பயணம் - விமர்சனம்


ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். என்னுடைய பயம் விமான பயணத்தில். பூமிக்கும் வானுக்கும் எந்த வித சப்போர்ட் இல்லாமல் அந்தரத்தில் இப்படி பறக்கிறதே... விழுந்து கிழுந்து வைத்தால்... ஒன்றுமே மிஞ்சாதே என்கின்ற பயம். அதுவும் ட்வின் டவர் தாக்குதலுக்கு பிறகு... விமான பயணம் பற்றிய என் பயம் பாம்பை கண்ட எலி போல இன்னும் எகிற ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் அதுவரை நான் ஒரு விமான பயணம் கூட மேற்கொண்டதில்லை. கடைசி வரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும்  பரவாயில்லை என்கின்ற உயர்ந்த எண்ணம் என்னுள் இருந்தது. நம் ஆசை இப்படி இருந்தால் கடவுளின் ஆசை அதற்க்கு எதிராகத்தானே இருக்கும். ஒரு சுபயோக சுபதினத்தில் வலுகட்டாயமாக என்னை ஒரு விமானபயணம் செய்தே ஆகவேண்டும் என்கின்ற நிலைக்கு ஆளாக்கினார். டெல்லியில் இருந்து கோவை வரை நான் மேற்கொண்ட அந்த சாகச பயணத்தை பற்றி தனி பதிவாக போடுகிறேன். அவ்வளவு பயம் கொண்ட எனக்கு, ராதாமோகனின் இந்த விமான 'பயணம்' ஏகத்துக்கும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்து.... நாமும் அந்த விமானத்தில் இருந்திருக்கலாம் என்கின்ற எண்ணத்தையும்  ஏற்படுத்தியது. 

நம் அதிபுத்திசாலிதனத்தை, லாஜிக் பற்றிய நம் ஆழ்கிணறு  தோண்டல்களை தியேட்டர் வாசலிலேயே விட்டு விட்டு ஒரு கிளீன் சீலேட்டாக இந்த படத்தை பார்த்தால்   நிச்சயம் இந்த படம் உங்களை வசீகரிக்கும். ஒரு மனிதனை வாய் விட்டு சிரிக்க வைப்பது அவ்வளவு லேசு பட்ட காரியம் இல்லை...  இவ்வளவு சீரியசான கதையில் அதை செய்துகாட்டியிருப்பதுதான்  ராதாமோகனின் ஸ்பெஷாலிட்டி.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானம், பயணிகளை விடுவிக்க சிறையில் இருக்கும் தீவிரவாத தலைவனை விட சொல்லி  பேரம்... கமாண்டோ ஆபரேஷன் என  ஒன்றரை மணி நேரத்தில் சொல்லிவிட கூடிய ஹாலிவுட் பாணி கதையே இரண்டரை மணி நேரம் சொல்ல வேண்டிய சவால். முக்கால் வாசி படம் விமானத்திற்க்குள் நடப்பது போலான திரைக்கதை. பாடல்களும் கிடையாது. படத்தில் விஜயகாந்தும் இல்லை. பின்பு எப்படி...? இந்த மாதிரி  கதையே இப்படியும் சொல்லலாம் என நிரூபித்த ராதா மோகனுக்கும், அவருக்கு பைனான்ஸ் செய்த பிரகாஷ் ராஜுக்கும் வாழ்த்துக்கள்.     


தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். காமெடி இல்லாமல்  ராதாமோகன் படமே கிடையாது. இந்த படம் மட்டும் அதற்க்கு விதிவிலக்கா என்ன. சீரியஸ் விமான கடத்தல் கதையான இந்த படத்திலும் காமெடி கலந்து பறக்க வைத்திருக்கிறார்.

படத்தின் ஹீரோ நாகார்ஜுனா என்றாலும்,  காமெடி போர்ஷனில் கோல் அடித்து   MEN OF THE FILM விருதை பல பேர் தட்டிச்சென்றிருக்கிறார்கள்.  முக்கியமாக சாம்சும், பிரித்திவி ராஜும் முற்பாதி படத்தை சுமந்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் ஆட்டம் இன்னமும் சூடு பிடிக்கிறது. பிரம்மானந்தம், அசமஞ்சமாக வரும் ரங்கநாதன் கேரக்டர் என கிளைமாக்ஸ் வரை பரபரவென பயணிக்கிறது படம்.

இவ்வளவு நாள், ஹை டெசிபலில் கர்ஜித்து, கடப்பாரையே  தூக்கிக்கொண்டு  வில்லன்களை துரத்திய நாகார்ஜுனாவிற்கு ரொம்பவும் யதார்த்தமான அலட்டல் இல்லாத வேடம்.  கமேண்டோ உடையில் அழகாக பொருந்துகிறார். பாவம், இடை தடவி மழையில் நனைந்தபடி டூயட் பாடத்தான் அவருக்கு ஜோடி இல்லை. என்ன செய்ய... படத்தின் கதை அப்படி.



தன் பாத்திரம் உணர்ந்து நடிப்பில் அண்டர் ப்ளே செய்திருக்கிறார் பிரகாஷ் ராஜ், இவரை போலவே பல கேரக்டர்கள் படத்தில் மிளிர்கிறார்கள். முக்கியமாக விமான பணிப்பெண் விமலாவை பற்றி சொல்லாவிட்டால் இரவு போஜனம் தங்காது. பொன் வைக்கின்ற இடத்தில் பூ வைப்பது போல, ஹீரோயின் இல்லாத குறையே முடிந்தவரை போக்கி மன ஆறுதல் தருகிறார். அவரது கண்களும், கால்களும் சிறப்பாக நடித்திருப்பதை அகில உலக ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நாலு டீஸ்பூன் காமெடிக்கு, ஒரு  டீஸ்பூன் செண்டிமெண்ட், ஒரு  டீஸ்பூன் தேச நலன் என்கிற விகித அளவில் தயாரிக்கப்பட்ட ராதா மோகனின்  திரைகதைக்கு பக்க பலமாக உள்ளது ஞானவேல் அவர்களின் வசனங்கள். விஜி இல்லாத குறையே இவர் போக்கியிருக்கிறார்.  K.V.குகனின் உறுத்தாத  ஒளிப்பதிவும் படத்தின் தரம் உயர உதவியிருக்கிறது.

 இப்போதுதான்,  காலேஜ் அட்மிஷன் வாங்கிய ஸ்டுடன்ட்ஸ் போல இருக்கிறார்கள் விமானத்தை கடத்திய தீவிரவாதிகள். அதே போல... விமானம் கடத்தப்பட்ட  பிறகும் எதோ பிக்னிக் போகும் மூடிலேயே எல்லோரும் இருப்பது ரொம்பவே உறுத்தல். 


முற்பாதியில், STARTING TROUBLE இருந்தாலும், கிளைமாக்சில் எதிர்பார்த்த ட்விஸ்ட்டை இடைவேளையிலேயே  கொடுத்து பரபரப்பாக்கியிருப்பதால், இரண்டாம் பாதி சடாரென  டேக் ஆப் எடுத்து வேகம் பிடிக்கிறது. அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாய் வரும் நகைச்சுவை... பயணத்தை இறுதி வரை ரசிக்க வைக்கிறது.

(+) பிளஸ்
 
காமெடி
வசனங்கள்
திரைக்கதை

(-) மைனஸ் 

தீடிரென முளைக்கும் செண்டிமெண்ட் வஸ்துக்கள்


VERDICT :  பயணம்..... நம்பி போகலாம். 
RATING   :  5.1 / 10.0

EXTRA பிட்டுகள். 

எல்லா தியேட்டரிலும் நடக்கின்ற விஷயம்தான் எனினும், வருத்தத்துடன்  குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. காசி தியேட்டரில், இடைவேளையின்  போது டாய்லட் போகும் வழி நெடுக  புகை விரும்பிகளால் படு பயங்கர புகை மண்டலம். அதற்குள் நுழைந்து   டாய்லட் சென்று திரும்பி வருவதற்குள் மூச்சு முட்டி ஒரு மாதிரி  ஆகி விட்டது.  PASSIVE SMOKING IS VERY BAD THAN ACTIVE SMOKING. புகை பிடிப்பவர்கள் புரிந்து கொண்டு இதை தவிர்க்க முயற்சி செய்யலாமே... இதை புகை பிடிக்கதவர்களுக்காக மட்டும்  சொல்லவில்லை.  அந்த ஒரு சிகரெட்டை அந்த இடத்தில் தவிர்ப்பதன் மூலம் உங்கள் ஆயுளும்  இரண்டொரு நிமிடங்கள் கூடலாம்.  

 

Comments

  1. நல்ல விர்மசனம் மனோ...

    ReplyDelete
  2. விமர்சனம் அருமையாக இருந்தது.
    அதெல்லாம் சரி..

    //RATING : 5.1 / 10.0//

    படம் எப்படியிருந்தால் எட்டு, ஒன்பது மதிப்பெண்களெல்லாம் கிடைக்கும்??

    //விமானம் கடத்தப்பட்ட பிறகும் எதோ பிக்னிக் போகும் மூடிலேயே எல்லோரும் இருப்பது ரொம்பவே உறுத்தல். //

    காந்தகாரில் நடந்த கடத்தல் சம்பவத்திலும் பயணிகள் இதுபோல ஜாலியாக நடந்து கொண்டனர் என பத்திரிகை செய்திகள் வந்தன. தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாலும், மன இறுக்கம் அதிகமாவதன் காரணத்தினாலும் பிக்னிக்குக்கே உண்டான சில வேடிக்கை விஷயங்கள் அந்த நேரத்தில் உண்டாவதை தவிர்க்க இயலாது. ராதாமோகன் அதை அருமையாக பதிவு செய்திருக்கிறார்.

    ReplyDelete
  3. நன்றாக அலசி உள்ளீர்கள். பயணம் எனக்கும் மிக பிடித்தது. சினிமா விமர்சனம் தான் அதிகம் எழுதுவதாக தெரிகிறது. மற்ற விஷயங்களுக்கும் எழுத முயலுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....