்பம் நடத்தும் அவர்கள் வாழ்வும் சில சமயங்களில் பரிதாபத்திற்க்குரிய  ஒன்றே....   நகரில் தொடர்ச்சியாக... வெட்டப்பட்ட கைகள் அடங்கிய பார்சல் பெட்டி முக்கியமான இடங்களை அலங்கரிக்க... வெட்டப்பட்டவர்களையும்... வெட்டியவர்களையும் தேடும் பொறுப்பு CB CID  சேரன் வசம்.. தன் தங்கை ஒரு மழை நாளில் காணாமல் போக.. அவளை கண்டறிய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் சேரனுக்கு... இந்த கேஸ் ஒரு சுமைதான் என்றாலும்... தன் தங்கை தொலைந்துபோனதற்கும்  இந்த வழக்கிற்கும் சம்மந்தம் இருப்பதை அறிந்தவுடன்... பரபரப்பாவது.... சேரன் மட்டுமல்ல... நாமும்தான். குற்றவாளிகளை தேடி.. சிலந்தி வலை போல... மெல்லிய பின்னல்கள் இணைய தொடங்க ...  இறுதியில் குற்றங்களின் வேர்  வேறொரு அதிர்ச்சியூட்டும் பின்னணியில் முடிகிறது. 

ரொம்பவும்  யதார்த்தமான போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள்... விசாரணை துருவல்கள்.....  அரசு இயந்திரங்களின் ஆதார நடவடிக்கைகள்,  தடயங்களை கண்டறியும் போலீஸ் மூளை, என ரொம்பவும் பிரெஷ்ஷான காட்சிகள், காண்பது சினிமா அல்ல நிஜம் என நம்பும் அளவிற்கு ஒரு பிம்பத்தை  கொடுத்திருப்பது இந்த படத்தின் பலம். முக்கியமாக பிணவறை காட்சிகளில்  உள்ள டீடெய்லிங் பிரமிப்பு. 

சேரனின் அழுமூஞ்சி . தங்கையே தொலைத்த போலீஸ்காரன் கேரக்டருக்கு  நன்றாக பொருந்துகிறது. அலட்டல் இல்லாத,   குற்றவாளிகளை தேடும்  அவரது பயணம் ரொம்பவும் இம்ப்ப்ரசிவ். இதற்க்கான கிரெடிட் நிச்சயம் இயக்குனர்க்குதான்.  


சேரனை விட... எதிர்பார்க்காத மிக அழுத்தமான கேரக்டர், அழகான பொம்மை அம்மாவாக மற்ற படங்களில் வளைய வரும் லட்சுமிக்குதான். நிச்சயம் இந்தப்படம் அவருக்கு வேறொரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. பல இடங்களில்... முக பாவங்களில் வெளுத்து கட்டியிருக்கிறார்.

படம் வருவதற்கு முன்பாக.. MEMORIES OF MURDER கதையே  உருவியிருக்கிறார் என கதை விட்டவர்களுக்கு எல்லாம் அழுத்தமான கொட்டு கொடுத்து மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மிஷ்கின். அவரது வழக்கமான லென்தி ஷாட்டுகள்.. மஞ்சள் சேலை குத்துபாட்டு, குறைவான வசனங்கள், அலைபாயும் கால்கள் என  ரீபிட் ஆனாலும்   ரசிக்க வைக்கிற அவரின் திரைக்கதை சாமர்த்தியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. முக்கியமாக இடைவேளைக்கு முன்பான அந்த சண்டை காட்சி... மிக மிக நுணுக்கமாக... யதார்த்தம் மீறாமல்.... கவிதை படுத்தியிருக்கிறார். அதுவரை,  தியேட்டரில்   சேரனை நக்கல் விட்டவர்கள் கூட  கைதட்டி விசிலடிக்கிறார்கள்.  அதே போல.. ஒரு போலீஸ் காரரே தர்பூசணி பழம் திருடும் அந்த காட்சி.. நிச்சயம் டைரக்டர் டச். 

இசையும், ஒளிப்பதிவும் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த ஆவணம். டைட்டிலில் இருவரது பெயரும் போடாமலேயே... படம் முழுதும் அவர்களை பற்றி நினைக்க  வைத்திருப்பதில் இருவரின் திறமை பளிச்சிடுகிறது. 

மிக சிறந்த பின்னணிஇசை... படத்தோடு நம்மை ஒன்றவைப்பதில்  வெற்றி கண்டிருக்கிறது. குறிப்பாய்... வெட்டப்பட்ட கைகள் அடங்கிய பெட்டிகளை காட்டும் போது தடால் புடால் என அதிரவைக்காமல்..... சோகமான வயலின்களை  இசைக்க வைத்திருப்பது சூப்பர்.  இசையமைப்பாளர் 'கே' விற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். 

நேர் வகிடு எடுத்து சீவிய முற்பாதி திரைக்கதை, பிற்பாதியில் கச முசாவென கலைந்து போவது ஏமாற்றம். இடைவேளைக்கு பிறகு வருகிற காட்சிகள் அனைத்தையும் யூகிக்க முடிவதால், பிரிட்ஜ்க்குள் வைத்து பாதுகாத்த முற்பாதி த்ரில்லிங்... பிரிட்ஜில் இருந்து  வெளியே  எடுத்த பனிக்கட்டி போல பிற்பாதியில் உருகி விடுகிறது. 

படம் பார்க்காதவர்கள்.... படம் பார்க்க விரும்புபவர்கள் .. இந்த பத்தியே தவிர்ப்பது நலம். எப்போதும் யதார்த்ததோடு கதை செய்யும் மிஷ்கின் இதில்  கொஞ்சம் ஜெர்க் அடித்திருக்கிறார். சேரனின் தங்கையே...கடைசி வரை வில்லன் குரூப் சாப்பாடு போட்டு பாதுகாப்பது எதற்கு என தெரியவில்லை. அதே போல... கொலையாளி யார் என தெரியாதவரை இருந்த ஒரு பிரமிப்பு... கொலையாளிகளை பற்றி தெரிந்தவுடன்...  சைக்கிளில்  இருந்து பிடுங்கிவிடப்பட்ட காற்று போல புஸ்சென  இறங்கி விடுகிறது. அதற்க்கு காரணம் நல்லவர்கள்... எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள்..   குறிப்பாக பெண்கள் ரொம்பவும் மூர்க்கதனமாக இறங்க மாட்டார்கள் என  நம் எண்ணங்கள் ஆதி காலம் தொட்டே  நம் கலாச்சார உணர்வில் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். அதனால் இந்தபடத்தின் கிளைமாக்ஸ் அஞ்சாதே அளவிற்கு நம் மனதில் நிற்க்காதது வருத்தமே... 

இறுதி தருணங்களில் சிற்சில குறைகள் இருந்தாலும்... கதை சொன்ன விதத்திலும்... அதை காட்சிபடுத்திய விதத்திலும் நிச்சயம் மிஷ்கின் வெற்றி பெற்றிருக்கிறார்.    
(+) பிளஸ் 

திரைக்கதை
மேக்கிங்
வசனங்கள்
பின்னணி இசை.
ஒளிப்பதிவு
முற்பாதி.

(-) மைனஸ்

யூகிக்க முடிகின்ற இரண்டாம் பாதி.
கொஞ்சம் சினிமாத்தனமான  கிளைமாக்ஸ்.
தேவையற்ற குத்து பாட்டு.

VERDICT : WELL MADE THRILLER IN MISHKIN STYLE
RATING  : 5.4 / 10.0


EXTRA பிட்டுகள் 
 இம்முறை படம் பார்த்தது.. பழைய தமிழ் படங்களில் எல்லாம் அடிக்கடி காட்டுவார்களே   உதயம் தியேட்டர்... அங்கேதான். உள்ளே செல்லும் வரை ரொம்பவும் எதிர்பார்ப்புடன் சென்றேன். சந்திரன் தியேட்டர்   உள் நுழைந்ததுமே கொஞ்சம் ஏமாற்றமாக போனது... இவ்வளவு சின்ன ஸ்க்ரீனை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இருக்கை வசதிகள் நன்றாக இருந்தது. முற்பாதி வரை என் அருகில் அமர்ந்து படம் பார்த்த நபர்..பழகிய நண்பரை போல நன்கு அளவாடிக்கொண்டிருந்தார்.  இடைவேளை முடிந்ததும் ஆரம்பித்தது வினை. எதோ வாயில் போட்டு மென்று தன் காலுக்கு கீழேயே  'புளிச்' என துப்பியதும்... எதற்கு இங்கு இப்படி துப்புகிறீர்கள் என கோபத்தில் நான் எகிற.. பின் அவர் எகிற... சனிகிழமை... அதுதான். 

Comments

 1. மனோ நலமா, ரொம்ப நாள் ஆச்சு... படம் பார்ப்போம்....

  ReplyDelete
 2. Film Superb. What a Making..

  Second Half also Nice..

  But Music,Dance & Camera angle are same as "Anjathe"

  ReplyDelete
 3. மிக நல்ல விமர்சனத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்... எனக்கு முதல்பாதி இரண்டாம்பாதியாக படம் பிரிப்பதில் உடன்பாடில்லை. அதன்படி நான் சுவாரசியமாகவே படத்தைப் பார்த்தேன். அந்த போலிஸ்காரர் ஒரு வசனம் பேசுவார்... உன்னை கொல்லவும் மனசில்லை, வெளிய விடறதுக்கும் முடியலை ஆனா ஒருநாளைக்கு நீ தேவைப்படுவே என்று சொல்வார்,... ஒருவகையில் அது ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் அந்த கும்பல் ஒரு பெண்ணை இப்படி காம நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமல் இருப்பது முரண்பாடாகத் தெரிகிறது. சேரனின் தங்கை என்ப்தால் அப்படியே பழமாகத் தரவேண்டும் என்று மிஷ்கின் நினைத்தாரோ என்னவோ.... தமிழ் சினிமா செண்டிமெண்டுகளில் இதுவும் ஒன்று.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4