கோப்பையும்... கனவும்.....



 "நமக்கு ஒரு அடிமை சிக்கீட்டாண்டா..." என்கின்ற கோஷத்துடன் முதல் போட்டியையே ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கிறார்கள் நம் பசங்கள்... வருடம் முழுதும்  பிரியாணி  தின்றாலும், இரண்டு  வருடத்திற்க்கொருமுறை  வன  பத்ரகாளியம்மன்  கோவிலில் பொங்கல் வைத்து கெடா வெட்டி சுட சுட சாப்பிடும் பிரியாணி போல... எத்தனையோ தொடர்கள் நடந்தாலும் உலகக்கோப்பை தனி விசேஷம்... தனி விருந்து... 

1996 ம் வருட உலகக்கோப்பை... இந்தியாவும்... பங்காளி பாகிஸ்தானும்... இரண்டாம் பாதி ஆட்டத்தில்  அன்வரும்... அமீர் ஷோகைலும் மதம் கொண்ட காட்டெருமைகளை  போல...காட்டுத்தனமாய் விளாசி... கடுப்பை கிளப்ப... அதே ரீதியில் அமீர் கடைசி வரை விளையாடியிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி  அமைந்திருக்கும்... எவன் ஒருவன் ஆணவத்தில்.. தலை  கனத்தில் ஆட ஆரம்பிக்கிறானோ... அப்போதே அவன் அழிவு ஆரம்பமாகிவிடுகிறது... பச்சை புள்ளை கணக்காய் பந்து வீசிகொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாந்தை  தேவையில்லாமல் சீண்ட... அடுத்து வீசிய பந்தில்... ஸ்டம்ப் சிதறி  மொத்த இந்தியாவும் உற்சாகத்தில் எகிறியது... என் காதலி என்னிடம் தன்  காதலை சொல்லிய  நிமிடத்தில் கூட நான் அவ்வளவு  சந்தோஷ கூச்சல் போட்டிருப்பேனா  என்பது சந்தேகமே... உடல் சிலிர்க்க அந்த போட்டியே பார்த்துக்கொண்டிருக்கும் போது தீடிரென பவர் கட். உலகமே இருளானது போல ஒரு பீதி.. செல் போன் இல்லாத அந்த காலத்தில் லேன்ட் லைன் போனை கொண்டு ஏதாவதொரு நம்பரை அடித்து  "ஸ்கோர் சொல்லுங்க ப்ளீஸ்" என கெஞ்சியது இன்னமும் நினைவில் இருக்கிறது... இருப்பு கொள்ளாமல் தவித்து.. நண்பர்களுடன் தெரு முக்கு பிள்ளையார் கோவிலுக்கு சென்று... இந்தியா ஜெய்க்கனும்... தேங்காய் உடைக்கிறேன் என வேண்டிக்கொண்டதெல்லாம்    அழிக்க முடியா கல்வெட்டு.


அந்த உலககோப்பையில் இருந்து இதுவரைக்கும்... கோப்பை என்பது கைக்கு எட்டாத ஒரு சரக்காகவே இருக்கிறது... இடையில் ஒரு முறை FINAL   வரை சென்று ஆஸ்திரேலியா அடித்த அடியில் பஞ்சர் ஆகி நாடு திரும்பியது ஒரு கருப்பு சரித்திரம். 


ஒவ்வொருமுறை உலகக்கோப்பை துவங்கும் போதும் ... வழக்கம் போல இந்தியா ஜெய்க்கும்   என்று எதிர்பார்த்தாலும்  மதில் மேல் பூனை போலத்தான்  இருக்கும் நம் அணியின் செயல்பாடுகள். ஒன்று உலக சாதனை படைத்து ஜெயிப்போம்   . இல்லையேல்  படு கேவலமாய் மண்ணை கவ்வுவோம். அனால் இம்முறை... உள்ளுக்குள் எதோ ஒரு பட்சி சொல்கிறது.. கோப்பை நமக்குதான் என்று....அதற்க்கு கரணம்... போட்டிகள் இம்முறை உள்ளூரில் நடப்பது... ரெண்டாவது... கேப்டன் தோனிக்கு நிச்சயம் அவரது மர்ம ஸ்தானத்தில் நாலணா சைஸ்சுக்கு  மச்சம் இருக்க வேண்டும்... அவரது தலைமையில் எக்குத்தப்பாய்  நம் அணி  வெற்றிகள் குவிப்பது... மூன்றாவது.. முன் எப்போதும் இல்லாததை விட  BATTING  படு பயங்கர பலமாய் இருப்பது. இத்தனை   சாதகங்கள் இருந்தாலும் நம் அணியின் பந்து வீச்சு பல்லை இளிக்கிறது. அதில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கனவு நனவாகலாம். . 


இவை எல்லாவற்றையும் விட கிரிக்கெட் பிதாமகன்   சச்சின் விளையாடும் கடைசி உலகக்கோப்பை இது. நம் பசங்கள் இந்த கோப்பையே அடித்து அவருக்கு பரிசளிப்பதுதான் அவரது கிரிக்கெட் வாழ்விற்கு நாம் செய்யும் மிகபெரிய பிரதியுபகாரமாக    இருக்கும். இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை என்கின்ற  சித்தாந்தத்துடன்  அடித்தால் ஆஸ்திரேலியா என்ன பாகிஸ்தான் என்ன... நாம்தான் தாதா. 

ALL THE BEST MY DEAR INDIA..... 

Comments

  1. ஹலோ மனோ, தங்களின் மனோரதம் ஈடேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. :) ஹ்ம்ம்..பார்க்கலாம்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....